சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய டிடிஆர்.. சொந்த ஊருக்கு போன மனைவி.. பூட்டிய வீட்டுக்குள் கண்ட காட்சி
சென்னை: பொன்னேரி நகராட்சியில் அடங்கிய சக்தி நகரில் வசித்து வந்த 35 வயதாகும் ரவிநனபூர் என்பவர் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றி வருகிறார்.இவரது சொந்த ஊர் கர்நாடகா மாநிலம் ஆகும். அவரது மனைவி உறவினர் திருமண நிகழ்ச்சிக்காக கர்நாடகா சென்றுவிட்டார். இந்த சூழலில் ரயில் டிக்கெட் பரிசோதகர் பூட்டிய வீட்டிற்குள் இருந்த காட்சி அக்கம் பக்கத்தினரை அதிர வைத்துள்ளது.
திருவள்ளூர்மாவட்டம் பொன்னேரி நகராட்சியில் அடங்கிய சக்தி நகரில் வசித்து வந்த 35 வயதாகும் ரவிநனபூர் என்பவர் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். இவருக்கு பொம்மிமா (33) என்ற மனைவியும் குழந்தைகளும் இருக்கிறார்கள். இவர் சென்னை சென்ட்ரல் நிலையத்தில் ரயில் டிக்கெட் பரிசோதகராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி பொம்மிமா குழந்தைகளுடன் உறவினர் திருமண நிகழ்ச்சிக்காக கர்நாடகா மாநிலத்திற்கு சென்றுவிட்டார். ,இதனிடையே தனது கணவர் ரவிநனபூருக்கு நேற்று காலை பொம்மிமா செல்போனில் கணவரை தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அவருக்கு பலமுறை அழைத்தும் செல்போன் எடுக்கப்படவில்லை.

இதையடுத்து பயந்து போன பொம்மிமா, பொன்னேரி சக்தி நகரில் தனது வீட்டின் அருகே வசிக்கும் ஆட்டோ டிரைவர் ஒருவருக்கு போன் செய்து வீட்டுக்கு சென்று பார்க்குமாறு கூறியிருக்கிறார். இதை தொடர்ந்து ஆட்டோ டிரைவர், டிக்கெட் பரிசோதகர் ரவிநனபூர் வீட்டுக்கு சென்றபோது வீடு பூட்டப்பட்டிருந்தது. இது குறித்து பொன்னேரி போலீசாருக்கு ஆட்டோ டிரைவர் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வீட்டுக்கு சென்று பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது படுக்கை அறையில் ரவிநனபூர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து மனைவி மற்றும் அக்கம் பக்கத்து வீடுகளில் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். ரயில்வே டிக்கெட் பரிசோதகர் ரவிநனபூரின் பிரேத பரிசோதனைக்கு பின்னரே அவர் எப்படி இறந்தார் என்பது தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய டிக்கெட் பரிசோகர் திடீரென மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பொன்னேரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications