குரோம்பேட்டை ரேடியல் சாலையில் தோழியுடன் சென்ற யமுனா.. மேம்பாலத்தில் இப்படியா ஆகணும்
சென்னை: சென்னை குரோம்பேட்டை ரேடியல் சாலை மேம்பாலம் என்பது பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம் பகுதிகளை, சென்னையின் ஐடி காரிடர் பகுதிகளான வேளச்சேரி, பள்ளிக்கரணை, மடிப்பாக்கம் கீழ்கட்டளை, துரைப்பாக்கம் உள்ளிட்ட ஏரியாக்களை இணைக்கிறது. இங்கு எப்போதுமே அதிகப்படியான வாகனங்கள் சென்று வரும். இதில் மிக விரைவாக செல்லும் வாகனங்கள் குரோம்பேட்டை மேம்பாலத்தில் தான் நெரிசலில் சிக்கும். அப்படி இளம் பெண் சென்ற இருசக்கர வாகனம் சிக்கியது. அப்போது என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
ஜிஎஸ்டி சாலையும் ரேடியல் சாலையும் இணையும் இடம் தான் குரோம்பேட்டை மேம்பாலம் ஆகும், இந்த மேம்பாலம் ரயில்வே கிராசிங்கிற்காக மட்டுமின்றி, பல்லாவரம் துரைப்பாகக்கத்தை இணைக்கும் சாலையாக இருக்கிறது. இந்த சாலையில் வெறும் 10 முதல் 15 நிமிடத்தில் வேளச்சேரி, துரைப்பாக்கம் போய்விட முடியும். அந்த அளவிற்கு விரைவான 200 அடி சாலையாக உள்ளது.

பல்லாவரம் ஏரி, நாராயணபுரம் ஏரி, கீழ்க்கட்டளை ஏரி மற்றும் சதுப்பு நிலங்களை இரண்டாக வெட்டியபடி செல்லும் இந்த சாலை பகுதிதான் சென்னையின் அடுத்த ஐடி காரிடர் பகுதியாக அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்த சாலையில் லட்சக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. ரேடியல் சாலை மேம்பாலம் பகுதியில் அதிக அளவில் நெரிசல் ஏற்படும். சென்னையிலேயே மேம்பாலத்தில் சிக்னல் போட வேண்டிய நிலை உள்ள பாலம் என்றால் அது ரேடியல் சாலை மேம்பாலம் தான். அந்த அளவிற்கு குறுகலான மற்றும் நெரிசலான பாலமாக இருக்கிறது. இந்த பாலம் பகுதியில் லாரி மோதி பெண் உயிரிழந்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி, குடவாசல் தாலுகா, கீழ் உத்தரங்குடியைச் சேர்ந்த 23 வயதாகும் யமுனா என்பவர் சென்னையை அடுத்த குரோம்பேட்டை பகுதியில் தங்கி, வேலை பார்த்து வந்தார். இவருடன், மயிலாடுதுறை வரதம்பட்டு பகுதியைச் சேர்ந்த 22 வயதாகும் ஸ்ரீஜா என்பவரும் ஒரே அறையில் தங்கி, சென்னையில் வேலை செய்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு தோழிகள் இருவரும் இருசக்கர வாகனத்தில் குரோம்பேட்டை ரேடியல் சாலை மேம்பாலம் அருகில் வந்துள்ளனர். அங்குள்ள சர்வீஸ் சாலையில் செல்ல முயன்றனர். அப்போது தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி நோக்கி சென்ற பார்சல் லாரி, குரோம்பேட்டை ரேடியல் சாலைக்கு செல்ல மேம்பாலத்தில் ஏற முயன்றது. இதனால் கண் இமைக்கும் நேரத்தில் யமுனா ஸ்ரீஜா சென்ற இருசக்கர வாகனம் மீது மோதியது.
இதில் பார்சல் லாரியில் இருசக்கர வாகனம் சிக்கி சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்டது. இதில் படுகாயம் அடைந்த யமுனா, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது தோழி ஸ்ரீஜா லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இந்த சம்பவம் தொடர்பாக குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் யமுனாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக லாரி டிரைவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications
