இறங்கிய அந்த ஊர் புள்ளிகள்.. எடப்பாடி வீட்டுக்கு நேரா போய் அட்டென்டன்ஸ்.. ஈபிஎஸ் கொடுத்த மெசேஜ்!?
சென்னை : அதிமுக பொதுக்குழுவை நாளை நடத்த தயாராகி வரும் எடப்பாடி பழனிசாமி இன்று தனது வீட்டில், செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், ஜக்கையன் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டார்.
ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனியில் பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்த நிலையில், மேலும் சிலரையும் தன் பக்கம் இழுக்க ஈபிஎஸ் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.
அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான ஜக்கையன் தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமியை இன்று சந்தித்துப் பேசியுள்ளார்.

பொதுக்குழு ஏற்பாடு ரெடி
அதிமுகவில் அதிகாரப் போட்டி உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், நாளை அதிமுக பொதுக்குழு கூட்டத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகளை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் செய்துள்ளனர். இதனிடையே, பொதுக்குழு நடத்த தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் வழக்கு தொடர்ந்தார். ஓபிஎஸ்- ஈபிஎஸ் தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, திங்கட்கிழமை காலை 9 மணிக்கு பொதுக்குழு கூட்டம் தொடர்பாக உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று அறிவித்தார். 11ஆம் தேதி காலை 9.15 மணிக்கு அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில், 9 மணிக்கு பொதுக்குழு தொடர்பாக உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது.

தீவிரம்
தீர்ப்பு வருவது ஒருபுறம் இருக்க பொதுக்குழுவுக்கு தடை விதிக்கப்படாது என்ற நம்பிக்கையில், பொதுக்குழு கூட்டத்திற்கான இறுதி கட்டப் பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர் எடப்பாடி பழனிசாமி தரப்பினர். இதுவரை முக்கால்வாசிக்கும் மேற்பட்ட பணிகள் நிறைவடைந்துள்ளன என்றும் அலங்கார பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைகளை அவரது தரப்பினர் மேற்கொண்டுள்ளனர்.

மா.செக்கள் ஏற்பாடு
தமிழகத்தில் உள்ள கட்சி ரீதியான 75 மாவட்டங்களை சேர்ந்த செயற்குழு உறுப்பினர்கள் அமர்வதற்கான கூடங்களும் தயார் நிலையில் உள்ளன. அவர்கள் கையெழுத்திட ஏதுவாக மேஜைகளும், உணவருந்தும் கூடங்களும் ரெடியாகியுள்ளன. வெளியூர்களில் இருந்து பொதுக்குழு கூட்டத்திற்காக சென்னை வரும் பொதுக்குழு உறுப்பினர்களை அழைத்து வருவதற்கு ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் சென்னைக்கு பேருந்து ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட செயலாளர்கள் செய்துள்ளனர்.

சென்னை வரும் வெளி மாவட்டத்தினர்
வெளி மாவட்டங்களில் உள்ள பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் பொதுக்குழு கூட்டத்திற்கு முந்தைய நாளான இன்றே சென்னைக்கு வந்துவிட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அதன்படி பொதுக்குழு உறுப்பினர்களை அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளில் மாவட்ட செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகள் தீவிரமாக வேலைகளைச் செய்து, தேனி மாவட்டம் உள்ளிட்ட சில மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் சென்னைக்கு வந்துவிட்டனர்.

ஜக்கையன்
தேனி மாவட்டத்தில் உள்ள பொதுக்குழு உறுப்பினர்களை சென்னைக்கு அழைத்து வரும் பொறுப்பு அதிமுக அமைப்புச் செயலாளரும், கம்பம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏவுமான எஸ்.டி.கே.ஜக்கையன் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர் ஓபிஎஸ் தரப்பில் இருந்தே எடப்பாடி பழனிசாமிக்கு ஆட்களை இழுத்து வருகிறார். நேற்று கூட தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 9 பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆதரவு அளித்தனர்.

தேனி மாவட்டம் திரண்டது
தேனி மாவட்டத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமி ஆதரவு பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் சென்னைக்கு வருகை தந்துள்ள எஸ்.டி.கே.ஜக்கையன் இன்று எடப்பாடி பழனிசாமியை சந்திக்க அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அவர்களிடம் எடப்பாடி பழனிசாமி கனிவாகப் பேசியுள்ளார். தேனி மாவட்டத்தில் இருந்து மேலும் பலரையும் நம் பக்கம் கொண்டுவர வேண்டும், அதெல்லாம் உங்கள் பொறுப்பு எனப் பேசியுள்ளதாக கூறப்படுகிறது.

ஆலோசனை
இதைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துப் பேசியுள்ளனர். அவர்களிடம், பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் வந்துவிட்டார்களா எனக் கேட்ட ஈபிஎஸ், அனைவரும் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் பாதுகாப்பாக தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறதா எனப் பார்த்துக்கொள்ளுங்கள் என்றும் கூறியதாகத் தெரிகிறது.
-
கூட்டுறவு கடன் தள்ளுபடி! எடப்பாடி எடுத்த ஸ்மார்ட் முடிவு! வாக்குறுதிக்கு பின்.. இவ்வளவு பிளானிங்கா! -
மொத்தம் 23 வேட்பாளர்கள்.. இந்த 3 பேரை கவனிச்சிங்களா! அதிமுகவில் தொகுதி மாறியவர்கள்! காரணம் இதுதான்! -
எடப்பாடியின் அரசியல் "மெச்சூரிட்டி".. பாஜக, அமமுகவை அடக்கி.. சத்தமே இன்றி சம்பவம் பண்ணிட்டாரே! -
தேர்தலுக்கு முன்பே.. முக்கியமான "வாரில்" தோற்ற விஜய்.. தவெக இப்பவும் சுதாரிக்கலைனா.. போச்சு! -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
நாங்கள் எல்லாம் சிவி சண்முகத்தின் அடிமைகளா? பலிகடா ஆகணுமா? பொங்கி எழுந்த ரத்தத்தின் ரத்தங்கள் -
மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படும்.. 297 அறிவிப்புகள் அடங்கிய அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட எடப்பாடி -
John Pandian: அதிமுக பாஜக கூட்டணியில் ஜான் பாண்டியன் கட்சிக்கு ராஜபாளையம் தொகுதி ஒதுக்கீடு -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
இரட்டை இலை சீட் இந்த முறை குறையுது.. கடந்த தேர்தலில் அதிமுக எத்தனை இடங்களில் போட்டியிட்டது? -
பினாமிகளுக்கு தான் சீட்.. சிவி சண்முகத்திற்கு எதிராக எழுந்த கலக குரல்.. விலகிய அதிமுக நிர்வாகி! -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா?












Click it and Unblock the Notifications