அஸ்வின் ஸ்டைலில் சட்டென மன்-கட் செய்த சாகர்.. விக்கித்து போன ஜிம்பாபே வீரர்.. அடுத்து நடந்த ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியா ஜிம்பாபே இடையிலான ஆட்டத்தில் இன்று மைதானத்தில் சுவாரசியமான சம்பவம் ஒன்று நடைபெற்றது.

இந்தியா ஜிம்பாபே இடையிலான கிரிக்கெட் தொடர் ஜிம்பாபேவில் நடந்து வருகிறது. இந்த தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி எளிதாக வென்றது. இந்த நிலையில் 3வது போட்டி இன்று நடந்து வருகிறது.

இந்த போட்டியில் வெற்றிபெறுவதன் மூலம் ஜிம்பாபேவை வைட் வாஷ் செய்ய முடியும். இந்த தொடரில் கோலி, ரோஹித் போன்ற முன்னணி வீரர்கள் ஆடவில்லை.

கே.எல் ராகுல் தலைமையில் இந்த முறை இந்திய அணி களமிறங்கி உள்ளது.

 வெற்றி

வெற்றி

இந்த தொடரில் முதல் ஒருநாள் போட்டியில் ஜிம்பாபே அணி 189 (40.3) ரன்கள் எடுத்தது. அதன்பின் ஆடிய இந்திய அணி 192/0 (30.5) ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இரண்டாவது போட்டியில் ஜிம்பாபே அணி 161 (38.1) ரன்கள் எடுத்தது. இந்திய அணி 167/5 (25.4) ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் இந்திய அணி தொடரை வென்றது. இன்று மூன்றாவது ஒருநாள் ஆட்டம் நடைபெற்றது.

 பேட்டிங்

பேட்டிங்

முதல் இரண்டு போட்டுகளில் முதலில் பவுலிங் செய்த இந்திய அணி இந்த முறை முதலில் பேட்டிங் செய்தது. இதில் தவான் 40, கே.எல் ராகுல் 30, அதிரடியாக ஆடிய கில் 130 ரன்கள், இஷான் கிஷான் 50 ரன்கள் என்று அசத்தலாக ஆடினார்கள். இதனால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 289-8 ரன்கள் எடுத்தது. கடுமையான இலக்கை நோக்கி ஆடிய ஜிம்பாபே அணி தொடக்கத்தில் இருந்தே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

விக்கெட்டுகள்

விக்கெட்டுகள்

145 ரன்கள் எடுத்த போதே அந்த அணி 6 விக்கெட்டுகளை இழந்தது. இந்தியா ஜிம்பாபே இடையிலான ஆட்டத்தில் இன்று மைதானத்தில் சுவாரசியமான சம்பவம் ஒன்று நடைபெற்றது. இந்த போட்டியில் சாகர் முதல் ஓவரை வீசினார். அப்போது நான் ஸ்டிரைக்கர் எண்டில் இன்னொசென்ட் கையா இருந்தார். முதல் பந்தை சாகர் வீச வரும் போது இன்னொசென்ட் ஓட ரெடியாகி கிரீசை தாண்டி நின்றார். இதை பார்த்ததும் அஸ்வின் பாணியில் சாகர் அவரை மன் கட் செய்தார்.

இன்னொசென்ட்

இன்னொசென்ட்

இதை பார்த்த இன்னொசென்ட் முகத்தை இன்னொசென்ட் ஆக வைத்துக்கொண்டு அதிர்ச்சியாக பார்த்தார். இப்போது மன் கட் விக்கெட் அதிகாரபூர்வமாகிவிட்டது. இப்படி விக்கெட் எடுத்து அப்பீல் செய்தால் விக்கெட்தான். ஆனால் இன்னொசென்ட்டை விக்கெட் எடுத்தும் சாகர் விக்கெட் கேட்கவில்லை. சிரித்தபடியே விக்கெட் கேட்காமல் சாகர் அங்கிருந்து நகர்ந்து சென்றார். அவரின் இந்த செயல் மிகப்பெரிய அளவில் பாராட்டுகளை பெற்று வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+