கீழே இருந்த மனோபாலாவின் உடல்.. கை, கால் விரல்களை கட்டிய உறவினர்கள்.. நடந்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் மனோபாலாவின் உடல் கீழே விழுந்து கிடந்துள்ளது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது. அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழும் காட்சி காண்போரை கலங்க செய்கிறது.

இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகத்திறமை கொண்டவர் மனோ பாலா. இவர் தமிழில் கிட்டதட்ட 700 படங்களுக்கு மேல் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். பெரும்பாலும் இவர் காமெடி டிராக்கில் நடிப்பார்.

what happened to Director Manobala?

இவர் தனது யூடியூப் சேனல் மூலம் பிரபலங்களை பேட்டி எடுத்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு அண்மையில் அவருக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இதிலிருந்து குணமடைந்த அவர் வீடு திரும்பினார். இந்த நிலையில் அவர் கடந்த 15 நாட்களாக கல்லீரல் பிரச்சினையால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கே சிகிச்சை முடித்த அவரை மருத்துவர்கள் ஓய்வில் இருக்குமாறு கூறியுள்ளனர். இந்த நிலையில் இன்றைய தினம் அவர் காலமாகிவிட்டார்.

மனோபாலா மிகச் சிறந்த ஓவியர். எந்த காட்சியை எப்படி வைக்கலாம் என்ற யோசிக்கும் திறனை அவர் கொண்டிருந்தார். இவர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக இருந்தார். பிறகு ஆகாய கங்கை படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். ஊர்க்காவலன் , சிறைப்பறவை, உள்ளிட்ட படங்களையும் இயக்கியுள்ளார்.

what happened to Director Manobala?

100-க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார். பிதாமகன், காக்கிச் சட்டை, மாப்பிள்ளை உள்ளிட்ட படங்களில் காமெடியில் மனோபாலா கலக்கியிருப்பார். அவர் சென்னையில் தனது மனைவியுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் அவர் உயிரிழந்துவிட்டார். அவரது வீட்டில் எடுக்கப்பட்ட வீடியோக்களில் அவர் கீழே விழுந்திருப்பது போல் தெரிகிறது.

அவருடைய உடல் கீழே இருக்கிறது. அந்த உடலின் கை, கால் விரல்களை சிலர் கட்டுவது போல் காட்சிகள் வெளியாகியுள்ளன. நீல நிற சட்டை, வேட்டி அணிந்திருக்கிறார். கீழே கிடந்த அவரது உடலை சுற்றி உறவினர்கள் நின்று அழுகிறார்கள். எனவே மனோபாலா நடக்கும் போது திடீரென கீழே விழுந்துவிட்டாரா, அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டரா என்பது தெரியவில்லை.

அவருடைய உடல் குடியிருப்பின் பார்க்கிங் ஏரியாவில் வைக்கப்பட்டுள்ளது. திரைப்பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் நாளை காலை அவருடைய உடல் தகனம் செய்யப்படுகிறது. அவர் எப்போதும் பல்வேறு உதவி இயக்குநர்களுக்கு உதவிகளை செய்வார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+