"ஒன்னுமே இல்லையாம்.." 2 நாட்கள் நடந்த அமலாக்க துறை சோதனை.. அமைச்சர் துரைமுருகன் தந்த பதில்
சென்னை: திமுக பொதுச்செயலாளரும் மூத்த அமைச்சருமான துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த்திற்கு சொந்தமான பல்வேறு இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. இந்தச் சோதனை நேற்றிரவு தான் முடிந்திருந்தது. இதற்கிடையே அமலாக்கத் துறை சோதனை தொடர்பான கேள்விக்கு துரைமுருகன் சில முக்கிய கருத்துகளைச் சொல்லியிருக்கிறார். இது குறித்து நாம் பார்க்கலாம்.
திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவர் துரைமுருகன். திமுக பொதுச் செயலாளரான துரைமுருகன், இப்போது தமிழ்நாடு அமைச்சரவையில் நீர்ப் பாசனத்துறை அமைச்சராகவும் இருந்து வருகிறார்.

இவரது மகன் கதிர் ஆனந்த், திமுக சார்பில் வேலூரில் லோக்சபா தேர்தலில் வென்று எம்பியாக இருக்கிறார். இதற்கிடையே நேற்று முன்தினம் திடீரென துரைமுருகன், மகன் கதிர் ஆனந்த் மற்றும் அவர்களுடன் நெருக்கமாக இருந்தோருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை ரெய்டு நடத்தினர். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியது.
சோதனையின் பின்னணி
கடந்த 2019 லோக்சபா தேர்தலின் போது தான் கதிர் ஆனந்த் முதல்முறையாக திமுக சார்பில் தேர்தலில் போட்டியிட்டார். வாக்குப்பதிவு சமயத்தில் துரை முருகனுக்கு நெருக்கமான பூஞ்சோலை சீனிவாசன் என்பவருக்குச் சொந்தமான இடத்தில் வருமான வரி துறையினர்சோதனை நடத்தினர். அதில் ரூ.11 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. அது தொடர்புடைய வழக்கிலேயே அமலாக்கத்துறை இன்று சோதனை நடத்தியிருக்கிறது.
தாமதம்:
வேலூர் காட்பாடியில் உள்ள துரைமுருகன், அவரது மகன் கதிர் ஆனந்த் ஆகியோரின் வீட்டிற்கு நேற்று முன்தினம் அதிகாலையிலேயே அமலாக்கத் துறை சென்றுவிட்டனர். சிஆர்பிஎஃப் போலீசாரின் உதவியுடன் சென்ற அமலாக்கத் துறையினர் சோதனையைத் தொடங்க தயாரானார்கள். ஆனால், கதிர் ஆனந்த் வீட்டில் யாரும் இல்லாதது அப்போது தான் தெரிய வந்தது. கதிர் ஆனந்த் குடும்பத்துடன் துபாய் சென்று இருந்ததால்.. ரெய்ட்டை உடனடியாக தொடங்க முடியாமல் போனது.
சுமார் 5 மணி நேரம் வரை அமலாக்கத் துறையினர் காத்திருந்த நிலையில், அதன் பின்னரே ரெய்டு சமயத்தில் யாரெல்லாம் இருக்க வேண்டும் என்பது குறித்த விவரம் அடங்கிய மெயிலை கதிர் ஆனந்த் அனுப்பியிருக்கிறார். அதைத்தொடர்ந்தே சோதனை நடந்தது. 3ம் தேதி தொடங்கிய ரெய்டு நேற்றிரவு தான் முடிந்துள்ளது. அதேபோல கதிர் ஆனந்த்திற்கு சொந்தமான கல்லூரியிலும் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.
துரைமுருகன்:
இந்த ரெய்டில் என்னவெல்லாம் கைப்பற்றப்பட்டன என்பது குறித்த விவரங்கள் அமலாக்க துறை சார்பில் இதுவரை வெளியிடப்படவில்லை. இதற்கிடையே அமைச்சர் துரைமுருகன் தனது பாணியில் பதிலளித்தார். இந்த ரெய்டு தொடர்பாகச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, "வந்தாங்க, ஒன்னும் இல்லனு எழுதிக் கொடுத்துட்டு போய்டாங்க.." என்று தனது ஸ்டைலில் இரண்டே வரியில் பதிலளித்துவிட்டுக் கிளம்பிவிட்டார்.
கத்தி, கடப்பாரை
முன்னதாக நேற்றைய தினம் சோதனையின் போது கதிர் ஆனந்த் வீட்டுக்குக் கடப்பாரை, கத்தி, உளி உள்ளிட்டவை எடுத்துச் செல்லப்பட்டன. அங்கு இரு கதவுகள் மூடப்பட்டு இருந்தன. அதற்கான சாவி அங்கே இல்லை.. உள்ளே ரூமில் எதாவது முக்கியமான பொருட்கள் அல்லது ஆவணங்கள் இருக்கும் என்று சந்தேகித்த அதிகாரிகள், 2 கதவுகளை உடைத்து சோதனை நடத்தியுள்ளனர். கத்தி கடப்பாரை உள்ளிட்ட பொருட்களை வைத்து கதவை உடைத்து அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.
-
தமிழக தேர்தல் வரலாறு: 1984க்கு பின் 2016ல் சாதித்த ஜெ.! திமுகவினர் மீது 3264 நில அபகரிப்பு வழக்குகள் -
எடப்பாடி பழனிச்சாமி சாமர்த்தியம்.. பாஜகவை கண்ட்ரோல் செய்துட்டாரே.. தொகுதி ஒதுக்கீட்டில் ஓங்கிய அதிமுக கை! -
காங்கிரஸை நாயுடன் ஒப்பிட்ட நடிகர் போஸ் வெங்கட்! கைநழுவும் அறந்தாங்கி தொகுதி சீட்? டென்ஷன் -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
2026ல் மீண்டும் ஸ்டாலின் முதல்வர்.. 180+ இடங்களை வெல்லும் திமுக கூட்டணி.. ANS சர்வே முடிவுகள்! -
விஜய்க்கு ஷாக்.. தமிழக வெற்றி கழகத்துக்கு செக்! 10 சதவீதத்துக்கும் கீழே ‘தவெக’ - சறுக்கிய வியூகம்? -
விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை.. புதுவையில் திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பு -
துண்டு துண்டாக உடைகிறதா திமுக ஓட்டு? சென்னை வேளச்சேரி தவெக விஜய் 18% வாக்குகளா? ஷாக் பாயிண்ட் -
2021ல் வென்ற தொகுதிகள் கூட அதிமுகவுக்கு கிடைக்காது.. சென்னையில் இன்னும் மோசம்.. சர்வேயில் அதிர்ச்சி -
திருவாடானை தொகுதியில் களமிறங்கும் திமுக? MLA சீட் ரேஸில் யார்? -
உடையும் திமுக காங்கிரஸ் கூட்டணி? தொகுதிகளை முடிவு செய்வதில் நீடிக்கும் குழப்பம்! புதுச்சேரியில் பரபர











Click it and Unblock the Notifications