என்னங்க இது.. காலையிலேயே வெளியே வந்து பார்த்தால் ஷாக்.. சென்னை மக்களுக்கு ஒரே ஆச்சர்யம்.. ப்பா!
சென்னை: தமிழ்நாட்டில் கோடை காலம் முடிந்துள்ள நிலையில் சென்னையில் இன்று அதிகாலையே வானிலையில் பெரிய அளவில் மாற்றம் காணப்பட்டது.
தமிழ்நாட்டில் இன்று பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் கூறி உள்ளது.
கோவை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், தி.மலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரியில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தருமபுரி, சேலம், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய தகவல் காரணமாக மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். தமிழ்நாட்டில் கடந்த மாதம் முழுக்கவே தமிழ்நாட்டில் தொடர்ந்து வெயில் அதிகரித்து வந்தது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவானது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 95 டிகிரி பாரன்ஹீட் வரை சென்றது. சென்னையிலும் 95 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் நிலவியது.
சென்னையில் பகலில் வெளியே வர முடியாத அளவிற்கு வெயில் வாட்டி வதைத்து. மக்கள் வெளியே வர கூடாது என்று சுகாதாரத்துறை சொல்லும் அளவிற்கு வானிலை மோசமாக மாறியது. இந்த நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக வெயில் படிப்படியாக குறைந்து வருகிறது.
முக்கியமாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைய தொடங்கி இருக்கும் நிலையில் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. இதனால் கடலோர மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வெயில் வாட்டி வதைத்துக்கொண்டு இருந்த நிலையில், மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக ஒருசில இடங்களில் மழை பெய்து வருகிறது. முக்கியமாக வட தமிழ்நாட்டில் கனமழை பெய்து வருகிறது. நேற்று தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படவில்லை. இது மக்களுக்கு ஆறுதலைக் கொடுத்தது. முக்கியமாக சென்னையில் நேற்று பெரிதாக வெயில் அடிக்கவில்லை.
பகல் நேரத்தில் நேற்று 33 டிகிரி செல்ஸியஸ் வரை மட்டுமே வெயில் இருந்தது. இந்த நிலையில்தான் இன்று சென்னையில் பல பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்து வருகிறது. அதிகாலையில் இருந்து பெரும்பாலான இடங்களில் சாரல் மழை விடாமல் பெய்து வருகிறது. அரும்பாக்கம், கோயம்பேடு, காசிமேடு , ராயப்பேட்டை, கிண்டி பகுதிகளில் அதிகாலையில் மிக லேசான சாரல் பெய்தது
சென்னை மாற்றம்: இந்த நிலையில்தான் சென்னையில் இன்று அதிகாலையில் இருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. சென்னையில் இன்று அதிகாலையில் வெளியே வந்து பார்த்தால் இது சென்னையா இல்லை ஊட்டியா என்று கேட்கும் அளவிற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
8 மணிக்கு பின்பும் கூட பொழுது விடியாமல் இருப்பது போல இருட்டாக காணப்பட்டது. மேகமூட்டத்துடன் சேர்ந்து அதிகாலையில் நன்றாக காற்றும் வீசியதால் குளு குளு என்று சென்னை இருந்தது. அதிகாலையில் நிலவிய வானிலை காரணமாக மக்கள் பலரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications