சென்னையிலிருந்து நேபாளம் சென்ற 49 பேரின் உடை, பெட்டிகளை சிசிடிவியில் பார்த்தோம்! ஏஜென்சி ஓனர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை குரோம்பேட்டையில் இருந்து யாத்திரை சென்ற 49 பேரின் நிலை இதுவரை தெரியவில்லை என சுற்றுலா ஏஜென்சி உரிமையாளரின் தந்தை உருக்கமாக பேட்டி அளித்துள்ளார்.

சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த மகாதேவ் கைலாஷ் யாத்திரா நிறுவனர் சத்தியநாராயணாவின் தந்தை மாறவேல் நாகப்பன் செய்தியாளரிடம் பேசியதாவது: எங்கள் நிறுவனத்தின் உரிமையாளர் என் மகன் சத்தியநாராயணா, இவர் தலைமையில் 49 பேர் கைலாய யாத்திரை சென்று திரும்போது நேபாள- திபெத் எல்லையில் உள்ள சீன குடியுரிமை (Immigration) அலுவலகத்தில் தான் இருந்தனர்.

nepal floods chennai

மேலும் அங்கு வெளியான சிசிடிவியில் குரோம்பேட்டையில் இருந்து சென்ற குழுவினரின் உடை தெரிகிறது. மேலும் அவர்கள் கொண்டு சென்ற பெட்டிகள் கிடைப்பதை காணமுடிந்தது.

அங்கு பெரிய அளவிலான வெள்ளம் ஏற்பட்டு 50 முதல் 80 அடி உயரத்திற்கு கிராமங்களை அடித்து சென்றது. நேபாள நாட்டினர் மட்டும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தங்கள் சார்பிலும், குடும்பத்தினர் சார்பிலும், நேரில் சென்று காத்மண்டுவில் இருந்து சம்பவம் நடைபெற்ற 120 கி.மீ. தூரம் செல்ல முடியால் 80 கி.மீ. வரை சென்றுள்ள பார்த்தோம். அங்கு நேபாள அரசு மருத்துவமனைகளில் மீட்கப்பட்ட உடல்கள், புகைப்படங்களில் 49 பேரின் தகவல்கள் இல்லை என்றார்.

மேலும் வெள்ளத்தால் சாலைகள் இரண்டாக பிளந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் இங்கு இருந்து சென்றவர்கள் ஹெலிகாப்டரை வாடகை எடுத்து தேட முடிவு செய்தோம். ஆனால் ஹெலிகாப்டர் கிடைக்கவில்லை. அதனால் மீண்டும் சொந்த ஊர் திரும்பிவிட்டோம் என்றார்.

இந்த பாதிப்பு குறித்து சீன பகுதியில் நடைபெற்ற மீட்பு பணி என்ன, அதில் நமது யாத்திரை குழுவினர் மீட்கப்பட்டுள்ள்னரா? அவர்கள் அளிக்கும் அதிகாரப் பூர்வ தகவலை எதிர்ப்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.

நேபாள நாட்டில் கோஷி ஆற்றில் கடந்த 26 ஆம் தேதி திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் சிக்கிய 700-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டனர். 3000 பேர் நிலை குறித்து தெரியவில்லை. தமிழகத்தில் இருந்து 319 பேர் ஆன்மீக யாத்திரை சென்றனர். இவர்களில் சிலர் தாயகம் திரும்பினர். மீதியுள்ளவர்களின் நிலை தெரியவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+