28 வருஷம் கழித்து மீண்டும் "ஹைர ஹைர ஹைரப்பா”.. குஷியில் பிரசாந்த்.. டாப் ஸ்டார் மீண்டும் ஃபார்முக்கு வருகிறாரா?
சென்னை: சில பாடல்கள் பல வருடங்கள் கழித்து திடீரென ட்ரெண்டாகிவிடும். அந்த வரிசையில் இப்போது சோசியல் மீடியாவில் நடப்பதை பார்த்தால் பழைய பாடல்களுக்கு வயசே ஆகாமல் திடீரென வந்து இப்போதைய பாடல்களை ஓரமாக வைத்து விடும் போலிருக்கிறது. அதுபோலத்தான் சோசியல் மீடியாவை இப்போது ஆக்கிரமித்து இருப்பது பிரசாந்த்- ஐஸ்வர்யா ராயின் "ஹைர ஹைர ஹைரப்பா" பாடல் தான்.
1998 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியான ஜீன்ஸ் படத்தில் பிரசாந்த், ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தனர். அந்த படத்தில் ஏஆர் ரகுமான் தான் இசையமைத்திருந்தார். அந்த படத்தில் உள்ள பல பாடல்கள் ப்டி தொட்டி எங்கும் ஒலித்தது. ஆனால் கிட்டத்தட்ட 28 வருஷத்துக்கு பிறகும் ஹைர ஹைர ஹைரப்பா பாடல் இப்படி ஒரு என்ட்ரி கொடுக்கும் என்று அப்போது பிரசாந்த் எதிர்பார்த்து இருக்க மாட்டார்.
ட்ரெண்டான ரீல்ஸ் வீடியோ
இப்போது இன்ஸ்டாகிராமை திறந்தால் ரீல்ஸ்களில் குழந்தைகள், சினிமா பிரபலங்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் இந்த பாடலுக்கு தான் ஸ்டெப் போட்டு ஆடிக் கொண்டிருக்கிறார்கள். இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் இந்த பாடல் வெளியான காலத்தில் பிறக்காத இளம் ரசிகர்கள் கூட இப்போது பிரசாந்தின் பாடலுக்கு ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த வீடியோக்கள் நடிகர் பிரசாந்தின் கண்களிலும் பட்டு இருக்கிறது. பொதுவாக சோசியல் மீடியாவில் பெரிதாக ஆக்டிவாக இல்லாமல் இருந்த பிரசாந்த் சமீப காலமாக சோசியல் மீடியா பக்கத்தையும் கவனிக்க தொடங்கி இருக்கிறார். இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரசாந்த் வெளியிட்ட வீடியோவில், ரிசென்ட்டாக என்னுடைய ஹைர ஹைர ஹைரப்பா பாடலுக்கு நிறைய ரீல்ஸ் பார்த்தேன்.
நடிகர் பிரசாந்த் வீடியோ
எல்லோருடைய வீடியோவையும் ரொம்ப சந்தோஷமா பார்த்துட்டே இருந்தேன். நீங்களும் இந்த பாடலுக்கு டான்ஸ் ஆடுறீங்கன்னா இந்த வீடியோவை என்கிட்ட ஷேர் பண்ணுங்க.. நானும் பாக்குறேன் என்று ரசிகர்களிடம் கேட்டு இருக்கிறார். ஒரு காலத்தில் டிவி பேட்டிகளில் மட்டும் ரசிகர்களுடன் தொடர்பில் இருந்த ஹீரோ இப்போது நேரடியாக எனக்கு வீடியோக்களை அனுப்புங்க என்று கேட்டிருப்பதை பார்த்து ரசிகர்கள் குஷியாகி உள்ளனர்.
மேன் ஆப் தி மேட்ச் டாப் ஸ்டார் பிரசாந்த்! காலத்தை வென்ற 1998-ம் ஆண்டு தமிழ் திரைப்படங்கள்!
இன்றைய இளம் ரசிகர்களுக்கு பிரசாந்த் என்றால் சமீபத்திய படங்கள் தான் நினைவுக்கு வரலாம். ஆனால் 90களில் வளர்ந்தவர்களிடம் கேட்டுப்பாருங்கள், டாப் ஸ்டார் பிரசாந்துக்கு இருந்த ரசிகர்கள் கூட்டமே தனி. வைகாசி பொறந்தாச்சு படத்தில் தொடங்கிய அவரது சினிமா பயணத்தில் செம்பருத்தி, திருடா திருடா, ஜீன்ஸ், ஜோடி, கண்ணெதிரே தோன்றினால், பார்த்தேன் ரசித்தேன், வின்னர் என பல படங்களை ரசிகர்கள் இன்னும் நினைவில் வைத்திருக்கின்றனர்.
பிரசாந்தின் ஹிட் படங்கள்
குறிப்பாக 90ஸ்களின் இறுதியில் தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்தார். தன்னுடைய டான்ஸ் நடிப்பு என்று அன்றைய இளம் ரசிகர்களின் ஃபேவரைட் ஹீரோவாக வலம் வந்தவர். ஆனால் ஒரு கட்டத்திற்கு பிறகு அவருடைய சினிமா பயணத்தில் பெரிய இடைவெளி ஏற்பட்டது. அதுதான் இன்றும் அவரது ரசிகர்களுக்கு இருக்கும் வருத்தம்.
இப்போது அந்த நிலை மாறுவது போல தெரிகிறது.

பிரசாந்த் நடுவராக இருக்கும் நிகழ்ச்சி
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் பிரசாந்த் நடுவராக பங்கேற்று வருகிறார். அவருடன் சிம்ரன், சினேகாவும் அந்த நிகழ்ச்சியில் நடுவராக இருக்கின்றனர். சமீபத்தில் இதே மேடையில் சிம்ரன், பிரசாந்த் டான்ஸ் ஆடிய வீடியோக்கள் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. அதுபோல சினேகாவுடன் ஜீன்ஸ் படத்தின் அன்பே அன்பே பாடலுக்கு அவர் டான்ஸ் ஆடியதும் கவனம் பெற்றது.
டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் பிரசாந்த்
இந்த வீடியோக்கள் வெளியான பிறகு, இந்த பிரசாந்தைத்தான் நாங்கள் மிஸ் செய்தோம்.. இனி நீ ஸ்டைலாக வா தல என்று ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். இன்னும் ஒரு சிலர் இனி பிரசாந்த் தொடர்ந்து படங்களில் நடிக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்திருக்கின்றனர். சினிமாவில் ஒரு ஹீரோவுக்கு இரண்டாவது இன்னிங்ஸ் கிடைப்பது சாதாரண விஷயம் இல்லை. ஆனால் இப்போது ரீல்ஸ் கலாச்சாரம் ஒரு விசித்திரமான வேலையை செய்கிறது. பழைய பாடல்களை புதிய தலைமுறைகளுக்கும் கொண்டு செல்கிறது. அந்த பாடல் வழியாக பழைய நடிகர்களையும் மீண்டும் தேட வைத்து இருக்கிறது.













Click it and Unblock the Notifications