'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 'ஜனநாயகன்' படத்தை ஆன்லைனில் கசிய விடப்பட்ட வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.இதுவரை சுமார் 300 விதிமீறல் இணைப்புகளுக்கான தடுப்பு கோரிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளன. குற்றத்தில் ஈடுபட்ட மற்றவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என தமிழ்நாடு காவல்துறை அறிக்கை தனது அறிக்கையில் கூறியுள்ளது.

தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், "தமிழ்நாடு இணையவழி குற்ற தடுப்பு பிரிவானது, பல டிஜிட்டல் தளங்களில் "ஜனநாயகன்" திரைப்படத்தின் அங்கீகரிக்கப்படாத இணைய கசிவு தொடர்பான புகாரின் பேரில் விரைவான நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக, மாநில சைபர் குற்ற விசாரணை மையத்தில் குற்ற எண். 47/2026 பாரதிய நியாயா சன்ஹிதா (பி. என். எஸ்) தகவல் தொழில்நுட்பச் சட்டம், பதிப்புரிமைச் சட்டம் மற்றும் சினிமாட்டோகிராப் சட்டத்தின் தொடர்புடைய விதிகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

What Happened in the Jana nayagan Movie Leak Tamil Nadu Police Provide Full Clarification

பல சிறப்புக் குழுக்கள் அமைப்பு

புகாரின் பேரில் உடனடியாக நடவடிக்கை எடுத்து, மீறப்பட்ட URL களை அடையாளம் கண்டு தடுப்பது, டிஜிட்டல் தடயவியல் பகுப்பாய்வு மற்றும் தொடர் விநியோகத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளைக் விசாரணை மூலம் கண்டுபிடிப்பது போன்ற வழக்கின் பல்வேறு அம்சங்களைக் கையாள சைபர் குற்ற பிரிவில் பல சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டன.

ஆறு பேர் கைது

டிஜிட்டல் ஆதாரங்களின் விசாரணை மற்றும் பகுப்பாய்வின் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில், கிளவுட் ஸ்டோரேஜ் தளங்கள் மூலம் பதிவேற்றுதல் மற்றும் டிரைவ் இணைப்புகளைப் பகிர்வதில் ஈடுபட்ட குற்றம் சாட்டப்பட்ட ஆறு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், அவர்களிடமிருந்து டிஜிட்டல் சான்றுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர்.

கண்காணிப்பு தீவிரம்

திருட்டு உள்ளடக்கம் பரவுவதைத் தடுக்க இணையவெளியில் தொடர் கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது. இதுவரை, சுமார் 300 மீறல் இணைப்புகளுக்கான தடுப்பு கோரிக்கைகள் அனுப்பப்பட்டு உள்ளது. மேலும் அடையாளம் காணுதல் மற்றும் நீக்குதல் நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. குற்றத்தில் ஈடுபட்ட மற்றவர்களை அடையாளம் காணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

பொதுமக்களுக்கு அறிவுரை

ஜனநாயகன் அல்லது பிற பதிப்புரிமை பெற்ற உள்ளடக்கங்களின் திருட்டு பிரதிகளைப் பதிவிறக்கம் செய்யவோ, ஸ்ட்ரீம் செய்யவோ அல்லது பகிரவோ வேண்டாம் என்று பொதுமக்கள் கண்டிப்பாக அறிவுறுத்தப்படுகிறார்கள். இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஒரு கைது செய்யப்படக்கூடிய குற்றமாகும், மேலும் தகுந்த சட்டங்களின் கீழ் தண்டனைகள் உட்பட கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
சமூக ஊடகங்கள், செய்தியிடல் தளங்கள் அல்லது வலைத்தளங்கள் மூலம் திருட்டு உள்ளடக்கத்தை தெரிந்தே பரப்பும் அல்லது ஊக்குவிக்கும் நபர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

புகார் அளிக்க

நீங்கள் இதேபோன்ற இணைப்புகள் பார்க்க நேர்ந்தாலும் அல்லது சந்தேகத்திற்கிடமான செயலைச் சந்தித்திருந்தால், சைபர் கிரைம் கட்டணமில்லா தொலைபேசி எண் 1930ஐ அழைத்துச் சம்பவத்தைப் புகாரளிக்கவும் அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகாரைப் பதிவு செய்யவும்." இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+