இரவில் திடீர்னு குறைந்த பல்ஸ், பிபி! வென்டிலேட்டரில் இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு நடந்தது என்ன?
சென்னை: மூச்சுத்திணறல் பாதிப்பால் சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமாகியுள்ள நிலையில் அவருடைய உடல்நிலைக்கு என்ன என்பதை பார்ப்போம்.
காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவருமாக இருந்தவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். இவருடைய மகன் திருமகன் ஈவெரா, ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாக தேர்வானார்.

இவருக்கு கடந்த 2023 ஆம் ஆண்டு திடீரென உடல்நிலை குறைவு ஏற்பட்ட நிலையில் அவர் மாரடைப்பால் மரணமடைந்தார். இதைத் தொடர்ந்து அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்ட நிலையில் திருமகனின் தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு அவர் வெற்றி பெற்றார்.
இந்த நிலையில் கட்சி பணிகளிலும் தொகுதி பணிகளிலும் ஈடுபட்டிருந்த இளங்கோவனுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து கடந்த நவம்பர் 13 ஆம் தேதி இரவு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மூச்சுத்திணறல் பாதிப்பால் அவதிப்பட்ட இளங்கோவனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 75 வயதாகும் இளங்கோவனுக்கு தற்போது செயற்கை சுவாசக் கருவியின் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
அவரது உடல்நிலையில் தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டு வந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளை அவரது உடல் ஏற்கவில்லை என்றும் எனினும் தொடர்ந்து அவரது உடல்நிலையை கண்காணித்து வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு முதல் ஈவிகேஎஸ் இளங்கோவனின் உடல்நிலை மோசமடைந்தது. அவருடைய இதயம் துடிக்கும் திறன் குறைந்து, ரத்த அழுத்தமும் குறைந்தே காணப்பட்டது. இதையடுத்து அவற்றை சீரான நிலைக்கு கொண்டு வர மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.
ஈவிகேஎஸ் இளங்கோவனின் உடல்நிலை மோசமடைந்ததாக பரவிய தகவலை அடுத்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மருத்துவமனைக்கு விரைந்தார். அங்கு மருத்துவர்களிடம் பேசிவிட்டு அவரது சிகிச்சை குறித்து செய்தியாளர்கள் சந்திப்பை நடத்துவார் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஈவிகேஎஸ் இளங்கோவன் சிகிச்சை பலனின்றி காலமாகிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சுமார் ஒரு மாத காலம் சிகிச்சை பெற்று வந்தார்.
நுரையீரலில் ஏற்பட்ட தொற்று காரணமாக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்து காலமாகிய நிலையில் மருத்துவமனைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. அவருடைய இறப்புக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னாள் தலைவர் கேஎஸ் அழகிரி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
-
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி











Click it and Unblock the Notifications