தோனியிடம் நடந்த அதே சீண்டல்.. சிஎஸ்கே வீரரை பதம் பார்த்த ராஜஸ்தான் பவுலர்.. கோபத்தில் செம முறைப்பு!
சென்னை: நேற்று ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே - ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் வீரர் முஸ்தபிசர் நடந்து கொண்ட விதம் விமர்சனங்களை சந்தித்துள்ளது.
Recommended Video
நேற்று ராஜஸ்தான் மற்றும் சென்னை அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் ஆட்டம் தொடக்கத்தில் கடைசி நொடி வரை விறுவிறுப்பாக சென்றது. ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதியில் பெரிதாக அதிக ரன் போட்டிகள் நடக்காத நிலையில் நேற்று இரண்டு அணிகளும் அதிக ரன்களை அடித்து சிக்ஸ், பவுண்டரி மழை பொழிந்தது.
இதில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே ருத்துராஜ் சதம் காரணமாக 189 ரன்கள் எடுத்தது. அதன்பின் இறங்கிய ராஜஸ்தான் எளிதாக 17.3 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது

டு பிளசிஸ்
நேற்று ராஜஸ்தானுக்கு எதிராக சிஎஸ்கே அணியின் ஓப்பனிங் வீரர் டு பிளசிஸ் 25 ரன்கள் எடுத்தார். டு பிளசிஸ் மிகவும் அனுபவம் வாய்ந்தவர். இவருக்கு வயது அதிகம் என்பதால் உடலில் பல இடங்களில் காயங்கள் உள்ளன. முக்கியமாக கடந்த சீசனில் இவரின் தலையில் அடிபட்டது. இந்த காயத்திற்கு பின் தனக்கு அடிக்கடி கழுத்து வலி ஏற்படுவதாக டு பிளசிஸ் கூறி இருந்தார். சிஎஸ்கே மேட்ச் ஒன்றில் தலையில் காயம் ஏற்பட அதில் இருந்தே இவருக்கு கழுத்தில் பிரச்சனை உள்ளது.

கழுத்து பிரச்சனை
கொல்கத்தாவிற்கு எதிரான கடந்த லீக் போட்டியில் கூட இவர் கீழே விழுந்த போது கடுமையாக காயம் அடைந்தார். கழுத்திலும், காலிலும் காயம் ஏற்பட்டது. இதில் டு பிளசிஸ் காலில் இருந்து ரத்தம் வந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான் நேற்று போட்டியில் டு பிளசிஸ் மிகவும் அதிரடியாக பேட்டிங் செய்து கொண்டு இருந்தார். ருத்துராஜ் தொடக்கத்தில் வேகம் எடுக்க முடியாமல் திணறிய போது டு பிளசிஸ்தான் அதிரடி காட்டினார்.

முஸ்தபிசர் ரஹ்மான்
இந்த நிலையில் முஸ்தபிசர் ரஹ்மான் ஓவரில் டு பிளசிஸ் ரன் ஓடும் போது மீண்டும் அவருக்கு காயம் ஏற்பட்டது. டு பிளசிஸ் ரன் ஓடும் போது அவரை மறைக்கும் வகையில் முஸ்தபிசர் ரஹ்மான் நின்றார். இதனால் அவர் மீது டு பிளசிஸ் வேகமாக மோதி காயம் அடைந்தார். வேகமாக சென்ற டு பிளசிஸ் முஸ்தபிசர் ரஹ்மான் முதுகில் மோதினார். முஸ்தபிசர் ரஹ்மான் ஒரு இடத்தில் நிற்காமல் நகர்ந்து கொண்டே இருந்ததால் டு பிளசிஸ் கீழே விழுந்தார்.

காயம்
இதில் அவரின் கழுத்தில் காயம் ஏற்பட்டது. டு பிளசிஸ் ஏற்கனவே பல முறை கழுத்தில் காயம் அடைந்துள்ளார். ஏற்கனவே அவர் கழுத்து வலியால் அவதிப்பட்டு வருகிறார். அப்படி இருக்கும் போது நேற்று முஸ்தபிசர் செய்த காரியத்தால் டு பிளசிஸ் துடித்து போனார். கழுத்து வலியால் பாதிக்கப்பட்டவர், முஸ்தபிசரை பார்த்து ஏன் இப்படி பண்ணுனீங்க என்பது போல முறைத்தார்.

மன்னிப்பு
இதற்கு முஸ்தபிசர் மன்னிப்பு கேட்பது போல தலையை ஆட்டினார். இதற்கு முன்பே முஸ்தபிசர் இது போல செய்து உள்ளார். சர்வதேச போட்டிகளில் இந்தியாவிற்கு எதிராக ரோஹித் சர்மாவை ஒருமுறை ரன் ஓடும்போது தடுத்து அவரிடம் மோதி உள்ளார். அதன்பின் அதே போட்டியில் தோனியை இதேபோல் தடுக்க முயன்று, தோனியிடம் பலத்த அடி வாங்கினார்.

வழக்கம்
வேண்டுமென்றே பேட்ஸ்மேன்களை ரன் ஓட விடாமல் ரன் அவுட் செய்ய வேண்டும் என்பதால் முஸ்தபிசர் இப்படி பாதையில் நிற்பது வழக்கம். நேற்றும் இதேபோல் ஒரு இடத்தில் நிற்காமல் இவர் பேட்ஸ்மேனை தொந்தரவு செய்ததால் டு பிளசிஸ் காயம் அடைந்தார். முஸ்தபிசரின் இந்த செயலை இணையத்தில் நெட்டிசன்கள் பலரும் விமர்சனம் செய்துள்ளனர்.
-
வாள் தூக்கி நின்ற வெங்கடேஷ் ஐயர்.. ப்ளே ஆஃப் வந்தாலே ஆளை கையில் பிடிக்க முடியாது.. இம்பேக்ட் ஆட்டம்! -
நீதான்யா ஸ்பின்னர்.. எகனாமியை பாருங்கப்பா.. ஆர்சிபி வெற்றிக்கு காரணமே க்ருணால் பாண்டியா தான்! -
சோலி முடிஞ்சுது.. சொதப்பிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்.. இனி குஜராத் கதி அவ்வளவு தான்! -
RCB-க்கு வாழ்த்து சொன்ன டி.கே.சிவகுமார்! வார்னிங் கொடுத்த சித்தராமையா! இந்த முறை தவறு நடக்கக்கூடாது! -
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications