9 நாட்கள் ஐசியூ போராட்டம்.. நடக்கவே முடியாத நிலையில் மேடை ஏறிய எஸ்.ஜானகி! நடந்த மிரட்டல் அதிசயம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: எஸ்.ஜானகி எனும் அந்த காந்தக் குரலரசி, மரண விளிம்பில் 9 நாட்கள் ஐசியூவில் போராடிவிட்டு, நடக்கவே முடியாத நிலையிலும் அமெரிக்க மேடையில் ஏறி 15 பாடல்களைப் பாடி ரசிகர்களை உருக வைத்த அந்த நெகிழ்ச்சியான சம்பவம், திரையுலகில் ஒரு மாபெரும் சாதனையாகவும் அதிசயமாகவும் பேசப்பட்டு வருகிறது.. ஜானகி அம்மாவின் வாழ்வில் நடந்த அந்த சம்பவத்தை ரசிகர்கள் இன்று சோஷியல் மீடியாவில் ஷேர் செய்து கொண்டிருக்கிறார்கள்.. அமெரிக்காவில் என்ன நடந்தது?

அது ஒரு அமெரிக்க இசை நிகழ்ச்சி. அந்த நிகழ்ச்சிக்கு முந்தைய நாள் இரவு, ஜானகி அம்மாள் தூங்கிக் கொண்டிருந்தபோது திடீரென லேசான மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே ஆஸ்துமா பிரச்சனை இருந்ததால், அதற்கான மாத்திரையை மட்டும் சாப்பிட்டுவிட்டு அப்படியே தூங்கியிருக்கிறார்.

Legendary singer S Janaki performing on American stage

அமெரிக்காவில் கிரிட்டிக்கல் நேரம்

இறுதியில், ஜானகி அம்மாவின் இதயத்திற்கு ரத்தம் செல்லும் பாதையில் ஒரு பெரிய கட்டி இருப்பதை டாக்டர்கள் கண்டறிந்ததனர்.

நிலைமை மிகவும் கிரிட்டிக்கலாக இருந்ததால், அவர் உடனடியாக ஐசியூவில் அனுமதிக்கப்பட்டார். 9 நாட்கள் ஐசியூவில் உயிருக்கு போராடினார் ஜானகி அம்மா. டாக்டர்களின் தீவிர சிகிச்சைக்கு பிறகுதான் உடல்நலம் தேறி, அவர் தங்கியிருந்த வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார். ஆனால், அவரால் சொந்தமாக எழுந்து நிற்கவோ, நடக்கவோ முடியாத அளவுக்கு உடல்நிலை மிகவும் பலவீனமாக இருந்தது.

அவர் வீடு திரும்பிய மறுநாளே, அமெரிக்காவில் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த அந்த இசை நிகழ்ச்சி நடக்கவிருந்தது. டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்த நிலையில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பெரும் கவலையில் ஆழ்ந்தனர்.

5 நிமிடம் மட்டும் பாடுங்கம்மா

ஜானகி அம்மாவின் நிலையை நேரில் பார்த்த அவர்கள், “அம்மா, உங்களால் பாட முடியாவிட்டாலும் பரவாயில்லை, ரசிகர்களுக்காக மேடையில் ஒரே ஒரு 5 நிமிடம் மட்டும் வந்து உட்காருங்கள் வற்புறுத்திக் கேட்டுக் கொண்டார்களாம். நடக்கவே முடியாத அந்த மிக மோசமான சூழ்நிலையிலும், ரசிகர்களுக்காகவே, ஜானகி அம்மா அங்கு வர சம்மதித்தார்.

மறுநாள் கைத்தாங்கலாக அழைத்து வரப்பட்டு, மேடையில் ஒரு நாற்காலியில் உட்கார வைக்கப்பட்டார் ஜானகி அம்மா. நிகழ்ச்சி தொடங்கியதும், ஏற்பாட்டாளர்கள் தயக்கத்துடன், "உங்களால் முடிந்தால் ஒரே ஒரு கடவுள் வாழ்த்து பாடலை மட்டும் பாடுங்கள் அம்மா” என்று மைக்கை நீட்டினார்களாம்.. அதை புன்னகையுடன் ஏற்றுக்கொண்ட ஜானகி அம்மா, கண்களை மூடி "நமோ நாராயணா" என்று கடவுள் வாழ்த்து பாடலை பாடத் தொடங்கினார். ஆனால், அடுத்தடுத்து 15 பாடல்களை பாடி அங்கிருந்த ஒட்டுமொத்த கூட்டத்தையும் உருக வைத்துவிட்டார்.

கண்ணீர் விட்டு அழுத ஜானகி அம்மா

பாடல்களை பாடி முடித்ததும், அமெரிக்க அரங்கமே எழுந்து நின்று கைதட்டி ஆரவாரம் செய்துள்ளது.. அந்த நெகிழ்ச்சியான தருணத்தில், ஜானகி அம்மா மேடையிலேயே ஆனந்தக் கண்ணீர் விட்டு அழுதுள்ளார்,.

“நடக்கவே முடியாத என்னால் அன்றைக்கு மேடையில் அப்படி பாட முடிந்தது என்றால், அது அந்த பாபாவின் அனுகிரகம் தான்” என்று ஜானகி அம்மா ஒரு பத்திரிகை பேட்டியில் உருகிப் பேசியதாக, பிரபல தயாரிப்பாளரும் சினிமா விமர்சகருமான சித்ரா லட்சுமணன் தனது யூடியூப் பக்கத்தில் இதனை தெரிவித்திருந்தார்.. இந்த நெகிழ்ச்சி சம்பவத்தைதான் ரசிகர்கள் இப்போது மீண்டும் சோஷியல் மீடியாவில் ஷேர் செய்து வருகிறார்கள்..!!!

உயிருக்கு ஆபத்தான நிலையிலும் ரசிகர்களுக்காக ஜானகி அம்மா காட்டிய அந்த அர்ப்பணிப்பு, இன்றும் இசை உலகில் ஒரு மாபெரும் சாதனையாக பேசப்பட்டு வருகிறது..,!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+