"அவரை" கூட கண்டிக்கலையே! திமுக பொதுக்குழுவில் ஏன் ஒரு தீர்மானம் கூட நிறைவேற்றவில்லை? காரணமே வேறயாமே
சென்னை: நேற்று நடந்த திமுக பொதுக்குழுவில் ஏன் ஒரு தீர்மானம் கூட நிறைவேற்றப்படவில்லை என்ற விவாதம் கட்சியினர் மத்தியில் எழுந்துள்ளது.
திமுக உட்கட்சி தேர்தல் பெரிய கலவரம் மோதல் இன்றி அமைதியாக நடந்து முடிந்துள்ளது. இதன்பின் நேற்று நடைபெற்ற திமுக பொதுக்குழுவும் சுமுகமாக நடைபெற்றது.
ஒரு பக்கம் அதிமுக பொதுக்குழு ஜூலை 11ம் தேதி நடந்து இன்னும் கூட பொதுக்குழு தொடர்பாக வழக்கு நடக்கும் நிலையில், அதன்பின் நடந்த திமுக பொதுக்குழு சுமுகமாக முடிந்து உள்ளது.
ஒன்றிய செயலாளர்கள், மாவட்ட செயலாளர்களுக்கான தேர்தல் முடிந்துவிட்டது. அதேபோல் நேற்று தலைவர், பொருளாளர், பொதுச்செயலாளர், துணை பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்பட்டனர்.

தேர்வுகள்
திமுகவின் தலைவராக 2-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்.திமுகவின் துணை பொதுச்செயலாளர்களில் ஒருவராக கனிமொழி எம்.பியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நியமனம் செய்தார். பொதுச்செயலாளராக அமைச்சர் துரைமுருகன் தேர்வு செய்யப்பட்டார். அதேபோல் பொருளாளராக டிஆர் பாலு தேர்வு செய்யப்பட்டார். நேற்று நடந்த பொதுக்குழுவில் உட்கட்சி தேர்தல் குறித்தும் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

ஸ்டாலின் பேச்சு
முதல்வர் ஸ்டாலின் தனது பேச்சில் , தமிழகத்தில் அண்மையில் நடந்த அனைத்து தேர்தல்களில் திமுக வென்றுள்ளது. திமுக உட்கட்சித் தேர்தல் சில சலசலப்புகளை தவிர பொதுவாக அமைதியாக நடந்துள்ளது. போட்டியிடுவது மட்டுமல்ல விட்டுக் கொடுப்பதும் ஜனநாயகம்தான் என்பார் அண்ணா. சில நிர்வாகிகள் ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொள்ளாமல் இருப்பது கூட கட்சிக்கும் துரோகம் செய்வது போல. அனைத்து நிர்வாகிகளின் செயல்பாடுகளும் தலைமை கழகம் கண்காணிக்கும். எந்த ஒரு மனிதரையும் விட திமுக, கொள்கைதான் பெரிது என செயல்பட வேண்டும், என்று குறிப்பிட்டார்.

தீர்மானம்
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற திமுக பொதுக்குழுவில் எந்த விதமான தீர்மானங்களும் நிறைவேற்றப்படவில்லை. நேற்று பாஜக, அதிமுகவை கடுமையாக விமர்சனம் செய்து முதல்வர் ஸ்டாலின் பேசினார். அவர் தனது உரையில், நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளையும் கைப்பற்றி திமுக முக்கியமான சக்தியாக திகழ வேண்டும். 2026 சட்டசபை தேர்தலில் 100% வெற்றிக்கு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவது முக்கியம். பாஜக வெல்வதற்கு எந்த கீழ்த்தரமான செயலையும் செய்யக் கூடும். அரசியலையும் ஆன்மீகத்தையும் இணைக்காதவர்கள் தமிழக மக்கள்- அதனால் பாஜக மூச்சு திணறுகிறது. அம்மையார் ஜெயலலிதா தலைமைக்கு பின் அதிமுக கலகலகத்து கிடக்கிறது. அதிமுகவின் பிளவுகளில் குளிர்காய நினைக்கிறது பாஜக, என்று குறிப்பிட்டார்.

இல்லை
ஆனால் மத்திய அரசை கண்டித்து திமுக சார்பாக எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை. அதோடு ஆளுநரை கூட திமுக கண்டிக்கவில்லை. மேலும் பல மசோதாக்கள் நிலுவையில் உள்ள நிலையில் அதை பற்றியும் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. இது திமுகவினர் இடையே விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

என்ன காரணம்
ஏன் இப்படி தீர்மானம் நிறைவேற்றாமல் பொதுக்குழு நடத்தி உள்ளனர் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக திமுக வட்டாரங்கள் வெளியிட்ட தகவலில் விரைவில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் திமுகவில் நடக்கும். அப்போது தீர்மானங்கள் நிறைவேற்றுவார்கள். இப்போது தேர்தலில் வென்றவர்கள் பதவி ஏற்க வேண்டும். தலைவர், பொருளாளர், பொதுச்செயலாளர், துணை பொதுச்செயலாளர்கள் பதவி ஏற்க வேண்டும் என்பதால் இதில் வேறு தீர்மானங்கள் எதுவும் நிறைவேற்றவில்லை. மற்றபடி தீர்மானங்களை நிறைவேற்றாமல் போனதற்கு வேறு காரணங்கள் எதுவும் இல்லை என்று கூறப்படுகிறது.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications