30 நொடியில் 195 முத்தம்.. பிரேசில் ஜோடி உலக சாதனை.. நெஞ்சை நெகிழ வைக்கும் காரணம்! இது காதலின் உச்சம்

Subscribe to Oneindia Tamil

பிரேசிலியா: காதலும், சாதிக்க வேண்டும் என்ற வெறியும் இருந்தால், எப்பேர்ப்பட்ட சவாலையும் முறியடிக்க முடியும் என்பதை பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஒரு ஜோடி நிரூபித்து காட்டியிருக்கிறது.. பிரேசிலின் சாவோ பாலோ நகரத்தைச் சேர்ந்த இந்த ஜோடி, வெறும் 30 நொடிகளில் ஒருவருக்கொருவர் 195 முறை முத்தமிட்டு, மிகக் குறைந்த நேரத்தில் அதிக முத்தங்கள் கொடுத்த ஜோடி என்ற புதிய உலக கின்னஸ் சாதனையை படைத்துள்ளனர்.. வெறும் அரை நிமிடத்தில் உலக சாதனையை நிகழ்த்தியுள்ள இந்த ஜோடி பற்றிதான் சோஷியல் மீடியா முழுவதும் பேச்சாக உள்ளது.

சமூக வலைத்தளங்களில் பல்லாயிரக்கணக்கானோரால் பார்க்கப்பட்டு மிக வேகமாக வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் இந்த அசாத்தியமான வேகத்தைப் பார்த்து தங்களது வாழ்த்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

Brazil Couple World Record 195 Kisses 30 Seconds Guinness World Record Brazil Love Story Viral News Couple Kissing Record 195 30

இந்த கின்னஸ் சாதனையை நிகழ்த்தியவர்கள் 32 வயதான ரெனாட்டோ பேமா கையா மற்றும் அவரது காதலியான 33 வயது நயாரா ரோபர்ட்டா ரிபெயிரோ டி மரின்க்ஸ் என்பவரும் ஆவர்.

காதலிக்கு அரை நிமிடத்தில் 195 முத்தம்

இவர்கள் 2 பேரும் கடந்த ஒன்றரை வருஷமாக காதலித்து வருகிறார்களாம்.. இருவருமே மருத்துவத்துறையில் டாக்டர்களாக பணியாற்றி வருகிறார்கள்.. உலகையே உலுக்கிய கொரோனா பெருந்தொற்று காலத்தில், முதன்மை பணியாளர்களாக களத்தில் நின்று பல உயிர்களை காப்பாற்றியவர்கள்.. இத்தனை பெருமை மிக்க இந்த ஜோடி, தங்களது அபரிமிதமான காதலையும் முத்தம் தந்து கின்னஸ் புத்தகத்திலும் பெயரைப் பொறித்துள்ளனர்.

கின்னஸ் உலக சாதனை அமைப்பு இந்த வீடியோவை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.. அந்த வீடியோவை பார்ப்பதற்கே ஆச்சரியமாக உள்ளது.. அந்த வீடியோவில், ரெனாட்டோ தனக்கு மிகவும் பிடித்த கால்பந்து அணியான சாவோ ஜோஸ் இ.சி. ஜெர்சியை அணிந்துகொண்டு, காதலி நயாராவின் கன்னத்தில் முத்தமழையை பொழிந்து தள்ளுகிறார்.. நயாராவும் பொறுமையுடனும், சிரித்தபடியே அந்த முத்தங்களை பெற்றுக் கொள்கிறார்..

195 முத்தங்கள் தந்த இளைஞர்

இவர்கள் 2 பேரும் இந்த முத்த சவாலில் ஈடுபட்டபோது, கின்னஸ் அதிகாரிகள் அங்கிருந்த கடிகாரம் மூலமாக நேரத்தை ஷார்ப்பாக கணக்கிடுகிறார்கள்.. சரியாக 30 நொடிகள் முடிந்ததுமே, இவர்கள் 195 முத்தங்களை தந்து முடித்திருப்பது உறுதி செய்யப்பட்டு, புதிய உலக சாதனையாக அறிவிக்கப்படுகிறது.

இந்த வீடியோதான் சோஷியல் மீடியாவில் வெளியாகி பல்லாயிரக்கணக்கானோரால் ஈர்க்கப்பட்டு வருகிறது.. நெட்டிசன்களும் இந்த ஜோடிக்கு தங்களது வாழ்த்துக்களை கமெண்ட்களாக பதிவிட்டு வருகிறார்கள்.

தன்னுடைய இந்த சாதனை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரெனாட்டோ, "இந்த சாதனை எங்களது காதலின் ஆழத்தை மட்டுல்ல, எங்கள் 2 பேருக்கும் இடையிலுள்ள புரிதலையும், ஒற்றுமையையும் உலகிற்கு காட்டவே நினைத்தோம்.. நாங்கள் 2 பேருமே சாதாரண தம்பதியினர் கிடையாது.. உலகின் மிகச்சிறந்த ஜோடி என்பதை அடையாளப்படுத்தவே, இந்த சவாலை எதிர்கொண்டோம்" என்று நெகிழ்ந்து கூறுகிறார்.

குறைபாட்டை வெல்லும் சாதனை

ஆனால், ரெனாட்டோவுக்கு "ஏடிஎச்டி" என்ற குறைபாடு உள்ளதாம்.. அதாவது கவனக்குறைவு, மிகையான செயல்பாட்டு குறைபாடால் பாதிக்கப்பட்டவர்.. ஆனாலும் முறையான பயிற்சியும், தீவிரமான மன உறுதியும் இருந்தால் ஒருவரால் எதையும் சாதிக்க முடியும் என்பதை நிரூபிக்கவே இந்த முத்த சவாலை எதிர்கொள்ள நினைத்தாராம்.

ரெனாட்டோ, இந்த முத்த சாதனையை மட்டுமே நிகழ்த்தவில்லை.. டேக்வாண்டோ தற்காப்பு கலையில் பிளாக் பெல்ட் பெற்றவர் ரெனாட்டோ.. தகுதியுடைய எலும்பு மஜ்ஜை தானம் செய்பவரும் கூட.. ஏற்கனவே 10 புத்தகங்களை வேகமாக அடுக்குவது, கால்களை அதிக கோணத்தில் திருப்புவது என ஏகப்பட்ட கின்னஸ் சாதனைகளை நடத்தியிருக்கிறார்.. இதன் மூலம் பிரேசிலிலேயே அதிக உலக சாதனைகளை வைத்திருக்கும் நபராகவும் மாறியிருக்கிறார்.

277 முத்தங்கள்

தனது சாதனை பயணத்தில், காதலி நயாராவின் பெயரும் இடம்பெற வேண்டும் என்பதற்காகவே, இந்த முத்த சவாலை கையிலெடுத்தாராம்.. அதற்காக இந்த ஜோடி இத்துடன் தங்களது சாதனையை நிறுத்திக்கொள்ளப் போவதில்லை.. ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஜோடி 277 முத்தங்களுடன் வைத்துள்ள "ஒரு நிமிடத்தில் அதிக முத்தங்கள்" என்ற உலக சாதனையை அடுத்ததாக முறியடிக்க இப்போதே ரெடியாகி வருகிறார்களாம்.

ஆக, மன உறுதியும், பரஸ்பர புரிதலும் ஒன்றுசேருமபோது, எந்தவொரு குறையும் சாதனைக்கு தடையாக இருப்பதில்லை என்பதை இந்த பிரேசில் ஜோடி உலகிற்கு நிரூபித்துள்து... சபாஷ்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+