குரு, சூரியனால் மிதுனத்துக்கு வரப்போகும் பிரகாசமான மாற்றம்.. 3 விஷயத்தில் அதிர்ஷ்டம் கொட்டும்
ஆடி மாத ராசி பலன்: ஜூலை 17 ஆம் தேதி ஆடி மாதம் பிறக்கப் போகிறது. அம்மனுக்கு உரிய மாதமான இந்த ஆடி மாதத்தில் மிதுன ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
குரு, சனி, ராகு, கேதுக்கள் ஆகிய கிரகங்களின் பெயர்ச்சிகளை வைத்து வருட பலன்கள் சொல்லப்படுகின்றன. சனிப்பெயர்ச்சி இரண்டரை வருடத்திற்கு ஒரு முறையும், குருப்பெயர்ச்சி 12 முதல் 13 மாதங்கள் வரைக்கும் குருவின் நிலையை வைத்தும் கணிக்கப்படுகின்றன. ராகு கேது பெயர்ச்சி ஒன்றரை வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும். ஒவ்வொரு மாதமும் சூரியன் இருக்கும் நிலையை வைத்து மாதப்பெயர்ச்சி கணிக்கப்படுகிறது.

ஆடி மாதம் பிறக்கப் போகிறது. ஆடி மாதம் முழுவதும் சூரிய பகவான் கடக வீட்டில் இருக்கப் போகிறார். கடகத்தோடு சூரியன் சுபத்துவத்தோடு இருக்கும் தன்மை மிகப்பெரிய யோகத்தைத் தரும். சூரியதிசை, சூரிய புத்தி நடந்து கொண்டிருப்பவர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். ஆடி மாதத்தின் நடுப்பகுதியில் அதவாது ஆகஸ்ட் 1 ஆம் தேதி சிம்மத்தில் இருக்கும் குரு நீச்சமடைகிறார்.
ஆகஸ்ட் 2 ஆம் தேதி செவ்வாய் ரிஷப வீட்டில் இருந்து மிதுனத்திற்கு பெயர்ச்சி அடைகிறார். புதன் பகவான் ஆடி மாதம் 3-ஆம் வாரத்தில் சூரியனோடும், குருவோடும் சேரும் அமைப்புள்ளது. அந்த வகையில், ஆடி மாதத்தில் மிதுன ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசியினருக்கு அற்புதமான காலமாக இந்த ஆடி மாதம் அமையும். இந்த மாதத்தின் பெரும்பகுதியான நாட்களில் புதன் பகவான் வலுவாக இருக்கிறார். சூரிய பகவான் மிகுந்த சுபத்துவமான நிலையில் இருப்பதால் உங்களுக்குத் தெரிந்தவர் உயர்ந்த நிலைக்குச் செல்லும் நிலை ஏற்படும். நல்ல நண்பராக, தோழியாக இருக்கக்கூடியவர்கள் அதிகாரத்துக்கு வரக்கூடிய சூழ்நிலை ஏற்படும்.
அனுகூலம்
ஆண்களுக்கும், பெண்களும் இது ஒரே மாதிரியான பலனாக வரும். அரசாங்க ரீதியான பொறுப்புக்கு வருவது, அரசியலில் நல்ல பதவிகள் கிடைப்பது, தொழிலில், பணத்தில் நல்ல முன்னேற்றம் அமையக்கூடிய காலகட்டமாக இருக்கும். 2 ஆம் இடத்தில் சூரியன், குரு சேர்ந்திருப்பது உங்களுக்கு தெரிந்த ஒருவர் உயரிய தன்மையில் இருந்தும் கூட நட்பை மறக்காமல் உங்களுடன் பேசக்கூடிய அமைப்பு ஏற்படும்.
முன்னேற்றம்
அவர்களுடன் சேர்ந்து ஏதாவது உங்களுக்கு வேண்டிய காரியத்தை சாதித்துக் கொள்ளக்கூடிய அமைப்பு ஏற்படும். பெரிய அளவில் நம்பிக்கை ஏற்படும் காலகட்டமாக இருக்கும். 20 நாட்களுக்கு ராசிநாதன் முதல் இடத்திலேயே இருக்கிறார். அதன் பிறகு 2 ஆம் இடத்திற்கு வந்து குருவுடன் சேர்ந்து சுபத்துவமாக இருக்கிறார். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.
தொழில்
கல்வி நிலையங்கள் நடத்துவோர், டியூசன் எடுப்போர், ஆசிரியர், பேராசிரியர், வழக்கறிஞர் படிப்பை படிப்பவர்களுக்கு, வங்கித் துறையில் இருப்பவர்களுக்கு மிகப்பெரிய பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும் அமைப்பும் ஏற்படும். இளைய பருவத்தினருக்கு காதல் அமைப்பு, திருமண அமைப்பு உண்டாகும். இவர்கள் தான் நம் துணை என்பதில் தெளிவு பெறுவீர்கள்.
குரு பலம்
இந்த ஆண்டு குரு பலம் இருப்பதால் திருமணம் நடந்து சந்தோஷமாக இருக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்பவர்களுக்கு கடந்த காலத்தில் இருந்து வந்த நிச்சயமற்ற தன்மை நீங்கும். குடும்பத்தில் ஒருவித நிம்மதி, அமைதி, சந்தோஷம் ஏற்படும் காலகட்டமாக இருக்கும். மிகப்பெரிய ஏற்றம் நிறைந்த காலகட்டமாக இருக்கும். செவ்வாயின் நிலை மாறுவதால் சிறிது கோபம் அதிகமாக இருக்கும் வாய்ப்புள்ளதால் அதனை கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது.












Click it and Unblock the Notifications