தமிழ்நாட்டுக்கு மேலும் 100 மருத்துவ இடங்கள்.. தேசிய ஆணையம் ஒப்புதல்! எந்த கல்லூரிகளில் கூடுதல் இடம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக 100 மருத்துவ (எம்பிபிஎஸ்) இடங்களுக்கு தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. நாமக்கல், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு கூடுதலாக 50 இடங்கள் தர ஒப்புதல் அளித்துள்ளது. இந்த புதிய இடங்களையும் சேர்த்து தமிழகத்தில் உள்ள 36 அரசு மருத்துவ கல்லூரிகளிலும் உள்ள மொத்த மருத்துவ படிப்பு இடங்களின் எண்ணிக்கை 5,150 ஆக உயர்ந்துள்ளது.

தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் 100 எம்பிபிஎஸ் இடங்கள் அதிகரிக்க தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. நாமக்கல், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு கூடுதலாக 50 இடங்கள் தர ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் மேற்கூறிய இரண்டு கல்லூரிகளிலும் 100 ஆக இருந்த மருத்துவ கல்லூரி இடங்கள் 150 ஆக உயர்ந்துள்ளது.

NMC Tamil Nadu Medical Colleges MBBS

கடைசியாக கடந்த அதிமுக ஆட்சியில் அதாவது 2021 ஆம் ஆண்டு அரசு மருத்துவ கல்லூரிகளில் ஒரே நேரத்தில் 11 அரசு மருத்துவ கல்லூரிகள் கொண்டு வரப்பட்டன. அதன்பிறகு மருத்துவ கல்லூரிகளில் கூடுதல் இடங்கள் எதுவும் ஒதுக்கப்படாமல் இருந்தது. இது குறித்து முந்தைய திமுக தொடர்ச்சியாக கோரிக்கை வைத்து வந்த நிலையில் அதனை ஏற்று தற்போது இரண்டு மருத்துவ கல்லூரிகளி கூடுதல் இடங்களை ஒதுக்க தேசிய மருத்துவ ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்த புதிய இடங்களையும் சேர்த்து தமிழகத்தில் உள்ள 36 அரசு மருத்துவ கல்லூரிகளிலும் உள்ள மொத்த மருத்துவ படிப்பு இடங்களின் எண்ணிக்கை 5,150 ஆக உயர்ந்துள்ளது. இந்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கை 2026-27 ஆம் ஆண்டு கல்வி ஆண்டில் நடைபெறுகிறது.

நாமக்கல், திருப்பூர் கல்லூரிகளுக்கு கூடுதல் இடங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு நிலையில், திருவள்ளுர் அரசு மருத்துவ கல்லூரியிலும் கூடுதலாக 50 இடங்களை பெற தமிழக அரசின் மருத்துவத்துறை தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. 5 ஆண்டுகளுக்கு பிறகு அரசு மருத்துவ கல்லூரி இடங்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டு இருப்பது மருத்துவ கனவுடன் காத்திருக்கும் ஏழை எளிய மாணவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+