வாக்கிங்கில் தொடங்கி நெஞ்சுவலி வரை! செந்தில் பாலாஜி வீட்டில் மிட் நைட்டில் நடந்தது என்ன-ஷாக் பின்னணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்வதற்காக நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அதிகாரிகள் அழைத்து சென்ற நிலையில் அவர் நெஞ்சுவலி காரணமாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவர் வீட்டில் நேற்று இரவு என்ன நடந்தது?

நேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வந்தனர். முன்பு வருமானவரித்துறை சோதனையின் போது செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை செய்யப்படவில்லை. அவரின் தம்பி வீடு, உறவினர்கள் வீட்டில்தான் சோதனை செய்யப்பட்டது. ஆனால் இந்த முறை சென்னையில் அமைச்சர் இல்லத்திலேயே சோதனை நடந்தது.

What happened to Senthil Balaji? How did he arrest by Enforcement Directorate?

நேற்று மொத்தமாக 17 மணி நேரம் சோதனை நடந்தது. வீட்டோடு சேர்த்து தற்போது தலைமை செயலகத்தில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தி உள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறையில் அமலாக்கத்துறை சோதனை செய்து வருகின்றனர்.

தலைமை செயலகத்தில் 10 மணி நேரம் சோதனை நடந்தது. அலுவலக உதவியாளர் விஜயகுமாரை அழைத்துக் கொண்டு அமலாக்கத்துறை சோதனை நடத்தினர். முக்கிய ஆவணங்கள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறையில் உள்ளதா? என்பதை கண்டறிய அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அமைச்சர் அலுவலகத்திற்கு இந்தியன் வங்கி அதிகாரிகளையும் அழைத்து சென்று அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை செய்தனர். அவரின் வீடு உள்பட 3 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். சென்னையில் உள்ள அமைச்சரின் அரசு இல்லம், ஆர்.ஏ.புரம், அபிராமபுரத்தில் உள்ள இல்லங்களிலும் அதிகாரிகள் சோதனை நடந்தன.

சோதனை ஓவர்: இந்த நிலையில் 17 மணி நேரங்களுக்கு பின் அவர் வீட்டில் சோதனைகள் முடிந்தது. செந்தில் பாலாஜியின் சென்னை இல்லத்தில் 17 மணி நேர சோதனையை நிறைவு செய்த அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சரை நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்துக்கு விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

சோதனை முடிந்து அவரின் வீட்டிற்கு உயரதிகாரிகள் வந்தனர். அவரை கைது செய்வது தொடர்பாக ஆலோசனைகளை மேற்கொண்டனர். அவர் காலையில் வாக்கிங் சென்ற போது தொடங்கிய ரெய்டு இரவு வரை நீடித்தது.

தலைமை செயலகத்தில் ரெய்டு முடித்து கிளம்பிய அதிகாரிகள் மீண்டும் சில நிமிடங்களில் அங்கே வந்தனர் .தலைமைச்செயலகத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி அறையில் 10 மணி நேரமாக சோதனை நடந்த பின்பு மீண்டும் வந்து அமைச்சர் செந்தில் பாலாஜி அறையில் உள்ள மூன்று கணினிகளை ஆய்வுக்கு உட்படுத்தினர்.

அவர் வீட்டில் இருந்து சில பைகளையும் எடுத்து சென்றுள்ளனர். இந்த நிலையில்தான் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்து சென்றபோது நெஞ்சில் கைவைத்து வலிப்பதாக கூறி அவர் காரில் படுத்ததால் மருத்துவமனைக்கு அவரை அழைத்து சென்று இருக்கிறார்கள்.

அப்போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு உள்ளது. நெஞ்சை பிடித்துக்கொண்டு காரில் படுத்துக்கொண்டு செந்தில் பாலாஜி அழுது இருக்கிறார். உடனே அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

What happened to Senthil Balaji? How did he arrest by Enforcement Directorate?

முகத்தை கையால் மூடிக்கொண்டு மற்றொரு கையில் நெஞ்சை பிடித்துக்கொண்டு செந்தில் பாலாஜி கடுமையாக சத்தம் போட்டார். அவர் சோகமாக அழுத காட்சிகளும் வெளியாகின. இதையடுத்து தற்போது அவர் ஓமந்தூரார் மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

இதற்கிடையே விசாரணை முடிந்து செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கிளம்ப சொன்னதாக கூறப்படுகிறது. ஆனால் செந்தில் பாலாஜி செல்ல மறுத்துள்ளார். நெஞ்சு வலிப்பதால் தன்னால் நகர முடியவில்லை என்று அவர் சொன்னதாகவும் கூறப்படுகிறது.செந்தில் பாலாஜியை நேற்று இரவே உதயநிதி ஸ்டாலின் மருத்துவமனையில் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+