டாடா சன்ஸ் சந்திரசேகரனுக்கும் - நோயல் டாடாவுக்கும் என்னதான் பிரச்சினை? பின்னணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: டாடா சன்ஸ் தலைவராக இருந்த என். சந்திரசேகரன் தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்ததை அடுத்து புதிய தலைவராக டிவி நரேந்திரன் நியமனம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. டாடா டிரஸ்ட் தலைவர் நோயல் டாடாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடே என். சந்திரசேகரனின் இந்த திடீர் முடிவுக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. டாடா சன்ஸ் சந்திரசேகரனுக்கும் நோயல் டாடாவுக்கும் அப்படி என்னதான் பிரச்சினை என்பது குறித்து இங்கு காணலாம்.

டாடா சன்ஸ் நிறுவன தலைவராக இருந்த என். சந்திரசேகரன் தனது பதவியில் இருந்து விலகுவதாக கூறியுள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் டாடா சன்ஸ் நிறுவனங்களின் தலைவராக இருந்த சந்திரசேகரன், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் விலக இருக்கிறார்.

TV Narendran set to become the next Chairman of Tata Sons He studied in Trichy-who is he

இருவருக்கும் என்ன பிரச்சினை?

வரும் 18 ஆம் தேதி டாடா நிறுவனத்தின் பொதுக்குழு கூட உள்ள நிலையில், பதவியில் நீடிக்க விருப்பம் இல்லை என்ற முடிவை சந்திரசேகரன் வெளியிட்டுள்ளார். டாடா டிரஸ்ட் தலைவர் நோயல் டாடாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடே என். சந்திரசேகரனின் இந்த திடீர் முடிவுக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.

டாடா சன்ஸ் தலைவரான சந்திரசேகரன், மறைந்த டாடா டிரஸ்ட் தலைவர் ரத்தன் டாடாவுக்கு நம்பிக்கைக்குரியவராக விளங்கினார். அவரது மறைவுக்கு பிறகு, ரத்தன் டாடாவின் சகோதரர் நோயல் டாடா, டாடா டிரஸ்ட் தலைவராக பதவியேற்றார். இவருக்கும், சந்திரசேகரனுக்கும் பல்வேறு விவகாரங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

மகன் நெவில் டாடாவுக்கு முக்கியத்துவம்

குறிப்பாக என். சந்திரசேகரனை துவக்கத்தில் இருந்தே நோயல் டாடா முழுமையாக நம்பவில்லை என்றும் நிறுவன வட்டாரங்களில் சொல்லப்படுகிறது. அதேபோல, நோயல் டாடா தனது மகன் நெவில் டாடாவுக்கு டாடா சன்ஸ் நிறுவனத்தில் கூடுதல் முக்கியத்துவம் இருக்க வேண்டும் என கருதியாக கூறப்படுகிறது.

இதன் காரணமாகவே, சந்திரசேகரன் 2027 ஆம் ஆண்டு பிப்ரவரிக்கு பிறகு அந்த பதவியில் தொடர வேண்டாம் என நோயல் டாடா நினைத்தாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த காரணங்களால்தான் தனக்கு பதவி நீட்டிப்பு வேண்டாம் என்று சந்திரசேகரன் முடிவு எடுத்துதாகவும் கூறப்படுகிறது.

அடுத்த தலைவர் யார்?

டாடா டிரஸ்ட் தலைவர் நோயல் டாடாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடே என். சந்திரசேகரனின் இந்த திடீர் முடிவுக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. டாடா சன்ஸ் தலைவர் பதவியில் இருந்து விலகியிருக்கும் நிலையில், அந்த பொறுப்புக்கு அடுத்து யார் நியமனம் செய்யப்பப்பட உள்ளார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

சந்திரசேகரன் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை பதவியில் நீடிப்பார் என்பதால், புதிய தலைவரை தேர்வு செய்ய டாடா குழுமத்திற்கு போதிய அவகாசம் உள்ளது. இதனால், புதிய தலைவரை தேர்வு செய்ய டாடா குழுமம் ஆயத்தமாகி வருகிறது. டாடா சன்ஸ் நிறுவனத்தின் விதிகளின் படி, அதன் தலைவரை ஐந்து பேர் கொண்ட குழு தேர்வு செய்யும். இந்தக்குழுவில் இடம் பெறும் மூன்று பேரை சர் தாரோபஜி தாடா டிரஸ்ட் மற்றும் சர் ரத்தன் டாடா அறக்கட்டளை கூட்டாக 3 பேரை நியமனம் செய்யும்.

தேர்வு செய்வது எப்படி?

டாடா சன்ஸ் நிறுவனம் ஒருவரை நியமனம் செய்யும். ஐந்தாவது நபர் நிறுவனத்தின் போர்டு சுதந்திரமாக தேர்வு செய்யும். நோயல் டாடா இடைக்கால தலைவராக தேர்வு செய்யப்படலாம். டாடா குழுமத்தின் விதிகளின் படி நோயல் டாடா வரும் நவம்பர் மாதத்தில் ஓய்வு பெற இருக்கிறார். எக்சிகியூட்டிவ் டைரக்டர்ஸ் அல்லாதவர்களுக்கு 70 வயது ஓய்வு பெறும் வயதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நோயல் டாடாவை பொறுத்தவரை அவர் அறக்கட்டளையின் நாமினி என்பதால் டாடா சன்ஸ் இயக்குநராக தொடர முடியும். ஏனெனில், டிரஸ்ட் நாமினிகளுக்கு இந்த ஓய்வு பெறும் வயது வரம்பு பொருந்தாது. கடந்த 2016 ஆம் ஆண்டு சைரஸ் மிஸ்திரி டாடா சன்ஸ் தலைவர் பதவியில் இருந்து விலகும் போது, ரத்தன் டாடா தனது 78 வயது வயதில் இடைக்கால தலைவராக பொறுப்பேற்றார்.

யார் இந்த டிவி நரேந்திரன்?

அதேநேரத்தில் தற்போது டாடா குழுமத்தின் விதிகள் மாற்றபட்டு இருப்பதால், டாடா சன்ஸ் மற்றும் டாடா டிரஸ் தலைவர் என இரண்டு பதவிகளையும் வைத்து இருக்க முடியாது. எனவே, புதிய தலைவரை உடனடியாக தேர்வு செய்ய வேண்டியிருக்கும். டாடா சன்ஸ் தலைவர் பதவிக்கு அடுத்து யார் என்பதில் டிவி நரேந்திரன் பெயர் அடிபடுகிறது. 61 வயதான இவர் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராக உள்ளார்.

1988 ஆம் ஆண்டு டாடா ஸ்டீல் நிறுவனத்தில் சேர்ந்த நரேந்திரன், 2013 ஆம் ஆண்டு டாடா ஸ்டீல் நிறுவனத்தின் தலைவர் பதவியை ஏற்றார். திருச்சி என்.ஐ.டியில் இயந்திர பொறியியல் படித்துள்ளார். ஐஐஎம்மில் எம்பிஏ படித்துள்ளார். கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் படித்தது, வளர்ந்து எல்லாமே தமிழ்நாட்டிதான் என்று கூறப்படுகிறது.

டாடா சன்ஸ் தலைவராக அடுத்து யார் நியமனம் செய்யப்பட இருக்கிறார் என்ற தகவல் குறித்து டாடா குழுமம் இதுவரை எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடவில்லை. அதே நேரத்தில், நரேந்திரன் நியமனம் செய்யப்படவே அதிக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+