இந்தியாவை அவமதிக்கும் போது யாராவது சிரிப்பாங்களா? ராகுல் காந்தியை விடாமல் விளாசும் பாஜக!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: வெளிநாட்டை சேர்ந்தவர் இந்தியாவை அவமதிக்கும் போது யாராவது சிரிப்பதை பார்த்து இருக்கிறீர்களா? என்றும், இந்தியாவின் அரசியல் விவகாரங்களுக்குள் வெளிநாட்டு அரசியல் பிரதிநிதிகள் தலையிடுவதற்கு ராகுல் காந்தி இடம் கொடுப்பதாகவும் பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது.

ஐதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இத்தாலியை சேர்ந்த அரசியல் பிரமுகரான ஜியாகோமோ பிலிபிக், ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் எழுப்பி வரும் வாக்கு திருட்டு விவகாரம் பற்றி பேசினார். இதற்கு ராகுல் காந்தி கைதட்டி சிரித்த நிலையில், பாஜக கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகிறது.

Rahul Gandhi laughs BJP Slams Congress

வாக்கு திருட்டு என சொன்ன இத்தாலி தலைவர்

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பாரத் உச்சி மாநாடு எனப்படும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, இத்தாலியில் உள்ள ஐரோப்பிய சோசலிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் ஜியாகோமோ பிலிபெக் உள்ளிடோர் பங்கேற்றனர்.

நேற்று இந்த நிகழ்ச்சியில் பேசிய இத்தாலி தலைவர் ஜியாகோமோ பிலிபெக், வாக்குத் திருடர்களே, பதவியை விட்டு வெளியேறுங்கள் என்று பொருள் படும் வகையில் "VOte Chor, Gaddi Chhod" என கோஷம் எழுப்பினார். ஜியாகோமோ பிலிபிக் மேலும் கூறுகையில், "கல்வி சீர்திருத்தம், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள், இளைஞர்கள், மாணவர்கள் வீதிகளில் இறங்கி போராடுகிறார்கள். அதன் மையத்தில் காங்கிரஸ் கட்சியும், ராகுல் காந்தியும் நிற்கிறார்கள்"என்று கூறினார்.

இந்தியாவை அவமதிக்கும் போது சிரிப்பார்களா?

ஞானேஷ் குமார் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் பயன்படுத்தும் வாக்கு திருட்டு என்ற கோஷத்தை இத்தாலியை சேர்ந்த ஜியாகோமோ பிலிபெக் பயன்படுத்தி பேசிய நிலையில், அதனை கேட்டு கொண்டு இருந்த ராகுல் காந்தி சிரித்தார். இந்தியாவில் நடக்கும் ஒரு பிரச்சினை குறித்து வெளிநாட்டு அரசியல் தலைவர் பேசியது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

இது குறித்து மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறுகையில், "வெளிநாட்டை சேர்ந்தவர் இந்தியாவை அவமதிக்கும் போது யாராவது சிரிப்பதை பார்த்து இருக்கிறீர்களா? வெளிநாட்டுக்கு சென்று இந்தியாவை அவமதிக்கும் இந்தியரை பற்றி நான் கேட்கவில்லை" என்று பதிவிட்டுள்ளார்.

இந்தியாவை அவமதிக்கவே ராகுல் வெளிநாடு போறார்

மகராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய அமித்ஷாவும் இந்த விவகாரத்தை கையில் எடுத்தார். அமித்ஷா கூறுகையில், "இந்தியா முழுவதிலும் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் இடதுசாரி சித்தாந்தத்தை பின்பற்றுபவர்களை காங்கிரஸ் கட்சி அழைத்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் இளவரசரும் அதில் பங்கேற்றார்.

சர்வதேச மாநாட்டில் இந்தியாவுக்கு எதிராக கருத்துக்களை கூறி நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் ராகுல் செயல்பட்டார். 3 லோக்சபா தேர்தல்களில் தோல்வி அடைந்த விரக்தியை காங்கிரஸ் கட்சி வெளிப்படுத்தி வருகிறது. இந்தியாவை சர்வதேச மன்றங்களில் அவமதிக்கவே ராகுல் காந்தி வெளிநாடு பயணம் மேற்கொள்கிறார்" என்று கூறினார்.

ராகுல் காந்தி பேசியது என்ன?

முன்னதாக நேற்று இந்த மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி, இந்தியா ஒரு ஜனநாயக நாடாக இல்லை என்று விமர்சித்து இருந்தார். ராகுல் கூறியதாவது:- "உண்மையில் இந்தியா ஜனநாயக நாடாக இல்லை. பாஜக ஆட்சிக்கு வந்த 2014 ஆம் ஆண்டிலேயே நாட்டின் ஜனநாயக கட்டமைப்பு அழிக்கப்பட்டுவிட்டது" என்று விமர்சித்து பேசியிருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+