பரமக்குடியில் கால் காயத்திற்கு ஊசி போட்டவர்.. இன்று உயிருடன் இல்லை.. என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா அருங்குளம் கிராமத்தை சேர்ந்த பில்லத்தியான் என்ற கூலி தொழிலாளி தனது காலில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெறுவதற்காக, பரமக்குடியில் இளையான்குடி ரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்று வந்துள்ளார். அதற்காக நர்சு ஒருவரிடம் ஊசி போட்டுள்ளார். இன்று அவர் உயிருடன் இல்லை.. இதனால் அவருடைய உறவினர்கள் மொத்த சாலையையும் ஸ்தம்பிக்க வைத்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா அருங்குளம் கிராமத்தை சேர்ந்த 45 வயதாகும் பில்லத்தியான் என்பவர் கூலி தொழிலாளி ஆகும். இவருக்கு திருமணமாகி ராமலெட்சுமி என்ற மனைவியும் 2 மகள்களும் இருக்கிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு பில்லத்தியானுக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது.

What happened to the worker who received an injection at a private hospital in Paramakudi

அந்த காயத்திற்கு சிகிச்சை பெறுவதற்காக, பரமக்குடியில் இளையான்குடி ரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்று வந்துள்ளார். நேற்று முன்தினம் வழக்கம்போல சிகிச்சை பெறுவதற்காக அங்கு சென்றார். அப்போது அங்கு பணியில் இருந்த நர்சு ஒருவர் அவருக்கு ஊசி போட்டிருக்கிறார்.

மருத்துவமனையில் அனுமதி

அடுத்த சில நிமிடங்களிலேயே அவர் திடீரென மயங்கி உள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மருத்துவமனை ஊழியர்கள், உடனடியாக அவரை ஆட்டோவில் ஏற்றி பரமக்குடியில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், உடனடியாக பரமக்குடியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள் என அறிவுறுத்தி உள்ளனர்.

உடனே அவரை பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது, பில்லத்தியான் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

சாலை மறியல்

இதனை அறிந்த அவரது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தனியார் மருத்துவமனையில் ஊசி போட்டதே உயிரிழப்பிற்கு காரணம் என உறவினர்கள் குற்றம் சாட்டினர். மதுரை-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

பரமக்குடி போலீசார் விசாரணை

இது குறித்து பரமக்குடி போலீசார் சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான் பில்லத்தியான் இறப்பிற்கான உண்மையான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+