சென்னை ஓஎம்ஆர் டூ பள்ளிக்கரணை ஏரி... கூகுள் மேப்பை.. ஸ்விக்கி ஊழியர் வாழ்நாளில் மறக்க மாட்டார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியில் கூகுள் மேப்பை பார்த்து கண்மூடித்தனமாக சென்ற உணவு டெலிவரி செய்யும் இளைஞர், நேற்று இரவு சதுப்புநிலச் சேற்றில் சிக்கிக் கொண்டு வெளியே வர முடியாமல் தவித்து வந்தார். அவர் ஒரு கட்டத்தில் தன்னை எப்படியாவது காப்பாற்றும்படி தீயணைப்புத்துறையினருக்கு அழைத்து தெரிவித்தார். அதன் அடிப்படையில் வந்த அவர்கள், பத்திரமாக அவரை மீட்டனர்.

கூகுள் மேம்பை பார்த்து சென்னையில் எங்காவது சென்றால், அது முட்டு சந்தில் தான் போய்விடும் என்பது பேச்சுவழக்காக இருந்து வருகிறது. ஏனெனில் கூகுள் மேப்பை பொறுத்தவரை யாராவது சிலர் தவறான வழிகளை பதிவு செய்து வைத்து விடுகிறார்கள். அப்படி கூகுள் மேப்பில் காட்டப்படும் தவறான பாதையில் சென்று பலர் விபத்தில் சிக்கி உள்ளனர். சிலர் இறந்தும் போயிருக்கிறார்கள். ஒரு முறை தனியார் வங்கிக்கு வழி தேடிய போது, சுற்றி சுற்றி கூட்டிச்சென்ற கூகுள் மேப், இளைஞர் ஒருவரை முட்டுசந்தில் போய் நிறுத்தியது.

chennai google map

இதேபோல் கூகுள் மேப்பில் காட்டப்பட்ட வழியை நம்பி சென்றவர் கிணற்றில் தவறி விழுந்த சம்பவமும் நடந்துள்ளது. இதேபோல் ஒருவர் அரசு அலுவலகம் ஒன்றை தேர்வு செய்து பயணித்த போது, அது தவறுதலாக சுடுகாடு அருகே கூட்டிச் சென்றுள்ளது. இப்படி பலமுறை தவறுகள் கூகுள் மேப்பில் காட்டியிருக்கிறது. பொதுவாக ஆறு, குளம் , ஏரி, வனப்பகுதிகளில் செல்வோர் கூகுள் மேப்பை மட்டும் நம்பி செல்லக்கூடாது. ஏனெனில் தவறுதலாக சிலர் வழிகளை பதிவு செய்திருப்பார்கள். சென்னை துரைப்பாக்கத்தில் நடந்த சம்பவம் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

சென்னை துரைபாக்கத்தில் கூகுள்மேப்பை பார்த்து உணவு டெலிவரி செய்ய சென்ற ஸ்விக்கி உணவு டெலிவரி ஊழியர், பள்ளிக்கரணை சதுப்பு நில சேற்றில் சிக்கி தவித்துள்ளார். இருசக்கர வாகனத்தில் சென்ற ஸ்விக்கி ஊழியர் எப்படியாவது வெளியே வந்துவிடலாம் என நீண்ட நேரம் போராடியுள்ளார். ஆனால் அவரால் வெளியே வர முடியவில்லை. இறுதியாக தீயணைப்பு துறைக்கு அழைத்து தன்னை காப்பாற்றும்படி கோரிக்கை வைத்தார். அதன் அடிப்படையில் தீயணைப்பு ஊழியர்கள் வந்து அவரை காப்பாற்றி, பத்திரமாக மீட்டு அழைத்து வந்தனர்.

சோழிங்கநல்லூரைச் சேர்ந்த பவுன்ராஜ் என்ற ஸ்விக்கி உணவு டெலிவரி ஊழியர் நேற்று துரைப்பாக்கத்தில் உள்ள விஜிபி அவின்யூவில் உணவுடெலிவரி செய்வதற்காக கூகுள் மேப்பை பார்த்தபடி சென்றுள்ளார். சேற்றில் சிக்கி உள்ளார். அதிலிருந்து வெளியே வரமுடியாமல் தவித்த பவுன்ராஜ், தீயணைப்பு துறையின் கட்டுப்பாட்டு அறை எண்ணான 112 என்ற எண்ணிற்கு அழைத்து கடைசியில் தப்பியுள்ளார். எனவே கூகுள் மேப்பை மட்டுமே நம்பி காடு, ஏரி, குளம், வனப்பகுதிகளில் சென்றுவிடாதீர்கள். அதுசிக்கலை ஏற்படுத்தும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+