"12 பேரை" தூக்கி அடித்த தமிழக அரசு.. இதுதான் காரணமா.. குட்டையை குழப்பி வரும் பாஜக.. என்ன நடக்கிறது?
தமிழகத்தில் 12 ஐஏஎஸ் அதிகாரிகள் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்
சென்னை: பல்வேறு துறைகளின் செயலாளர்கள், இயக்குநர்கள், மாநகராட்சி ஆணையர்கள் என்று 12 பேரை இட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.. இந்த உத்தரவு பல்வேறு சந்தேகங்களை, யூகங்களை அரசியல் களத்தில் ஏற்படுத்தி வருகிறது.
தமிழக அரசு அவ்வப்போது அதிகாரிகள் இடமாற்றம் குறித்த அறிவிப்பை வெளியிட்டு வருகிறது.. அந்த வகையில் தற்போது, மேலும் ஒரு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அந்த அறிவிப்பில் உள்ளதாவது: "மதுரை மாநகராட்சியின் ஆணையராக சிம்ரன்ஜீத் சிங் கஹ்லோன் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். கோவை மாநகராட்சி ஆணையராக பிரதாப் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். திருச்சி மாநகராட்சி ஆணையராக வைத்தியநாதன் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐஏஎஸ் அதிகாரிகள்
திருநெல்வேலி மாநகராட்சி ஆணையராக சிவா கிருஷ்ணமூர்த்தி ஐஏஎஸ், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையராக ஆனந்த் மோகன் ஐஏஎஸ், ஆவடி மாநகராட்சி ஆணையராக தற்பகராஜ் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளனர்... விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளராக கார்த்திகேயன் ஐஏஎஸ், கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளராக சங்கர் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

கார்த்திகா ஐஏஎஸ்
வீட்டு வசதி நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கூடுதல் செயலராக விஜயலட்சுமி, சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய நிர்வாக இயக்குனராக ராஜகோபால் சுங்கரா, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை கூடுதல் இயக்குனராக கார்த்திகா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளனர். தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகம் தொடங்கப்பட்டு அதில் முதல் காவல் ஆணையராக கூடுதல் டிஜிபி எம்.ரவி நியமிக்கப்பட்டார். அவர் தற்போது டிஜிபியாக பதவி உயர்வு பெற்று காவல் ஆணையராகவே தொடர்கிறார்.

மாற்றங்கள் ஏன்?
இவர் நாளைய தினம் மே 31ம் தேதி பணி ஓய்வு பெறுகிறார். அதனால், தாம்பரம் காவல் ஆணையர் பதவியை கைப்பற்ற சில காவல் துறை அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர்.. எனினும் இந்த மாற்றங்கள் ஏன், எதற்காக என்ற கேள்விகள் எழுந்துள்ளன.. குறிப்பாக, சில அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்படும் என்றும் அவர்களுக்கு நிர்வாக வசதியாக அதிகாரிகள் மாற்றம் செய்யப்படுவார் என்றும் சொல்லப்பட்டு வந்தது.. இப்போது அமைச்சரவை மாற்றத்துக்கு முன்பாகவே அதிகாரிகள் மாற்றம் நடந்துள்ளது..

பாஜக அதிரடி
கடந்த சில காலமாகவே, அமைச்சரவையில் மாற்றம் என்ற தகவல்கள் கசிந்து கொண்டிருக்கின்றன.. யார் யாருக்கு பதவி போக போகிறதோ? யார் யாருக்கு இலாகா மாற்றம் செய்யப்படுகிறதோ? யார் யாருக்கு பதவி கிடைக்க போகிறதோ தெரியவில்லை... இதுபோக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, 2 அமைச்சர்களின் ஊழல் ஆதாரங்களை வெளியிடுவேன் என்று சொல்லி கொண்டு இருக்கிறார்.. அவர்கள் யார் என்று தெரியாமல், திமுகவில் கலக்கம் சூழ்ந்து வருகிறது.. இப்படி ஒரு பக்கம் அதிகாரிகள் மாற்றம், மறுபக்கம் அமைச்சரவை மாற்றம், இதற்கு நடுவில் பாஜகவின் குழப்பம் என தமிழக அரசியல் பயணித்து கொண்டிருக்கிறது.. பார்ப்போம்..!












Click it and Unblock the Notifications