குன்றத்தூர் அரசு பள்ளி வகுப்பறையில் இப்படியா ஆகணும்.. மாணவன் வெங்கடேசனுக்கு என்ன நடந்தது?
சென்னை: குன்றத்தூர் மணிகண்டன் நகர் நடைபாதை தெருவை சேர்ந்த சரவணன் என்பவருடைய மகன் வெங்கடேசன். வெங்கடேசன் குன்றத்தூர் அடுத்த கொல்லச்சேரியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார்.. காலாண்டு தேர்வு முடிந்து நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்றுள்ளார் மாணவர் வெங்கடேசன். அப்போது தான் யாருமே எதிர்பார்க்காத அந்த சம்பவம் வகுப்பறையிலேயே நடந்தது. என்ன நடந்து என்பதை பார்ப்போம்.
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் மணிகண்டன் நகர் நடைபாதை தெருவை சேர்ந்தவர் சரவணன் என்பவருடைய மகன் வெங்கடேசனுக்கு 16 வயது ஆகிறது. இவர் குன்றத்தூர் அடுத்த கொல்லச்சேரியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். காலாண்டு தேர்வு முடிந்து கடந்த அக்டோபர் 6ம் தேதி பள்ளிக்கு சென்ற வெங்கடேசன் திடீரென வகுப்பறையில் மயங்கி விழுந்தார்கள்.'

அவரை ஆசிரியர்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு வெங்கடேசன் சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து மருத்துவர்கள் குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் மாணவனின் குடும்பத்தினரிடம் நடத்திய விசாரணையில் பள்ளி விடுமுறை நாட்களில் அதிக அளவில் வெங்கடேசன் செல்போனை பயன்படுத்தி வந்ததும், பள்ளிக்கு செல்லும் நாளில் தலைவலிப்பதாக கூறிவிட்டு சென்ற நிலையில் திடீரென மயங்கி விழுந்து இறந்து இருப்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
எனினும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே அவரது இறப்புக்கான முழுமையான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். போலீசார் தொடர்ந்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். பள்ளி வகுப்பறையில் மயங்கி விழுந்து மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மாணவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக கடந்த மாதம் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் இதேபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த கல்லாபுரம் அருகே இந்திராபுதுநகர் மலைவாழ் குடியிருப்பை சேர்ந்தவர் முருகேசன் அந்த பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார். இவருடைய மகள் புவனேஸ்வரிக்கு 17 வயது ஆகிறது. புவனேஸ்வரி உடுமலை பாபுகான் வீதியில் உள்ள பெண்கள் சமூக நல விடுதியில் தங்கி பள்ளியில் படித்து வருகிறார். விடுதியில் தங்கியபடி, உடுமலை பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். அவர் கடந்த செப்டம்பர் மாதம் பள்ளி வகுப்பறையில் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications