கைதாவோம் என தெரிந்தே மெமோவை வாங்க மறுத்தார் செந்தில் பாலாஜி.. பரபரப்பை கிளப்பிய அமலாக்கத்துறை வாதம்!
சென்னை: கைது செய்யப்படுவோம் என்று தெரிந்தே மெமோவை வாங்க அமைச்சர் செந்தில் பாலாஜி மறுத்துவிட்டார், நேற்று வரை ஆரோக்கியமாகவே இருந்தார் என அமலாக்கத்துறை பரபரப்பான வாதத்தை வைத்துள்ளது.
தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறை சோதனையைத் தொடர்ந்து நேற்று நள்ளிரவு அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ள ஓமந்தூரார் மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதன்மை நீதிமன்ற நீதிபதி அல்லி, ஜூன் 28ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை மனு அளித்தது. அதேபோல, திமுக தரப்பிலும் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி திமுக தரப்பும் செந்தில் பாலாஜியை ரிமாண்ட் செய்ய உத்தரவிட வேண்டும் என்று அமலாக்கத்துறை தரப்பும் சென்னை முதன்மை நீதிமன்றத்தில் வாதம் செய்தனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதில் எந்த விதிமீறலும் இல்லை. அமைச்சர் செந்தில் பாலாஜி கைதுக்கான மெமோவை வாங்க மறுத்தார். கைது செய்யப்படுவோம் என்று தெரிந்தே மெமோவை வாங்க செந்தில் பாலாஜி மறுத்துவிட்டார் என அமலாக்கத்துறை வாதம் வைத்துள்ளது.
ரிமாண்ட்டை நீக்க கோரிக்கை வைக்க முடியாது, ஜாமீன்தான் கேட்க முடியும். கைது குறித்து, செந்தில் பாலாஜி சகோதரருக்கும், மனைவிக்கும் போன் மூலம் தகவல் தெரிவிக்க முயற்சிக்கப்பட்டது. செந்தில் பாலாஜி கைது விவகாரத்தில் அனைத்து சட்ட விதிமுறைகளும் பின்பற்றப்பட்டுள்ளன. எனவே எந்த வித இடைக்கால நிவாரணமும் அளிக்கக்கூடாது.
சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் குற்ற விசாரணை முறைச் சட்ட விதிகள் பொருந்தாது. செந்தில் பாலாஜி ரிமாண்ட் செய்யப்பட்டு விட்ட நிலையில் அதை நிராகரிக்க கோர முடியாது. விசாரணைக்கு செந்தில் பாலாஜி சரிவர ஒத்துழைக்கவில்லை.
செந்தில் பாலாஜி நேற்று வரை நன்றாகத்தான் இருந்தார். இன்று திடீரென உடல்நலக்குறைவு என்கிறார். உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தால் நாங்களே உரிய சிகிச்சை அளிக்க தயாராக உள்ளோம். செந்தில் பாலாஜிக்கு உடனடி சிகிச்சை அளிக்க வேண்டும் என்கின்றனர். அதற்கான அவசியம் இல்லை என்று நாங்கள் கூறுகிறோம்.
செந்தில் பாலாஜி உடல்நலம் தொடர்பாக தமிழ்நாடு அரசு அளித்திருக்கும் மருத்துவர் அறிக்கையை நம்ப முடியாது. செந்தில் பாலாஜி உடல்நிலையை கண்காணிக்க சுதந்திரமான மருத்துவக் குழுவை அமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்." என வாதிடப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், விசாரணையை நாளைக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications