பழைய டீ ஷர்ட்.. கலைந்த தாடி.. பிச்சைக்காரர் போல.. நின்ற ட்விட்டரின் பழைய சிஇஓ ஜேக்.. என்ன ஆச்சு?
சென்னை: ட்விட்டர் நிறுவனத்தின் நிறுவனர் சிஇஓ ஜேக் டோர்ஸி பொது இடம் ஒன்றில் மிக மோசமான பழைய உடையுடன்.. கலைந்த தாடியுடன் காணப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஒரு காலத்தில் உலகில் பவர்புல் மனிதர்களில் ஒருவர்.. டொனால்ட் டிரம்ப் அதிபராக டிரம்ப் இருந்த போது.. அவருக்கே நெருக்கடி தரும் அளவிற்கு பவர்புல் மனிதராக இருந்தவர் ட்விட்டர் நிறுவனத்தின் நிறுவனர் சிஇஓ ஜேக் டோர்ஸி.

அவர் இரண்டு முறை ட்விட்டரின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றினார், இறுதியில் 2021 இல் பதவி விலகினார். ட்விட்டரை விட்டு வெளியேறிய பிறகு அதன் பங்குகள் மூலம் மட்டும் வருமானம் ஈட்டினார்.
அதேபோல் ஜேக் நிறுவிய இன்னொரு நிறுவனமான பிளாக் இன்க். நிதிச் சேவைகள் மற்றும் டிஜிட்டல் கரன்சி துறையில் கவனம் செலுத்தி வருகிறது. 2009ல் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்திலும் அவர் குறிப்பிட்ட அளவு பங்குகளை வைத்துக்கொண்டு இருக்கிறார்.
பிளாக்கு நிறுவனத்தை போலவே ஜேக் டோர்சி ப்ளூஸ்கியை என்ற நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இது ஒரு சமூக ஊடக தளமாகும். ட்விட்டர் போல அல்லாமல் இது ஓபன் தலமாகும். பெரிய அளவில் டேட்டா கொள்ளை நடக்காத ஓபன் இயங்குதளம் ஆகும். இதில் தற்போது 21 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் உள்ளனர்.
இவர் கிரிப்டோகரன்சி மீது அதிக அளவில் கவனம் செலுத்தி வருகிறார். முக்கியமாக ஓபன் சோர்ஸ் தொழில்நுட்பங்கள், டிஜிட்டல் கரன்சி மீது தீவிர கவனம் செலுத்தி வருகிறார். டிசம்பர் 2024 நிலவரப்படி, டோர்சியின் நிகர மதிப்பு $5.6 பில்லியன் என ஃபோர்ப்ஸ் மதிப்பிட்டுள்ளது.
வைரல்; இப்படிப்பட்ட நிலையில்தான் ட்விட்டர் நிறுவனத்தின் நிறுவனர் சிஇஓ ஜேக் டோர்ஸி பொது இடம் ஒன்றில் மிக மோசமான பழைய உடையுடன்.. கலைந்த தாடியுடன் காணப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அவரிடம் 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கு சொத்துக்கள் இருந்தாலும்.. அவர் பழைய டீ ஷர்ட் ஒன்றை அணிந்து வலம் வருகிறார். சடோஷி என்ற பெயர் கொண்ட பழைய டீ ஷர்ட் ஒன்றை அவர் கடந்த 10 நாட்களாக பல பொது இடங்களில் அணிந்து வருகிறார்.
பெரிதாக தனது தோற்றத்தில் கவனம் செலுத்தாமல் எளிமையாக வாழ்ந்து வருகிறார். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் சடோஷி என்பது பிட்காயினை உருவாக்கியவர் பெயர் ஆகும்.
Satoshi Nakamoto என்பது பிட்காயின் எனப்படும் கிரிப்டோகரன்சியை உருவாக்கி அக்டோபர் 2008 இல் வெளியிடப்பட்ட நபர் அல்லது குழுவை குறிக்கும் பெயர் ஆகும். அது தனி நபரா அல்லது குழுவா என்பது இப்போது வரை யாருக்கும் தெரியாது.
உலகில் நாம் பயன்படுத்தும் பணம் போலவே இணையத்திலும் நிறைய பணம் இருக்கிறது. இந்த பணத்தை நாம் நேரடியாக பயன்படுத்தாமல் இணையத்தில் மட்டுமே பயன்படுத்துவோம். 1500க்கும் அதிகமான இதுபோன்ற பணங்கள் உலகில் பயன்பாட்டில் இருக்கிறது. இதற்கு 'கிரிப்டோ கரன்சி' என்று பெயர். அவற்றில் ஒன்றுதான் இந்த பிட்காயின்.
இந்த பிட்காயினை நாம் பணம் கொடுத்தோ, பங்குகள் கொடுத்தோ வாங்கி கொள்ள முடியும். மேலும் தங்கத்திற்கு பதிலாகவும் இதை மாற்ற முடியும். இதற்கு வடிவம் இல்லை என்பதால் இதை வைத்து இணையத்தில் எளிதாக பொருட்கள் வாங்கலாம். மேலும் இதற்கு சரியான வரி விதிப்பு முறையோ, வங்கி கட்டுப்பாடோ இல்லை என்பதால் இதில் அதீத சுதந்திரம் இருக்கிறது.
தற்போதைய சந்தை நிலவரப்படி பிட்காயின் மதிப்பு தற்போது 1 லட்சம் டாலரை தொட்டுள்ளது. 90 ஆயிரத்தில் கடந்த சில நாட்களாக இருந்த நிலையில் தற்போது 1 லட்சம் டாலரை தொட்டுள்ளது. இதை உருவாக்கிய Satoshi Nakamoto யார் என்று தெரியாத நிலையில் அவரின் பெயர் கொண்ட டீ ஷர்டை ஜேக் அணிந்துள்ளார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications