பெரியாருக்கு மாலை அணிவித்து.. வெளியே வந்த விஜய்க்கு ஷாக்.. அருகே வந்த நபர்.. டீ சர்ட்டில் பாருங்க
சென்னை: தந்தை பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு பெரியார் திடலுக்கு சென்ற த.வெ.க. தலைவர் விஜய், பெரியாரின் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது நடைபெற்ற சம்பவம் ஒன்று பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.
த.வெ.க. மாநாட்டுக்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளது. விக்கிரவாண்டியில் வரும் 23ஆம் தேதி தவெக முதல் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை முன்னிட்டு நடிகர் விஜய் தனது கட்சிக்கு ஆள் சேர்க்கிறார். முக்கியமாக சில பழைய கைகளை கட்சிக்குள் கொண்டு வருவதற்கான பணிகளை நடிகர் விஜய் முடுக்கி விட்டு உள்ளாராம்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு செப்டம்பர் 23-ம் தேதி நடைபெறுமென கூறப்பட்ட நிலையில், அதை தள்ளி வைக்க முடிவெடுத்திருக்கிறார் விஜய் என்று கூறப்படுகிறது.
பெரியார் மரியாதை: இப்படிப்பட்ட நிலையில்தான் தந்தை பெரியாரின் 146 ஆவது பிறந்த நாளையொட்டி அவரது திருவுருவ சிலைக்கு தவெக தலைவர் நடிகர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.விஜய் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லவில்லை. பெரியாருக்கு மாலை அணிவித்து உள்ளார். பெரும்பாலும் அவரின் கொள்கை மதசார்பற்ற கட்சி கொள்கையாகவே இருக்கும், என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திமுக பாராட்டு: விஜய்யின் செயல் திராவிட உணர்வாளர்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார். தமிழ்நாட்டில் பெரியார் பெயரை உச்சரிக்காமல் அரசியல் நடத்த முடியாது என்பதை விஜய்யின் செயல் காட்டுகிறது; திராவிட கருத்துகளை ஏற்றுக்கொண்டு விஜய் செயல்பட்டால் மகிழ்ச்சியே என்று அவர் கூறியுள்ளார்.
அதேபோல் பெரியார் திடலுக்கு விஜய் சென்றது ஆச்சரியமில்லை; பாசிசத்தை எதிர்த்த பெரியார் பாதையில் விஜய் வருவது மகிழ்ச்சியே" மதவாதத்துக்குள் சிக்காமல் விஜய் கட்சியை நடத்த வேண்டும்; பெரியார் திடலுக்கு விஜய் சென்றதை காங்கிரஸ் வரவேற்கிறது, என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
சுவாரசிய சம்பவம்: இன்று பெரியார் திடலுக்கு சென்ற த.வெ.க. தலைவர் விஜய், பெரியாரின் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது நடைபெற்ற சம்பவம் ஒன்று பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. பெரியார் திடலில் தவெக தலைவர் விஜய்யுடன் திமுக ஆதரவாளர் ரௌவர் செல்ஃபி எடுத்துக்கொண்டார்.
திமுக கொடி போட்ட உடையுடன் வந்த அந்த நபர்.. சட்டென விஜய்யை பார்த்ததும் செல்பி கேட்டார். அவரின் உடையில் கருப்பு சிவப்பை கவனித்த விஜய்.. எதுவும் சொல்லாமல் அவருடன் போட்டோ எடுத்துக்கொண்டார். இந்த சம்பவம் பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. இப்போது கிட்டத்தட்ட திமுக, அதிமுகவின் அதே கொள்கையை விஜய் பேச தொடங்கி உள்ளார். திமுகவிற்கு கண்டிப்பாக விஜய் போட்டிதான்.. அதே சமயம்.. திமுக வலுவான தலைமையுடன் இருக்கும் நிலையில், தோல்வி முகத்தில் இருக்கும் அதிமுகவின் வாக்குகளை குறி வைத்து விஜய் களமிறங்குகிறாரோ என்ற கேள்வி உள்ளது.
இன்னொரு பக்கம் விசிக, காங்கிரஸ் போன்ற கட்சிகளுக்கு திராவிட கட்சிகளுக்கு மாற்றாக புதிய கூட்டாளி கிடைக்கும் சூழலை விஜய் ஏற்படுத்தி கொடுத்துள்ளார். பாஜகவோடு சேர முடியாத விசிக, காங்கிரஸ் போன்ற திராவிட கட்சிகளுக்கு மாற்றாக விஜய் உருவெடுத்துள்ளார்.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
செந்தில் பாலாஜி.. கே.என் நேரு.. அடுத்து அவர்தான்.. செஸ் போர்டில் அடுத்தடுத்து காய் நகர்த்தும் விஜய்! -
திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து? ரூ.2,100 கோடி ECR திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட விஜய் -
தமிழக அரசியலில் விஜய்யின் புதிய 'ஃபார்முலா'.. பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் ஏன் ஒரு மாஸ்டர் ஸ்ட்ரோக்? -
பாஜக கோபத்திற்கு ஆளாக நேரிடும்! இந்தியா கூட்டத்திற்கு தவெக போகாதது ஏன்? விஜய் எடுத்த பயங்கர முடிவு? -
ரூ.258 கோடி போதைப்பொருள் வழக்கு பரபரப்பு: விஜய் அரசுக்கு எதிராக திமுக அதிரடி குற்றச்சாட்டு -
மின்துறைக்கு குட்நியூஸ்.. 15,000 பணியிடங்கள் நிரப்பப்படும்.. அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி அறிவிப்பு -
கள்ளச் சாராயத்தை ஒழிக்க விஜய் போட்ட மெகா பிளான்.. நேரடியாக களத்தில் இறங்கிய ஆதவ் அர்ஜுனா! -
கட்சி நிகழ்ச்சியா? அரசு ஆய்வுக் கூட்டமா? அமைச்சருக்கு இணையாக அதிகாரிகளுடன் அமர்ந்த தவெக நிர்வாகி! -
நீட் தேர்வு ரத்து மசோதா நிறைவேற்றப்படுமா? அமைச்சர் ராஜ்மோகன் கொடுத்த முக்கிய பதில்! -
"தமிழகத்தில் அண்ணாமலைக்கும் மன்சூர் அலிகானுக்கும் தான் போட்டி!" நக்கலடித்த தவெக எம்எல்ஏ முஸ்தபா -
பாட்டிலுக்கு ரூ.10.. டாஸ்மாக் பிரச்சனைக்கு பத்து நாட்களில் நிரந்தர தீர்வு.. அமைச்சர் விக்னேஷ் உறுதி












Click it and Unblock the Notifications