கிருத்திகாவிடம் போனில் பேசுவதாக சைகை! இன்பநிதியை கட்டி அணைத்த உதயநிதி! நீலாங்கரை வீட்டில் உருக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை திரிஷா குறித்து இரட்டை அர்த்தத்தில் பேசியதாக உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்படுவதற்கு முன்னர், அவரது நீலாங்கரை வீட்டில் நடந்த உருக்கமான காட்சிகளை பார்க்கலாம்.

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேற்றைய தினம் தஞ்சாவூரில் நடந்த திமுக ஆர்ப்பாட்டத்தில், தவெக அரசை கடுமையாக விமர்சித்திருந்தார். மேலும் காவிரியில் நீரை கேட்டு பெற முதல்வர் விஜய் எந்த முயற்சியையும் எடுக்கவில்லை என விமர்சித்திருந்தார்.

Udhayanidhi Stalin hugs Inbanidhi

முதல்வராக ஸ்டாலின் இருந்த போது சரியாக காவிரி நீர் தமிழகத்திற்கு கிடைத்தது. ஆனால் விஜய் ஆட்சியில் காங்கிரஸ் கட்சியை அவர் பகைத்துக் கொண்டால் ஆட்சி கவிழும் என்பதால் கர்நாடகாவுடன் மென்மையான போக்கை கடைப்பிடிக்கிறார் என்றெல்லாம் உதயநிதி விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில் அவர் பேசிக் கொண்டிருந்த போது சிலர் திரிஷா திரிஷா என கூச்சலிட, அதற்கு இரட்டை அர்த்தம் வரும் வகையில் உதயநிதி ஒரு சொல்லை சொன்னார். இதற்கு தவெகவினர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

ஒரு பெண்ணை பொதுவெளியில் வைத்து ஆபாசமாக பேசுவது திமுகவுக்கு புதிதல்ல என பல்வேறு உதாரணங்களுடன் வீடியோ போட்டு காட்டி வருகிறார்கள். உதயநிதியை கண்டித்து இன்றைய தினம் ஆர்ப்பாட்டமும் செய்தனர்.

மேலும் உதயநிதி மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை முதலே உதயநிதியின் நீலாங்கரை இல்லத்தில் போலீஸார் குவிந்தனர்.

Udhayanidhi Stalin hugs Inbanidhi

இதையடுத்து உதயநிதியை கைது செய்வதாக கிருத்திகாவிடம் போலீஸ் உயரதிகாரிகள் தெரிவித்தனர். அதற்கு அவர், உதய் குளித்துக் கொண்டிருக்கிறார், சிறிது நேரம் பொருங்கள் என்றார். அதற்கு போலீஸோ காலை 7 மணி முதல் நாங்கள் காத்திருக்கிறோம், இன்னும் எத்தனை மணி நேரம்தான் காத்திருப்பது என கேள்வி எழுப்பினர்.

உதயநிதியை கைது செய்ய போவதை அறிந்த திமுகவினர் அவரது வீட்டிற்கு படையெடுத்தனர். அது போல் முன்னாள் அமைச்சர்களும் உதயநிதியின் வீட்டிற்கு வந்தனர். அவர்களும் போலீஸாருடன் வாக்குவாதம் செய்தனர்.

தஞ்சாவூருக்கு உதயநிதியை அழைத்துச் செல்வதாக கூறும் நீங்கள் காலை கடனை கூட கழிக்கவிடாமல் அவரை அழைத்துச் செல்ல பார்க்கிறீர்கள் என கடுமையாக வாக்குவாதம் செய்தனர்.

இதையடுத்து வழக்கறிஞர்கள் சரவணன், பரந்தாமன், என்.ஆர்.இளங்கோ ஆகியோர் உதயநிதியின் வீட்டிற்கு வந்தனர். பின்னர் கோர்ட்டில் வழக்கு தொடர்வது குறித்து ஆலோசனையில் ஈடுபட்டதும் உதயநிதி போலீஸாருடன் சென்றார்.

அப்போது அங்கிருந்த கிருத்திகாவிடம், உதயநிதி "போய்ட்டு வரேன்" என கைகளை அசைத்து போனில் பேசுவதாகவும் சைகையில் தெரிவித்தார். பின்னர் அங்கிருந்த இன்பநிதியை உதயநிதி கட்டி அணைத்தார். பின்னர் கிருத்திகாவும் இன்பநிதியும் உதயநிதியை தைரியமாக இருக்குமாறு சொன்னார்கள்.

இதையடுத்து சிரித்த முகத்துடன் உதயநிதி வெளியே வந்தார். இதனிடையே உதயநிதி கைது குறித்து தகவலறிந்த துரைமுருகன், நேரடியாக உதயநிதி வீட்டிற்கு சென்று அவரை கட்டி அணைத்து ஆறுதல் தெரிவித்தார்.

சட்ட ஆலோசனைகளிலும் துரைமுருகன் ஈடுபட்டிருந்தார். இவ்வாறு உதயநிதியின் நீலாங்கரை வீட்டில் உருக்கமான சம்பவங்கள் நடந்தன. தஞ்சாவூருக்கு அழைத்து செல்லப்படுவதாக சொல்லப்பட்ட நிலையில் போலீஸார் ரூட்டை மாற்றி செங்கிப்பட்டியில் அவரை கொண்டு செல்கிறதாம். செங்கிப்பட்டி காவல் நிலையத்தை சுற்றிலும் ஆயிரக்கணக்கான திமுகவினர் திரண்டுள்ளனராம். இதனால் தமிழகத்தில் பதற்றமான சூழலே நிலவி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+