திமுக - அதிமுக கூட்டணி? எடப்பாடியை காலி பண்ணி.. தொண்டர்களை தெருவில் விட்ட டிடிவி! சிடிஆர் அட்டாக்!
மதுரை: அதிமுக திமுக கூட்டணி கூட நியாயம் தான் என பேசி இருந்தார் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன். இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமியை காலி செய்வேன் என தனி கட்சி ஆரம்பித்து, தற்போது அமமுக தொண்டர்களை நடுத்தெருவில் விட்டவர் தான் டிடிவி தினகரன் என அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் பதிலடி கொடுத்துள்ளார். மேலும் இனிமேல் டிடிவி தினகரன் பேசாமல் இருப்பதுதான் நல்லது எனவும் கூறியுள்ளார்.
மதுரையில் இன்று டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது பாஜகவை எதிர்ப்பதற்காக தவெகவும் திமுகவும் ஒரே அணியில் வரவேண்டும் என திருமாவளவன் கூறி இருப்பதை அரசியல் கருத்தாகவே தான் பார்ப்பதாக கூறியிருந்தார்.

மேலும்," அதிமுக திமுக ஒன்றிணைமா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. அரசியல் சூழலை யார் வேண்டுமானாலும் சேர்க்கும். தவெக கூட்டணியில் திமுக கூட்டணியில் இருந்தவர்கள் இருப்பது நியாயம் என்றார்.அதிமுக திமுக கூட்டணியும் நியாயம் தான் என பேசியிருந்தார்.
சிடிஆர் நிர்மல் குமார்
இந்த நிலையில் டிடிவி தினகரனின் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார் தமிழக மின்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார். திருநகரியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்," திமுக அமைச்சர்கள் தற்போது அப்ஸ்காண்டில் உள்ளார்கள். இந்த நேரத்தில் யாராவது லண்டன் போவார்களா? ஸ்டாலின் லண்டன் சென்று விட்டார். யார் எப்படி போனால் என்ன குடும்பத்துடன் லண்டனுக்கு சுற்றுலா சென்று விட்டார். திமுக அதிமுகவின் சேர்ந்தவர்கள் அடுத்த உள்ளாட்சித் தேர்தலில் மக்களை சந்திக்கவே முடியாது.
தமிழக வெற்றிக் கழகம்
இரண்டு கட்சியும் சுயநலமாக எடுத்த முடிவால் பலர் மாற்றுக் கட்சியிலிருந்து வந்து இணைகின்றனர். கட்சியில் என்ன நோக்கத்தோடு சேர்கிறீர்களோ உங்களுக்கு அனைத்து கௌரவம் மரியாதை கொடுக்கப்படும். மக்களோடு பயணிக்க கூடிய ஒரே கட்சி தமிழக வெற்றி கழகம் தான். உள்ளாட்சித் தேர்தலில் தமிழக முழுவதும் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் அனைத்து இடங்களிலும் நின்று மக்களின் பெருவாரியான ஆதரவோடு வெற்றி பெறுவார்கள்.
எடப்பாடி பழனிசாமி
எப்போது, எடப்பாடியும் ஸ்டாலினும் எப்போது சேர்ந்து பயணிக்க முடிவு செய்தார்களோ அதுதான் இந்த பிரச்சனை தொடங்கியது. டிடிவி தினகரன் எதற்கு கட்சி தொடங்கினார். எடப்பாடி காலி செய்ய வேண்டும் துரோகி எடப்பாடி துரோகி பன்னீர்செல்வம் என்று சொல்லி தான் கட்சியை தொடங்கினார். ஒன்பது ஆண்டு பன்னீர்செல்வத்தை துரோகி என்று சொல்லிவிட்டு அவரை முதல்வராக அவர் ஒரே எம்எல்ஏவை கவர்னர் மாளிகைக்கு அழைத்து சென்றார்.
டிடிவி தினகரன்
அவர் பேசலாமா? இது நியாயமா. அவருடன் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்டோர் பயணித்தனர். இன்று நடுத்தரவில் அவரால் நிற்கின்றனர். எடப்பாடியும் ஸ்டாலினும் ஒன்றாக சேர்ந்து பயணிக்க வேண்டும் என்று மக்கள் கொடுத்த தீர்ப்பை எங்கள் தலைவர் முதல்வராக வேண்டும் என்று தான் மக்கள் தீர்ப்பு கொடுத்தார்கள். மக்களை ஏமாற்ற இவர்கள் நடந்து கொண்டதால்தான் அந்த கூட்டணியில் இருந்து நேர்மையாக பயணிக்க முடியாமல் வெளியே வந்தனர்.
முக ஸ்டாலின்
ஸ்டாலினே, காதர் மொஹைதீன் உள்ளிட்டவர்களுக்கு போன் செய்து எடப்பாடி முதல்வராக வேண்டும் என்று சொன்னார்கள். இதை விட கேவலமான செயல் உண்டா. அண்ணன் டிடிவி இருக்கு எல்லாம் புரியும் அவர் காலத்திற்கு ஏற்றார் போல மாற்றி பேசுகிறார். அவரின் போதாத காலம் யாரை எதிர்த்து தொடங்கினாரோ அந்த எடப்பாடி முதல்வராக்க கவர்னர் மாளிகை போல் நின்றார். கொஞ்ச நாள் அவர் பேசாமல் இருந்தால் அவருக்கு மரியாதை இருக்கும்." என்றார்.












Click it and Unblock the Notifications