அதிகாலையில் பாரில் சரக்கு வாங்க போன போது விபத்து? பள்ளிக்கரணை இளைஞர்கள் விபத்தில் என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை பள்ளிக்கரணை இளைஞர்கள் விடிய விடிய நண்பர்களுடன் பார்டி கொண்டாடிய நிலையில் அதிகாலையில் கூடுதல் மதுபானம் வாங்க பல்லாவரம்-துரைப்பாக்கம் 200 அடி ரேடியல் சாலையில் உள்ள பாருக்கு வந்த போது தான், அந்த விபத்து சம்பவம் நடந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பள்ளிக்கரணையில் நேற்று அதிகாலை என்ன நடந்தது என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல், சங்கர்நகர் மெயின்ரோடு செல்வ விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த 24 வயதாகும் இளைஞர் கோகுல். இவரது நண்பர் விஷ்ணு (24). கேரளாவைச் சேர்ந்த விஷ்ணு சென்னை மேற்கு மாம்பலம் நாகலட்சுமி தெருவில் வசித்து வருகிறார். இருவருமே மென்பொருள் பொறியாளர்கள் ஆவர்.

chennai pallikaranai

இவர்கள் இருவரும் சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர். இவர்களுடன் அஜேஷ் என்பவரும் பள்ளிக்கரணை ராஜலட்சுமி நகர் 6-வது தெருவில் வசித்து வருகிறார். அவர் வேலையை விட்டுவிட்டு சொந்த ஊரான கன்னியாகுமரிக்கு சென்றதாக கூறப்படுகிறது.

இதனால் அஜேஷ் பிரிந்து செல்வதை தொடர்ந்து பள்ளிக்கரணையில் உள்ள தனது அறையில் நேற்று முன்தினம் இரவு விஷ்ணு, கோகுல், கிஷோர் உள்பட 8 பேர் சேர்ந்து விடிய விடிய மது விருந்து நடத்தியதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று அதிகாலை 4 மணி அளவில் விஷ்ணு மற்றும் கோகுல் இருவரும் மேலும் மதுபானம் வாங்கு வதற்காக உயர் ரக இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கரணையில் பல்லாவரம்-துரைப்பாக்கம் 200 அடி ரேடியல் சாலையில் உள்ள மது பாருக்கு வேளச்சேரி மெயின் சாலை வழியாக சென்று கொண்டிருக்கிறார்கள். மோட்டார்சைக்கிளை விஷ்ணு ஓட்டியிருக்கிறார். கோகுல் பின்னால் அமர்ந்துள்ளார்.

பள்ளிக்கரணை சிவன்கோவில் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள், சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவரில் வேகமாக மோதியிருக்கிறது. இதில் நண்பர்கள் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்திருந்த கோகுல், சுமார் 20 அடி உயரத்துக்கு தூக்கி வீசப்பட்டதில் அவரது தலை மின்கம்பத்தில் வேகமாக மோதியது. இதில் தலை துண்டான நிலையில் கோகுல் அதே இடத்தில் உயிரிழந்தார்.

வாகனத்தை ஓட்டிய விஷ்ணுவுக்கு நெஞ்சில் பலத்த காயம் ஏற்பட்டதால் அவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த பள்ளிக்கரணை போக்கு வரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் பலியான 2 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மது போதையில் கூடுதல் மதுபானம் வாங்குவதற்காக அதிகாலையில் இரு இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் சென்று உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. பள்ளிக்கரணை, வேளச்சேரி உள்பட சென்னையில் இரவு 10மணிக்கு மேல் மற்றும் அதிகாலை நேரங்களில் மதுபானங்கள் விற்கும் பார்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+