நள்ளிரவு நேரத்தில் செந்தில் பாலாஜி மனைவி மற்றும் தம்பிக்கு பறந்த போன் கால்.. ED சொன்ன பரபர தகவல்!
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரணைக்கு அழைத்துச் செல்வதற்கு முன்பு அவரது மனைவியையும், தம்பியையும் போனில் அழைத்ததாக அமலாக்கத்துறை கோர்ட்டில் தெரிவித்துள்ளது.
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு வந்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜியை 2ஆம் தேதி வரை நீதிமன்றத் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

மேலும், செந்தில் பாலாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற நீதிபதி அனுமதி அளித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி உடனடியாக மனு தாக்கல் மனு தாக்கல் செய்துள்ளனர். செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான விசாரணை முதன்மை நீதிபதி அல்லி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, நள்ளிரவில் கைது செய்தது சட்டவிரோதமானது. மனைவி, மற்றும் உறவினர்களிடம் சட்டப்படி கைது குறித்து தெரியப்படுத்தியிருக்க வேண்டும். நள்ளிரவில் கைது செய்தது உச்சநீதிமன்ற தீர்ப்பு அடிப்படையில் சட்ட விரோதமானது என வாதிட்டார்.
மேலும், நேற்று காலை 7 மணி முதல் இன்று அதிகாலை 2 மணி வரை அமலாக்க பிரிவினர் செந்தில் பாலாஜியை விசாரித்துள்ளதாகவும் அப்போது குடும்ப உறுப்பினர்கள், வழக்கறிஞர்கள் எவரையும் அனுமதிக்கவில்லை என்றும் என்.ஆர்.இளங்கோ வாதிட்டார்.
அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேஷ் வாதிடுகையில், "எதற்காக கைது செய்கிறோம் என்ற காரணத்தை தெரிவித்தோம், சம்மன் அளித்தோம். விசாரணைக்கு செந்தில் பாலாஜி எந்த ஒத்துழைப்பும் வழங்கவில்லை. நாங்கள் அளித்த மெமோவை செந்தில் பாலாஜி பெற மறுத்தார். கைது செய்யப்படுவோம் என்று தெரிந்தே மெமோவை வாங்க செந்தில் பாலாஜி மறுத்துவிட்டார்.
கைதாவோம் என தெரிந்தே மெமோவை வாங்க மறுத்தார் செந்தில் பாலாஜி.. பரபரப்பை கிளப்பிய அமலாக்கத்துறை வாதம்!
செந்தில்பாலாஜி மீதான குற்றச்சாட்டுகளுக்கு போதுமான ஆதாரங்கள் உள்ளது. கைதுக்கு முன் தொலைபேசி மூலம் செந்தில் பாலாஜியின் மனைவியையும், செந்தில் பாலாஜி சகோதரருக்கும் தொடர்பு கொண்டு தெரிவிக்க முயற்சித்தோம். இருவரும் தொலைபேசியை எடுக்கவில்லை, இ-மெயில் அனுப்பியும் பதில் இல்லை." எனத் தெரிவித்தார்.
நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ள நிலையில் அதை நிராகரிக்கக் கோர முடியாது. கைது செய்யப்பட்டதில் எந்த விதிமீறலும் இல்லை என அமலாக்கத்துறை தரப்பில் வாதிடப்பட்டது. செந்தில் பாலாஜி மற்றும் அமலாக்கத்துறை தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில் வழக்கின் தீர்ப்பை நீதிபதி நாளைக்கு ஒத்திவைத்தார்.
-
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி?












Click it and Unblock the Notifications