அவங்க வேண்டாம்.. நீங்க வாங்க! பாமகவை நெருங்கும் பனையூர்! அமைச்சராகும் செளமியா? மாற்றி யோசித்த விஜய்!
சென்னை: தமிழகத்தில் புதிய கூட்டணி அமைவதற்கான சூழல்கள் அரங்கேற தொடங்கி இருக்கிறது. விசிக, கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து விஜய் அரசுக்கு எதிராக பேசிய வரும் நிலையில் பாமக உடன் விஜய் தரப்பு ஏற்கனவே பேசி உள்ளதாக தகவல் வெளியான நிலையில் தற்போது கூட்டணியை இறுதி செய்வதற்கான வேலைகள் நடந்து வருகிறதாம். சௌமியா அன்புமணிக்கு அமைச்சர் பதவி உடன் இரண்டு வாரிய தலைவர் பதவிகளை தர விஜய் தரப்பு ஒப்புக் கொண்டுள்ளதாகவும் விரைவில் கூட்டணி இறுதி செய்யப்படலாம் என்கின்றன பனையூர் வட்டாரங்கள்.
2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழகம் எதிர்பாராத பல முடிவுகள் வெளிவந்தது. தமிழகத்தை அதிக முறை ஆண்ட கட்சியான அதிமுக மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது அதிர்ச்சி என்றால், ஆளும் கட்சியான திமுக எதிர்க்கட்சியாக மாறியது.

எல்லாவற்றையும் விட திமுக தலைவரும் முதலமைச்சராக இருந்த முக ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரிலேயே தோல்வி அடைந்தார். அதுமட்டுமல்லாமல் துரைமுருகன், அன்பில் மகேஷ், மா.சு உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் தோல்வியைச் சந்தித்தனர். 15க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் தோல்வியடைந்தனர்.
தவெக
காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேமுதிக, மக்கள் நீதி மய்யம், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, கொங்கு இளைஞர் பேரவை, மனிதநேய மக்கள் கட்சி, உள்ளிட்ட பெரிய - சிறிய கட்சிகளோடும், 26 அமைப்புகளின் பிரம்மாண்ட கூட்டணியோடு தேர்தலில் களம் கண்ட திமுக மிகப்பெரிய பின்னடைவை சந்தித்தது. உண்மையிலேயே இது நமக்கு மிகப்பெரிய தோல்விதான் என திமுக தலைவர் ஸ்டாலினே கூறியிருந்தார்.
முதல்வர் விஜய்
அதுமட்டுமல்லாது பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணியோடு களம் கண்டாலும் அதிமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. அதே நேரத்தில் எந்த கட்சியின் ஆதரவும் இன்றி தனித்து களம் கண்ட தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. அதுமட்டுமல்லாமல் போட்டியிட்ட 234 தொகுதிகளிலும் டெபாசிட்டை தக்க வைத்து மாபெரும் வரலாற்றுச் சாதனை புரிந்தது. ஆட்சி அமைக்க போதிய பெரும்பான்மை கிடைக்காத நிலையில் திடீர் திருப்பமாக காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், 2 கம்யூனிஸ்ட்கள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.
விசிக - கம்யூனிஸ்ட்கள்
விஜய் முதலமைச்சராக பதவி ஏற்ற நிலையில், கம்யூனிஸ்டுகள் கூட்டணியில் பங்கேற்கவில்லை. அதே நேரத்தில், விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் இடம் பெற்றன. அதே நேரத்தில் கூட்டணியில் இருந்தாலும் விஜயை விமர்சிக்க கம்யூனிஸ்டுகளும், விடுதலை சிறுத்தைகளும் தவறவில்லை. ராதன் பண்டிட் நியமனம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் வெளிப்படையாகவே விடுதலை சிறுத்தைகளும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
அதிமுக
அதிமுகவின் எம்எல்ஏக்கள் சிலர் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தர தயாராக இருந்தாலும் கட்சி தாவல் தடை சட்டத்தால் அதற்கு சிக்கல் எழுந்தது. இந்த நிலையில் கூடுதல் பெரும்பான்மை கிடைக்கும் என்ற நோக்கில் பாமகவை நோக்கி விஜய் தரப்பு நகர்ந்து இருக்கிறது. விஜய் அரசு பொறுப்பேற்றதிலிருந்து பாமக தரப்பும் இணக்கமாகவே சென்று வருகிறது. நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணிக்காமல் அதே நேரத்தில் எதிர்க்காமலும் நடுநிலை வகித்தது பாமக. விஜயின் சாதிவாரி கணக்கெடுப்பு, மேகதாது அணை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை விஜயை வெகுவாக பாராட்டினார் அன்புமணி.
பாமக
இந்த நிலையில் கூட்டணி அமைப்பதற்கான அச்சாரம் தான் இந்த பாராட்டுரைகள் என்கின்றனர். இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகியவை வெளியில் இருந்து ஆதரவு தரும் நிலையில் அந்த இரு கட்சிகளுக்கும் தலா இரண்டு எம்எல்ஏக்களின் பலம் மட்டுமே இருக்கிறது. அதே நேரத்தில் இரு கட்சிகளின் பலத்தையும் சேர்த்து பாட்டாளி மக்கள் கட்சி நான்கு எம்எல்ஏக்களை வைத்திருக்கிறது. இதனால் இரண்டு கட்சிகளை சமாளிப்பதை விட ஒரு கட்சியின் ஆதரவை பெறுவது நல்லது என நினைக்கும் பனையூர் வட்டாரம்.
சௌமியா அன்புமணி
பாமகவை கூட்டணிக்குள் கொண்டு வருவதற்காக பேச்சுவார்த்தைகளை ஏற்கனவே தூங்கிவிட்டதாம். அது மட்டும் அல்லாமல் சௌமியா அன்புமணிக்கு அமைச்சர் பதவி இரண்டு வாரிய தலைவர் பதவி என தற்போது முதற்கட்ட பேச்சு வார்த்தைகள் துவங்கி இருக்கிறது என்றும் விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என்கின்றனர் பனையூர் வட்டாரத்தினர்.












Click it and Unblock the Notifications