சுற்றி சுற்றி கேமரா! ஒரு நிமிடம் "சுதாரித்து".. சட்டென வாக்கு செலுத்தாமல் நின்ற விஜய்! என்ன நடந்தது?
சென்னை: நடிகர் விஜய் இன்று நீலாங்கரையில் வாக்களிக்க வந்த போது நடந்த சம்பவம் ஒன்று வைரலாகி வருகிறது.
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நிலையில் மக்கள் பலர் வரிசையில் நின்று வாக்களித்து வருகிறார்கள்.
12602 பதவிகளுக்கு தமிழ்நாடு முழுக்க நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. கடந்த ஒரு மாதமாக தீவிரமாக பிரச்சாரம் நடந்த நிலையில் இன்று தீவிர பாதுகாப்போடு தேர்தல் நடந்து வருகிறது.

தேர்தல் விஜய்
இந்த தேர்தலில் விஜயின் மக்கள் இயக்க நிர்வாகிகளும் போட்டியிடுகின்றனர். ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சிறப்பாக செயல்பட்ட நிலையில் தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் அந்த கட்சி போட்டியிடுகிறது. இந்த நிலையில் நடிகர் விஜய் இன்று நீலாங்கரையில் வாக்களித்தார். மாருதி காரில் வந்த நடிகர் விஜய் நீலாங்கரையில் உள்ள வாக்கு சாவடியில் காலை 7 மணிக்கு வாக்களித்தார்.

கூட்டம்
விஜய் இன்று காலை அங்கு வந்து வாக்களிப்பார் என்பதை அறிந்து அவரின் ரசிகர்கள் அங்கே காத்து இருந்தனர். அதிகாலை 5 மணியில் இருந்து ரசிகர்கள் அங்கே காத்து இருந்தனர். நூற்றுக்கணக்கான விஜய் ரசிகர்கள் அங்கு கூட்டமாக நின்றனர். அதேபோல் செய்தியாளர்கள் பலரும் விஜயின் வருகைக்காக காத்து இருந்தனர். காரில் வந்த விஜய் லைனில் நின்று வாக்களிக்க முயன்றார். ஆனால் அங்கு கூட்டம் அதிகரித்துக்கொண்டே இருந்தது.

வாக்களித்தார்
இதனால் பாதுகாப்பு கருதி விஜயை லைனில் நிற்காமல் உள்ளே சென்று வாக்களிக்க தேர்தல் அதிகாரிகள் அறிவுறுத்தினர். இதையடுத்து உள்ளே சென்ற விஜய், வாக்கு பெட்டிக்கு அருகே சென்ற போது வாக்களிக்க சில நிமிடம் அப்படியே நின்றார். அவரை சுற்றி சுற்றி செய்தியாளர்களின் கேமராக்கள் இருந்தன. இதனால் நடிகர் விஜய் சட்டென சுதாரித்து வாக்களிக்காமல் நின்றார்.
Recommended Video

சுதாரித்த விஜய்
தான் யாருக்கு வாக்களிக்கிறோம் என்பது தெரிய கூடாது என்பதால் செய்தியாளர்கள் நகரும் வரை காத்திருந்தார். ஆனாலும் சில கேமரா செய்தியாளர்கள் நகராமல் அங்கேயே நின்றதால், அவர்களிடம் சைகையில் "போங்க போங்க" என்று குறிப்பிட்டார். சிறிது நேரம் வாக்களிக்காமல் நின்று சுற்றியிருந்தவர்களை நகர்ந்து செல்லுமாறு கையசைத்தார். செய்தியாளர்கள் அங்கிருந்து நகர்ந்த பின்னரே வாக்களித்துவிட்டு தனது வீட்டுக்கு கிளம்பினார்.












Click it and Unblock the Notifications