China: சத்தமில்லாமல் வேலையை காட்டும் சீனா! பாகிஸ்தானுக்கு அதி நவீன டாங்கிகள்? உன்னிப்பாக கவனிக்கும் இந்தியா

Subscribe to Oneindia Tamil

பீஜிங்: பாகிஸ்தான் ராணுவம் சீனாவிடம் இருந்து வாங்கி விடி 4 என்ற ராணுவ டாங்கிகளை பயன்படுத்தி வருகிறது. இந்நிலையில் இந்த டாங்கிகளில் கூடுதல் மேம்பட்ட சென்சார் அமைப்புகள் உள்ளிட்டவற்றுடன் இணைத்து சீனா தயாரித்துள்ளது. சீனாவிடம் இருந்து அயுதங்களை வாங்கி வைத்துள்ள பாகிஸ்தான், இந்த மேம்படுத்தப்பட்ட ராணுவ டாங்கிகளை வாங்க இருக்கிறதா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், இந்தியா இந்த நகர்வுகளை எல்லாம் உன்னிப்பாக கவனித்து வருவதாக தெரிகிறது.

இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றாக சீனா உள்ளது. தெற்கு ஆசியாவில் தன்னை யாராலும் அசைக்க முடியாத வல்லரசாக திகழ வேண்டும் என்ற சீனாவின் கனவிற்கு இந்தியா சிம்ம சொப்பனமாக விளங்குகிறது. இதனால், இந்தியா மீது காட்டத்தில் இருக்கும் சீனா, இந்தியாவுக்கு பல்வேறு வகைகளிலும் நெருக்கடியை கொடுக்க முயன்று வருகிறது.

China upgraded the VT-4 battle tank already used by the Pakistan Army India closely watching

சென்சார் வசதியுடன் கூடிய டாங்கிகள்

குறிப்பாக இந்தியாவை சுற்றியுள்ள நாடுகளை தங்கள் கைக்குள் போட்டுக்கொள்ள துடிக்கிறது. சீனாவின் இந்த விருப்பத்திற்கு அழையா விருந்தாளியாக எப்போதுமே பாகிஸ்தான் இருந்து வருகிறது. இந்தியாவுடன் பகமை காட்டும் பாகிஸ்தான், சீனாவுடன் அதீத நெருக்கம் காட்டிக்கொண்டு அந்த நாட்டிடம் நிதி உதவி, ஆயுத தொழில்நுட்பங்களை பெற்று வருகிறது.

பாகிஸ்தான் ராணுவத்தில் பயன்பாட்டில் உள்ள சில முக்கிய தளவாடாங்கள் சீனாவிடம் இருந்து பெற்றவையாகவே உள்ளது. அந்த வகையில் சீனாவிடம் இருந்து விடி 4 என்ற ராணுவ டாங்கிகளை பாகிஸ்தான் வாங்கி பயன்படுத்தி வருகிறது. இந்த ராணுவ டாங்கியை தற்போது சீனா மேம்படுத்தியுள்ளது. மேம்படுத்தப்பட்டுள்ள இந்த டாங்கிகளில் கூடுதல் தடிமனான கவசப் பாதுகாப்பு, அதிக திறன் கொண்ட துப்பாக்கி மற்றும் எதிரிகளின் தாக்குதல்களை முன்கூட்டியே கண்டறியும் புதிய சென்சார்கள் உள்ளிட்ட வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

ராணுவ ஆயுத தொகுப்பில் சேர்க்க உள்ளதா?

இந்த மேம்படுத்தப்பட்ட புதிய ரக டாங்கிகளை பாகிஸ்தான் தனது ராணுவ ஆயுத தொகுதிப்பில் சேர்க்க உள்ளதா? என்பது பற்றியோ அதனை வாங்க ஆர்வம் காட்டுகிறதா? என்பது பற்றியோ தெளிவான எந்த ஒரு விவரமும் தற்போது வரை கிடைக்கவில்லை. சீனா மேம்படுத்திய தொழில் நுட்பத்துடன் தயாரித்துள்ள இந்த டாங்கிகள் VT-4B- என அழைக்கப்படும் என நம்பப்படுகிறது.

டிசம்பர் 7 முதல் 13 ஆம் தேதி வரை சீனாவின் ஜுஹாய் நகரில் நடைபெற உள்ள சர்வதேச விமானக் கண்காட்சியில் இதனை காட்சிப்படுத்த சீனா திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. VT-4 ரக டாங்கி சீனா, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக உருவாக்கிய ஒரு ஆயுதம் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பாகிஸ்தான், தாய்லாந்து மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளின் ராணுவத்தில் இந்த ரக டாங்கிகள் பயன்பாட்டில் உள்ளன.

பாகிஸ்தான் ஒப்பந்தம்

சீனாவிடம் இருந்து மேலும் 679 VT-4 ரக போர் டாங்கிகளை வாங்குவதற்கு பாகிஸ்தான் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த டாங்கிகளை பாகிஸ்தானிலேயே அசெம்பிள் செய்து, சீனாவின் உரிமத்தின் கீழ் உற்பத்தி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இந்த டாங்குகள் 'ஹைதர்' என்ற பெயரில் தயாரிக்கப்படுகின்றன. இந்த நிலையில்தான் இந்த மேற்கூறிய டாங்கியின் மேம்பட்ட வடிவத்தை சீனா உருவாக்கியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+