நடிகர் விஷாலுக்கு என்ன ஆச்சு? கைகள் நடுக்கம்.. வீடியோ பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி
சென்னை: சுந்தர் சி இயக்கத்தில் உருவான மதகஜராஜா திரைப்படம் பல ஆண்டுகளுக்கு பிறகு இப்போது ரிலீஸ் செய்யப்பட்ட இருக்கிறது. இந்த பட புரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் விஷால், கைகள் நடுக்கத்துடன், தடுமாற்றத்துடன் பேசும் வீடியோ சோஷியல் மீடியாவில் பரவி வருகிறது. இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் பலரும் விஷாலுக்கு என்ன ஆனது என்று அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷால். செல்லமே திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆன இவர் சண்டக்கோழி, தாமிரபரணி என பல ஹிட் படங்களை கொடுத்து டாப் நடிகளில் ஒருவராக உள்ளார். நடிகர் சங்க பொதுச்செயலாளராகவும் இருக்கும் விஷால் படு ஆக்டிவாக இயங்க கூடியவர்.

நடிகர் விஷால் நடிப்பில் கடைசியாக படம் திரைக்கு வந்த நிலையில் வரும் 12 ஆம் தேதி மதகஜ ராஜா படம் நாங்களும் போட்டிக்கு வரலாமா? என ரீ ரீலிஸ் ஆக உள்ளது. இந்த படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், சென்னையில் பிரி ரீலிஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடிகர் விஷால், டைரக்டர் சுந்தர் சி, உள்ளிட்டோர் பங்க்கேறனர்.
இந்த நிகழ்ச்சியை பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் டிடி தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் நடிகர் விஷால் பேசினார். விஷாலிடம் அவர் பல்வேறு கேள்விகளை கேட்டுக்கொண்டு இருந்தார். பேசிக்கொண்டு இருக்கும் போது, நடிகர் விஷாலின் கைகள் பயங்கரமாக நடுங்கியது. இது தொடர்பான காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகிறது.
ஆக்ஷன் ஹீரோவாக பட்டையை கிளப்பிய விஷாலை இப்படி பார்க்க வருத்தமாக இருக்கிறது என அவரது ரசிகர்கள் சிலர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். அதேபோல, விஷால் தனது உடல் நலனில் கொஞ்சம் அக்கறை காட்ட வேண்டும் என அவருக்கு அட்வைஸ் செய்யும் விதமாக பதிவிட்டு வருகிறார்கள்.
விஷாலுக்கு கை நடுக்கம் மட்டும் இன்றி குரலும் நடுக்கத்துடன் தான் உள்ளது எனவும் சில நெட்டிசன் கள் பதிவிட்டு வருகிறார்கள். இந்த நிலையில் அவருக்கு காய்ச்சல் அடிப்பதாகவும், பட புரோமசனுக்காக காய்ச்சலுடன் வந்ததால் தான் அவரது கைகள் நடுக்கம், குரலில் பதற்றம் இருந்ததாக கூறப்படுகிறது.
முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய விஷால் கூறியதாவது:- ஜெமினி பட தயாரிப்பு நிறுவனம் மீண்டும் முழுமையாக தயாரிப்பு பணிக்கு வர வேண்டும். இந்த ஆண்டில் சிறந்த நடிகருக்கான விருது எனக்கு கிடைக்காமல் போகலாம். ஆனால் சிறந்த பாடகருக்கான விருது கிடைக்கும். படப்பிடிப்பு சமயத்தில் நடந்த ஒரு விஷயத்தை நான் நினைவுகூற விரும்புகிறேன்.
விஜய் ஆண்டனி என்னிடம் வந்து , 'எனக்கு ஒரு பாடகர் தேவைப்படுகிறார். அவர் இனிமேல் பாடவேக்கூடாது. அப்படி ஒரு பாடகர், நீங்கள்தான்' என்றார்.. எனக் கூறினார். விஷால் இந்த நிகழ்ச்சியில் பேசும் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

மதகஜராஜா படத்தில், நடிகர் விஷால், வரலட்சுமி சரத்குமார், அஞ்சலி, சந்தானம் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். கடந்த 2012ம் ஆண்டிலேயே படப்பிடிப்பு நடைபெற்றது. 2013ம் ஆண்டில் இந்த படம் ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகவில்லை. இந்த நிலையில் தான் மிக நீண்ட தாமதத்திற்கு பிறகு அதாவது கிட்டதட்ட 13 ஆண்டுகள் கழித்து வரும் பொங்கல் ரேசில் களம் இறங்குகிறது.
மதகஜராஜா படம் தன்னுடைய கேரியரிலேயே தனக்கு மிகவும் பிடித்தமான படம் என்று விஷால் கூறியதால் அவரது ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி வெகு சிறப்பாக அமைந்துள்ளதாக டைரக்டர் சுந்தர் சி தெரிவித்துள்ளார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications