சென்னை சைதாப்பேட்டையில் மது போதையில் காரில் ஏசியை போட்டு தூங்கிய நபர்.. உள்ளே இருந்த கோலம்
சென்னை: சிவகங்கையை சேர்ந்த நபர் தமிழ்மாறன் என்பவர், சென்னை சைதாப்பேட்டையில் காரின் ஏசியை இயங்கவிட்டு, முழு மதுபோதையில் தூங்கியதாக கூறப்படுகிறது. நன்றாக அயர்ந்து தூங்கியவர் காலையில் எழுந்திருக்கவே இல்லை.. சைதாப்பேட்டையில் என்ன ஒரு கார் இவ்வளவு நேரமாக நிற்கிறது என்று அக்கம் பக்கம் இருந்தவர்கள் எட்டி பார்த்த போது, அவர் இருந்த கோலம் அங்கிருந்தவர்களை ஆடிப்போக வைத்துள்ளது. காரில் ஏசியை போட்டுவிட்டு தூங்கியவருக்கு என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
சென்னையில் வாடகைக்கு கார் ஓட்டும் பலர், சாலைகளில் ஆங்காங்கே கார்களை நிறுத்தி இரவில் ஓய்வெடுப்பது வழக்கம். சவாரி இல்லாத நேரங்களில் இப்படி ஓய்வெடுப்பார்கள். அப்படி ஓய்வெடுக்கும் போது, நிறுத்தப்பட்ட பின்னர் காரில் ஏசியை போட்டுவிட்டு தூங்குவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

ஆனால் பொதுவாகவே காரில் ஏசி போட்டு தூங்குவது பொதுவாக ஆபத்தானது ஆகும். நிறுத்தப்பட்ட காரில் ஏசி இயக்கி தூங்கினால், கார்பன் மோனாக்சைடு விஷம் காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழக்க கூட வாய்ப்பு அதிகமாக இருக்கும். காரில் உள்ள ஏசி பழையதாகவோ அல்லது சேதமடைந்திருந்தாலோ, உள்ளே உள்ள காற்று போதுமான அளவு நிரப்பப்படாமல் கார்பன் மோனாக்சைடு மற்றும் கார்பன் டை ஆக்சைடு போன்ற நச்சு வாயுக்கள் அதிகரிக்க அதிக வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கிறார்கள் நிபுணர்கள்..
இதன் காரணமாக நிறுத்தப்பட்ட காரில் வெறும் இன்ஜின் மட்டும் இயங்கும் போது, அதில் வெளியேறும் கார்பன் மோனாக்சைடு, காரின் ஃபயர் வால் வழியாக உள்ளே நுழைய வாய்ப்பு அதிகமாக இருக்கிறது இந்த விஷவாயு மூச்சுத் திணறலை ஏற்படுத்தி உயிரிழப்புக்கு வழிவகுக்கும் என்றும் விளக்கம் அளிக்கிறார்கள் நிபுணர்கள்..
இது போன்ற அசம்பாவித சம்பவங்களைத் தவிர்க்க, காரினுள் ஏ.சி.யை போட்டு தூங்க நேர்ந்தால் காரின் கண்ணாடியை சற்று கீழே இறக்கிய நிலையில் வைத்து உறங்குவது நல்லது என்கிறார்கள். இப்படி கண்ணாடியை இறக்கி வைப்பதன் மூலம், வெளிக்காற்று உள்ளே வந்து செல்லும் வகையில் இருந்தால் நச்சு பாதிப்பு குறையும் என்றும், நிறுத்தப்பட்ட நிலையில் உள்ள காரில் ஏ.சி. பயன்படுத்தும் போது, ரீசர்க்குலேஷன் மோடில் வைப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் கூறுகிறார்கள்.
ஆனால் சிலர் காரில் ஏசியை போட்டு தூங்குவதை செய்கிறார்கள்.. சென்னை சைதாப்பேட்டை மாந்தோப்பு டாஸ்மாக் கடை அருகே சனிக்கிழமை மாலையில் இருந்து மஞ்சள் பலகை பொறுத்திய கார் ஒன்று நின்றிருப்பதாகவும், காருக்குள் மயங்கிய நிலையில் கிடப்பதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் வந்து காலை திறந்து பார்த்த போது, உள்ளே இருந்தவர் இறந்து கிடந்தது தெரியவந்தது.
சைதாப்பேட்டை போலீசார் நடத்திய விசாரணையில், அவர் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்மாறன் என்பதும், சென்னையில் வாடகை கார் ஓட்டி வந்ததும் தெரியவந்தது. காரின் இன்ஜினை நீண்ட நேரம் ஓடவிட்டு ஏசி போட்டு தூங்கும் போது, ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு, இன்ஜினில் இருந்து வெளியேறும் கார்பன் மோனாக்சைடு விஷவாயு, தமிழ்மாறனை தாக்கியதும் தெரியவந்துள்ளது. காரில் ஏசி போட்டு தூங்கும் போது, லேசாக ஜன்னலை திறந்து வைப்பது நல்லது என்கிறார்கள் நிபுணர்கள்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி












Click it and Unblock the Notifications