ஒதுக்குப்புறத்தில் நிர்வாணம்.. மொத்தம் 9 பேர் செய்த காரியம்.. சிதறி விழுந்த தலைகள்.. ஆடிப்போன ஆவடி
இரட்டை கொலையில் 9 பேர் சென்னையில் கைதாகி உள்ளனர்
சென்னை: தமிழகத்தின் தலைநகரில் இரட்டை கொலை நடந்த அதிர்ச்சியில் இருந்து சென்னைவாசிகள் இன்னும் வெளியே வரவில்லை.. அப்படி என்னதான் நடந்தது?
சென்னை ஆவடியை சேர்ந்தவர் சுந்தர்.. 29 வயதாகிறது.. இவர் ஒரு ஆட்டோ டிரைவர்... மனைவி பெயர் பிரியா.. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன.
இதே ஆவடியில் நேரு பஜார் மசூதிக்கு பின்புறத்தில் வசித்தவர் அசாருதீன்.. 30 வயதாகிறது.. இவர் ஒரு மீன்கடையில் வேலை பார்த்து வருகிறார்..

அசாருதீன்
மனைவி கவுசிக் இப்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். சுந்தர், அசாருதீன் 2 பேருமே நெருங்கிய நண்பர்கள்.. இந்நிலையில், கடந்த 12ந்தேதி இரவு ஆவடியில் உள்ள ஓசிஎப் மைதானத்தில் இந்த நண்பர்கள் இருவருமே கொலை செய்யப்பட்டு கிடந்தனர்.. தலை வெட்டப்பட்டிருந்தது.. முகம் முழுவதும் சிதைக்கப்பட்டிருந்தது..

கூலிப்படை
இதையடுத்து ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் விசாரணையை ஆரம்பித்தனர். அப்போதுதான் மணிகண்டன் என்ற ஆட்டோ டிரைவர் சிக்கினார்.. இவரும் அதே ஆவடியை சேர்ந்தவர்தான்.. கூலிப்படையை வைத்து இந்த இரட்டை கொலையை செய்தது தெரியவந்தது.. இதையடுத்து, மணிகண்டனிடம் விசாரணை ஆரம்பமானது. மணிகண்டன் ஒரு கிரிமினலாம்.. கஞ்சா கடத்தி வந்துள்ளார்.. இதற்காக 4 வருடங்களுக்கு முன்பு கைதாகி ஜெயிலுக்கும் போய் வந்துள்ளார்.. பிரிசில்லா என்ற மனைவியும், ஒரு பெண்ணும் உள்ளனர்..

கள்ள தொடர்பு
ஆனால் பிரிசில்லாவுக்கு ஜெகன் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டு அவருடனேயே சென்றுவிட்டார்.. இதனால் மணிகண்டன் இன்னொரு கல்யாணம் செய்து கொண்டார்.. இதனிடையே, பிரிசில்லாவுக்கு உடம்பு சரியில்லாமல் போயுள்ளது.. சிகிச்சைக்கு பணம் இல்லாமல் ஜெகன் தவித்து வந்துள்ளார்.. என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தபோதுதான், கடந்த 4ந்தேதி மணிகண்டனை ஆட்டோவில் காட்டுப்பகுதிக்கு கடத்தி சென்று, சிகிச்சைக்கு பணம் வேண்டும் என்று கேட்டுள்ளார் ஜெகன்..

நிர்வாணம்
தன்னிடம் பணம் இல்லை என்று மணிகண்டன் சொல்லவும், அப்படியானால் ஆந்திராவில் இருந்து 2கிலோ கஞ்சா வாங்கி வந்து தர வேண்டும் என்று கேட்டுள்ளார்.. இதற்கும் மணிகண்டன் மறுப்பு சொல்லவும், மணிகண்டனை நிர்வாணப்படுத்தி ஜெகன் வீடியோ எடுத்துவிட்டார்.. இப்போது கஞ்சா, பணம் இரண்டுமே வேண்டும், இல்லாவிட்டால் நிர்வாண வீடியோவை சோஷியல் மீடியாவில் பதிவிடுவதாக மிரட்டினார்.. வேறு வழி தெரியாத மணிகண்டன் 10 நாள் டைம் கேட்கவும், ஜெகனும் அவரை விடுவித்தார்..

நிர்வாண வீடியோ
தன் மனைவியையும் அபகரித்து கொண்டு, இப்படி நிர்வாண வீடியோ எடுத்தும் மிரட்டும் ஜெகன்மீது மணிகண்டனுக்கு ஆத்திரம் அதிகமானது.. அதனால் அவரை கொலை செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தார்.. இதற்காகவே, கூலிப்படையை ஏற்பாடு செய்துள்ளார்.. கூலிப்படையினர் மொத்தம் 8 பேராம்.. சம்பவத்தன்று மைதானத்துக்கு ஜெகன் தன்னுடைய நண்பர்கள் சுந்தர், அசாருதீனுடன் சென்றுள்ளார்.. ஜெகனை கொலை செய்ய முயன்றபோது, சுந்தர், அசாருதீன் இருவரும் கூலிப்படையினரை தடுக்க முயன்றனர்..

சிறுவன் யார்?
இதனால் ஆத்திரமடைந்த கும்பல், சுந்தர், அசாருதீன் இருவரையுமே வெட்டி கொலை செய்தது.. ஆனால், யாரை கொல்ல வேண்டும் என்று இவ்வளவு முயற்சியும் நடந்ததோ, அந்த ஜெகன் தப்பி ஓடி விட்டார். இதையடுத்து, போலீசார் மணிகண்டன் உட்பட மொத்த கும்பலையும் கைது செய்தனர்.. 9 பேர் தவிர ஒரு சிறுவனும் இந்த கொலை வழக்கில் கைதாகி உள்ளது அதிர்ச்சியை கூட்டி வருகிறது.. இரட்டை கொலை நடந்து, வெறும் 24 மணி நேரத்தில் நம் போலீசார் குற்றவாளிகளை உள்ளே தூக்கி வைத்துள்ளனர்..!
-
அண்ணி மீதான மோகம்.. இளைஞரை எரித்து கொன்ற வழக்கில் பெரிய ட்விஸ்ட்! ஷாக் காரணம் -
கும்மிடிப்பூண்டி சிறுமியின் பெற்றோரை மிரட்டினாரா தவெக எம்எல்ஏ விஜயகுமார்? மாதர் சங்கத்தினர் புகார் -
இப்படியா நடக்கனும்.. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 3 வயது சிறுமி! சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்! -
"என் கைய விடு" ஐஏஎஃப் அதிகாரி மனைவிக்கு தோழன் விரித்த வலை! வசிய மாந்திரீகம்! நாக்பூரில் யார் பாருங்க -
குமுறுது கும்மிடிப்பூண்டி.. 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை? முட்புதரில் வீசிச் சென்ற கொடூரன்கள்! -
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு!












Click it and Unblock the Notifications