வளசரவாக்கத்தில் தனியாக இருந்த நடிகை.. இரவில் வீடு புகுந்த 6 பேர்.. யார் அந்த நடிகரின் கார் டிரைவர்?
சென்னை: சென்னை வளசரவாக்கத்தில் வீடு புகுந்து துணை நடிகை பாலியல் பலாத்காரம் செய்த புகாரில் நடிகரின் கார் டிரைவர் உள்பட 6 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தைச் சேர்ந்த 30 வயதான பெண் ஒருவர், தமிழ் டிவி சீரியல்களில் துணை நடிகையாக நடித்து வருகிறார். இவருக்கு திருமணமாகிவிட்டது. ஆனால் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வசித்து வருகிறார். இவர் கணவரை பிரிந்த நிலையில் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியபடி டிவி தொடர்களில் நடித்து வந்தார்.

இந்த நிலையில் நடிகையின் உறவினர், வேலை விஷயமாக ஹைதராபாத்துக்கு சென்று விட்டார். இதனால் வீட்டில் துணை நடிகை மட்டும் தனியாக வசித்திருக்கிறார். இந்நிலையில் துணை நடிகை வீட்டில் தனியாக இருப்பதை அறிந்து, நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டுக்குள் 6 பேர் புகுந்துள்ளனர். அதில் முருகேசன் என்பவர் வெளியில் 2 பேரை காவலுக்கு நிற்க கும்பல், வீட்டிற்கு துணை நடிகையை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார்களாம்.
இதுபற்றி சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் துணை நடிகை புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் சம்பவம் தொடர்பாக முருகேசன் (27), கல்யாணகுமார் (28), அருண்பாண்டி (23), மாரியப்பன் (23), பெரிய நம்பி ராஜ் (27), முப்பிடாதி (26) ஆகிய 6 பேரை கைது செய்து மேலும் விசாரித்து வருகிறார்கள். இவர்களில் கைதான முருகேசன், திரைப்பட நடிகர் ஒருவரிடம் கார் டிரைவராக வேலை செய்து வருவது விசாரணையில் தெரியவந்துள்ளது.
சென்னையில் இன்னொரு சம்பவம்: சென்னை தேனாம்பேட்டையில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை
உணவு வினியோக ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை கொடுங்கையூர் எருக்கஞ்சேரியை சேர்ந்த 48 வயதாகும் ரவிக்குமார், தனியார் உணவு வினியோக நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவர், தேனாம்பேட்டையில் உள்ள ஒரு வீட்டுக்கு ஆர்டரின் பேரில் உணவு பார்சலை வினியோகிக்க எடுத்து சென்றுள்ளார். வீட்டுக்கு சென்ற அவர், அங்கிருந்த பெண்ணிடம் உணவு பார்சலை கொடுத்தார். அப்போது அங்கிருந்த பெண் மீது ரவிக்குமாருக்கு திடீரென சபலம் ஏற்பட்டதாம். அந்த பெண் தனியாக இருப்பதை தெரிந்து கொண்ட ரவிக்குமார், அந்த பெண்ணிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அந்த பெண் அதிர்ச்சியில் கூச்சல் போட்டுள்ளார்.. இதனால் ரவிக்குமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த சம்பவம் குறித்து குறிப்பிட்ட பெண் தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு ரவிக்குமாரை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications