சூரசம்ஹாரம் முடிந்ததும் கொந்தளித்த பயணிகள்! திருச்செந்தூரில் சாலை மறியல் போராட்டம்! என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சூரசம்ஹாரம் நிகழ்ச்சி காண வந்திருந்த பக்தர்கள், மீண்டும் சொந்த ஊர்களுக்கு திரும்ப போதிய பேருந்துகள் இல்லை என கூறி சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு உண்டானது. திருச்செந்தூர் வீரபாண்டியப்பட்டினத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பக்தர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழாவில் இன்று முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் கோலாகலமாக நடந்து முடிந்தது. இதற்காக திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள் சூரனை முருகப்பெருமான் வதம் செய்தததை நேரில் கண்டுகளித்தனர். இதற்காக காலை முதலே பக்தர்கள் கடற்கரை அருகே குவிந்தனர். இதனால் இன்று திருச்செந்தூரே விழாக்கோலம் பூண்டு இருந்தது.

Devotees stage road blockade in Tiruchendur after soorasamharam citing inadequate bus services

திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழாவை காண நெல்லை, தென்காசி, மதுரை, ராமநாதபுரம் என தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். விரதம் இருந்து கந்த சஷ்டி காண ஏராளமான பக்தர்கள் வருகை தருகிறார்கள். இன்று சூரசம்ஹாரம் என்பதால் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்தனர். இதற்காக 300-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன. தற்காலிக பேருந்து நிலையங்களும் ஆங்காங்கே அமைக்கப்பட்டன.

காலை முதலே பஸ்கள், ரயில்களில் கூட்டம் அலைமோதியது. நெல்லை - திருச்செந்தூர் இடையே இயக்கப்பட்ட ரயில்களிலும் கூட்டம் அலைமோதியது. நடைமேடை முழுவதும் பக்தர்கள் நிரம்பி காணப்பட்டனர். இந்நிலையில் சூரசம்ஹாரம் முடிந்து பக்தர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு இன்று இரவு கிளம்பினர். ஆனால் பஸ்கள் முழுக்க கூட்டம் நிரம்பி வழிந்தது. தொடர்ந்து பஸ்கள் வராததால் பக்தர்கள் அவதியடைந்தனர்.

இதனால் ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த பக்தர்கள் சொந்த ஊர் போக போதிய பஸ்கள் இல்லை என குற்றஞ்சாட்டி சாலை மறியலில் ஈடுபட்டனர். கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என கோரிக்கை வைத்து கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து அங்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து பேருந்துகள் வரவைக்கப்பட்டு பஸ்களில் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த போராட்டத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு உண்டானது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+