இன்னும் என்னென்ன நடக்குமோ? நேபாளம் துயர் முடிந்ததுமே 2026ல் அடுத்த பேரழிவு? பாபா வங்கா பெயரில் பகீர்
சென்னை: நேபாளத்தில் சமீபத்தில் நடந்த கோரமான வெள்ளப்பெருக்கு மற்றும் பேரழிவுகள் உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளன. இந்த துயரச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து, "உலகம் முழுவதும் பெரும் அழிவுகள் ஏற்படும்" என்று பாபா வங்கா முன்பே கணித்திருந்ததாக சமூக வலைதளங்களில் தகவல்கள் விறுவிறுவென பரவி கொண்டிருக்கின்றன...!!
பல்கேரியாவின் புகழ்பெற்ற பார்வையற்ற தீர்க்கதரிசியான பாபா வங்கா, அமெரிக்காவின் 9/11 தாக்குதல் மற்றும் கொரோனா தொற்று என ஏராளமான வரலாற்று நிகழ்வுகளை துல்லியமாக முன்கூட்டியே கணித்தவர்.. அதனால் இவரது கணிப்புகள் மீது எப்போதுமே சர்வதேச அளவில் ஒருவித மர்மமான எதிர்பார்ப்பு ஏற்படுவது வழக்கம்.

1996ம் வருடமே இவர் இறந்துவிட்ட போதிலும். ஒவ்வொரு வருட முடிவிலும், இவர் கணித்து எழுதி வைத்த கூற்றுகள், இணையத்தில் வெளியாகி பரபரப்பை தந்து விடும். அப்படித்தான், நடப்பு ஆண்டிற்கும் சில குறிப்புகளை பாபா வங்கா கணித்து எழுதிவிட்டு சென்றுவிட்டார்.. அந்த கணிப்புதான் மீண்டும் இப்போது வைரலாகி கொண்டிருக்கிறது.. இதற்கு காரணம், நேபாள கொடுமைதான்.
நேபாள வெள்ளப்பெருக்கு
நேபாளத்தில் சமீபத்தில் நடந்த கோரமான வெள்ளப்பெருக்கு உலகையே அதிர வைத்துள்ளது. "இதுதான் உலக அழிவின் ஆரம்பம்.. இதைத்தான் பாபா வங்கா முன்பே கணித்துச் சொன்னார்" என்று இப்போது சோஷியல் மீடியாவில் தகவல் பரவி வருகிறது.
"இந்த 2026-ம் ஆண்டில், உலகில் 7 முதல் 8 சதவீத இடங்கள் இயற்கை சீற்றங்களால் முற்றிலும் அழிந்துவிடும்.. பயங்கரமான நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு, மோசமான வானிலை என பூமி பெரும் பாதிப்பை சந்திக்கும் என்று பாபா வங்கா கணித்து சொன்னாராம்.. அதற்கு சாட்சிதான் இந்த நேபாள வெள்ளம் என்று சோஷியல் மீடியாவில் தகவல்கள் பரவி வருகின்றன.. அதுமட்டுமில்லாமல், தங்கம் விலையில் நிறைய மாற்றங்கள் நடந்து, நடுத்தர மக்களின் பொருளாதாரமே மோசமாக பாதிக்கப்படும் என்றும் பீதியை கிளப்பி விட்டு வருகிறார்கள்.
இயற்கை பேரிடர்கள் ஒருபக்கம் இருந்தாலும், , எப்போது வேண்டுமானாலும் 3ம் உலகப் போர் வெடிக்கலாம் என்றும் சொல்கிறார்கள். இதனால், உலகளவில் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்படும், பல வங்கிகள் திவாலாகும், பணத்தின் மதிப்பு அதலபாதாளத்திற்கு போகும் என்றும் எச்சரிக்கிறார்கள்...
ஏலியன்கள் முதல்முறை
அதுமட்டுமல்ல, ரஷ்ய அதிபர் புடின் பதவியில் இருந்து விலகுவார், புதிய தலைவர் நாட்டை ஆள்வார், தைவான் மற்றும் தென் சீனக் கடல் பிரச்சனைகளால் உலக அரசியலே போர்க்களமாக மாறும்.
நாம் இப்போது பயன்படுத்தி வரும் AI டெக்னாலஜி, மனிதர்களை முழுமையாக தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து நமக்கு எஜமானனாக மாறிவிடுமாம்.. இதெல்லாம் பத்தாது என்று, விண்வெளி பற்றியும் சில பகீர் வதந்திகள் பரவி வருகின்றன.. இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில், ஒரு பூதாகரமான ஏலியன் விண்கலம் பூமிக்கு வருமாம். அப்போதுதான் மனிதர்கள் முதல்முறையாக ஏலியன்களை நேரில் சந்திப்பார்கள் என்றெல்லாம் இணையத்தில் தகவல்கள் பரபரத்து வருகின்றன.
இதெல்லாம் உண்மையா?
ஆனால், இத்தனை தகவல்கள் இணையத்தில் தீயாக பரவினாலும், இதில் உள்ள உண்மை என்ன தெரியுமா? பாபா வங்கா உயிருடன் இருந்தபோது இதையெல்லாம் எழுதினாரா அல்லது சொன்னாரா என்பதற்கு எந்தவொரு முறையான ஆதாரமும் இல்லை... அதனால் இதெல்லாம் வெறும் வாய்வழி கதைகளும், இணையத்தில் பரப்பப்படும் வதந்திகளும்தான் என்பதே நிதர்சனமான உண்மை!!!


Click it and Unblock the Notifications
