கேட் வழியே வந்தது யார்? கதறி அழுத கூல் சுரேஷ்! காணாமல் போன தந்தைக்கு என்னாச்சு-சிசிடிவியில் ட்விஸ்ட்
சென்னை: கூல் சுரேஷ் தனது அப்பாவை காணவில்லை என்று வீடியோ வெளியிட்டு இருந்த நிலையில் இது தொடர்பாக புதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.
கூல் சுரேஷ் சினிமா நடிகர். பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர்.. இப்போது சினிமா விமர்சனங்களும் செய்து வருகிறார்.
சிம்புவின் ரசிகரான இவர் வெந்து தணிந்தது காடு படத்திற்கு தனது சேட்டைகள் மூலம் சிறப்பான விமர்சனம் செய்தார். பொன்னியின் செல்வன் படத்திற்கு கூட அவர் குதிரையில் வந்து விமர்சனம் செய்தது குறிப்பிடத்தக்கது.

கூல் சுரேஷ்
இந்த நிலையில் கூல் சுரேஷ் தனது அப்பாவை காணவில்லை என்று வீடியோ வெளியிட்டு இருந்தார். எப்போதும் சந்தோசமாக இருக்கும் அவர் தனது அப்பாவை காணவில்லை என்று சோகமாக வீடியோ வெளியிட்டு இருந்தார். 30ம் தேதி அவர் இந்த வீடியோவை வெளியிட்டு இருந்தார். அதில் 29ம் தேதி என்னுடைய வாக்கிங் சென்றார். அவர் இன்னும் திரும்பி வரவில்லை.

என்ன ஆனது?
24 மணி நேரம் ஆகிவிட்டது. இன்னமும் என் அப்பா திரும்பி வரவில்லை. அவரை எங்காவது பார்த்தால் உடனே என்னிடம் தெரிவியுங்கள். அவருக்கு இப்போது 84 வயது. அவர் தினமும் வாக்கிங் செல்வார். அவருக்கு லேசாக காது கேட்காது. அவரை கண்டுபிடித்தால் உடனே இந்த எண்ணுக்கு போன் செய்யுங்கள் என்று அவர் வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில் போலீசார் போன் நம்பர் கொடுக்கப்பட்டு இருந்தது.

அப்பா என்னாச்சு?
இது தொடர்பாக போலீசுக்கும் அவர் தகவல் தெரிவித்து இருந்தார். இவரின் அப்பா தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகி இருந்தன. அதில் 29ம் தேதி காலை 10 மணிக்கு அவர் வாக்கிங் சென்றுள்ளார். மஞ்சள் உடை அணிந்து இருந்துள்ளார். அவர் மொட்டை அடித்து இருந்தார். இந்த அடையாளங்களை குறிப்பிட்டு அவரை கண்டுபிடித்து தரும்படி கூல் சுரேஷ் கோரிக்கை விடுத்து இருந்தார்.

வீடியோ வெளியானது
இந்த நிலையில்தான் தற்போது அவரின் அப்பா மீண்டும் வீட்டிற்கு வந்துவிட்டதாக கூறப்படுகிறது. இன்று அதிகாலை அவர் வீட்டிற்கு ஆட்டோ ஒன்று வந்துள்ளது. இதில் வயதான நபர் ஒருவர் இறங்கி உள்ளே செல்கிறார். இது கூல் சுரேஷ் அப்பா என்று கூறப்படுகிறது. அவருக்கு உடலில் பல இடங்களில் காயம் இருந்ததாக கூறப்படுகிறது. அவருக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை,

விசாரணை
40 மணி நேரமாக அவர் எங்கே போனார் என்றும் தெரியவில்லை. இவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது. வாக்கிங் சென்ற போது எங்காவது விழுந்துவிட்டாரா என்று விசாரிக்கப்பட்டு வருகிறது. அல்லது இவருக்கு காயம் ஏற்பட வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்றும் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் கூல் சுரேஷ் ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications