Good Bad Ugly வைப்.. அஜித்துக்கு கிஸ் கொடுத்தபடி குதித்த ரசிகர்.. அதள பாதாளத்தில் பாய்ந்தார்
சென்னை: 'குட் பேட் அக்லி' திரைப்படம் வெளியாகி இன்றுடன் ஐந்து நாட்கள் ஆகிவிட்டது. பல ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகிறார்கள். இந்த ஐந்து நாள் விடுமுறையில் அதிகம் பேர் பார்க்கும் படமாக அஜித்தின் குட் பேட் அக்லி இருக்கிறது. அஜித்குமார் டான் வேடத்தில் நடத்துள்ள நிலையில், அவரை நடிப்பை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். இந்நிலையில் பாட்டு காட்சியை மொபைலில் பார்த்த ரசிகர் ஒருவர் அஜித்திற்கு கிஸ் கொடுத்த நிலையில், திடீரென தாவி குதித்த போது, பாதாளத்தில் போய் விழுந்தார். பழைய வீடியோவான இது இப்போது பரவி வருகிறது.
நடிகர் அஜித் குமார் நடிப்பில் மங்காத்தா, பில்லா, வேதாளம் பாணியில் குட் பேட் அகலி திரைப்படம் வெளியாகி உள்ளது. பொதுவாகவே அஜித் ரவுடி கேரக்டரிலும், வில்லன் கேரக்டரிலும் நடித்தால் சூப்பராக ஓடும். இதுவரை அஜித் நடித்த பழைய படங்களின் தொகுப்பு என்று சொல்லும் அளவிற்கு பல படங்களில் ரெபரன்ஸ் எடுத்துள்ள ஆதிக், வித்தியாசமான முயற்சியை கையாண்டுள்ளார். வில்லனாக வரும் அர்ஜுன் தாஸ் கேரக்டரையும் வலுவாக பயன்படுத்தி உள்ளார். அஜித் நடிப்பு ஒருபுறம் எனில் அர்ஜுன் தாஸ் நடிப்பும் அபாரமாக இருந்தது.

லாஜிக் பார்க்காமல் ஆதிக்கின் உலகத்தில் அஜித்தை ரசிக்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளார்கள். பல நாட்களுக்கு பிறகு அஜித் ரசிகர்களுக்கு இந்த படம் கொண்டாட்டத்தை தந்துள்ளது. இதனால் ஏராளமான ரசிகர்கள் படத்தை தியேட்டரில் சென்று பார்க்கிறார்கள். கடந்த நான்கு நாட்களாக குட் பேட் அகலி திரைப்படம் வசூலில் வாரி குவிக்கிறது. சென்னை போன்ற நகரங்களுக்கு நீண்ட விடுமுறையின் போது கொண்டாட்டத்திற்கும், பொழுது போக்குவதற்கும் ஏதாவது கட்டாயம் தேவையாக உள்ளது. அந்த வகையில் குட் பேட் அகலி திரைப்படம் நல்ல தீனியாக அமைந்துள்ளது.
இதன் காரணமாக கடந்த வாரம் வெளிவந்த குட் பேட் அக்லி திரைப்படம் நான்கு நாட்களில் உலகளவிலும் சரி தமிழகத்திலும் சரி வசூலில் சாதனை படைத்து வருகிறது. இப்படம் தமிழ்நாட்டில் மட்டுமே 4 நாட்களில் ரூ.91 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழ் புத்தாண்டு தினமான இன்றும் விடுமுறை என்பதால், வசூல் நன்றாக இருக்கும் என்கிறார்கள். இந்த வாரம் முழுவதும் ஓடும் என்பதால், வசூல் பெரிய அளவில் இருக்கும் என்கிறார்கள்.
இதனிடையே ஸ்டைலிஷான அஜித்தை பார்த்த சந்தோஷத்தில் குட் பேட் அகலி பாடல்களை பாடி ரசிகர்கள் வைப் செய்து வருகிறார்கள். அப்படித்தான் மொபைலில் அஜித் ரசிகர்கள் ஒருவர் பாடலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது உற்சாக மிகுதியில் திடீரென அஜித்திற்கு கிஸ் கொடுத்த அந்த ரசிகர், திடீரென தரையில் தாவி குதித்தார். அப்படி குதித்த போது, பாதாளத்திற்கு போனார் ரசிகர். பாதாள சாக்கடையில் உள்ளே போய் விழுந்தார். நல்ல வேளையாக ஒன்றும் ஆகவில்லை. இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. அதேநேரம் ஒரு மாதத்திற்கு முன்பே இந்த சம்பவம் நடந்தது என்றும், இப்போது தான் சமூக ஊடகங்களில் வீடியோ பரவுவதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications