இரவில் நடந்த சம்பவம்.. நகைச்சுவை நடிகர் போண்டா மணி இறக்கும் முன் என்ன நடந்தது? அதிர்ச்சி பின்னணி
சென்னை:நேற்று காமெடி நடிகர் போண்டா மணி காலமானார். இவரின் மரணம் தொடர்பாக தற்போது விசாரணை செய்யப்பட்டு வருகிறது.
நகைச்சுவை நடிகர் போண்டா மணி பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். நடிகர் வடிவேலுவுடன் இவர் நடித்த காமெடிகள் மிக பிரபலம். சமீப காலமாக வடிவேலு டீமில் இருக்கும் பலருக்கு வாய்ப்புகள் கிடைப்பது இல்லை.

அவர் பார்ம் அவுட் ஆனதால் அவருடன் நடித்த பலருக்கும் சினிமா வாய்ப்புகள் கிடைப்பது இல்லை. இதனால் சிலர்.. அன்றாட உணவிற்கு கூட கஷ்டப்படும் நிலை ஏற்பட்டு உள்ளது. பலர் பொருளாதார ரீதியாக கஷ்டப்பட்டு வருகின்றனர்.
இப்படிப்பட்ட நிலையில்தான் காமெடி நடிகர் போண்டா மணி பொருளாதார ரீதியாக கஷ்டப்பட்டு வந்துள்ளார். அவருக்கு பெரிதாக சினிமா வாய்ப்புகள் கிடைக்கவில்லை. காமெடி ரோல்கள் எதுவும் பெரிதாக கிடைக்கவில்லை. திரைப்படங்கள் தவிர சில சின்னத்திரை தொடர்களிலும் அவர் நடித்தார். சென்னை பொழிச்சலூரில் அவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில் தான் சமீபத்தில் அவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார்.
திடீர் மரணம்: காமெடி நடிகர் போண்டா மணி காலமானார். இவரின் மரணம் தொடர்பாக தற்போது விசாரணை செய்யப்பட்டு வருகிறது.
உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். வீட்டில் திடீரென மயங்கி விழுந்த போண்டா மணி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். அங்கே அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
சந்தேகம்: அவரின் மரணத்தில் தொடக்கத்தில் சந்தேகம் நிலவியது. திடீரென அவரின் மரணத்திற்கு என்ன காரணம், பின்னணியில் என்ன நடந்து இருக்கும் என்று விசாரணைகள் செய்யப்பட்டன. அவருக்கு 2 சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டதாக கூறப்படுகிறது. இதற்காக அவர் மருத்துவ சிகிச்சை பெற்று வந்த உள்ளார்.
அவருக்கு கிட்னி கல் பிரச்சனை இருந்துள்ளது. அதுவே மோசமாகி கிட்னி செயல் இழக்கும் நிலைக்கு சென்றுள்ளது. ஒரு கிட்னி பாதித்த நிலையில் இன்னொரு கிட்னியும் மோசமான நிலையை அடைந்து உள்ளது. இதற்கு அவர் தொடர் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில்தான் நேற்று இரவு தனது வீட்டில் திடீரென மயங்கி விழுந்து இறந்துள்ளார். அவர் அடிக்கடி டயாலிசிஸ் சிகிச்சை எடுத்து வந்த நிலையில் நேற்று முதல் நாளே அவருக்கு உடல்நிலை மோசமாகி உள்ளது.
அடிக்கடி மருத்துவமனைக்கு செல்லும் அவர் இன்று மருத்துவமனையில் அட்மிட் ஆகலாம் என்ற திட்டத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு முன் அவருக்கு மயக்கம் ஏற்படவே.. சம்பவ இடத்திலேயே அவர் பலியாகி உள்ளார்.
இது இயற்கையான மரணம் என்று மருத்துவர்கள் தரப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இருந்தாலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
யார் இவர்: இலங்கையை பூர்வீகமாக கொண்டவர் நடிகர் போண்டா மணி. இவர் 1991ம் ஆண்டு வெளியான நடிகர் பாக்யராஜின் 'பவுனு பவுனுதான்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். அதன்பிறகு ஏராளமான திரைப்படங்களில் அவர் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
'சுந்தரா டிராவல்ஸ்', 'மருதமலை', 'வின்னர்', 'வேலாயுதம்', 'ஜில்லா' உள்ளிட்ட 150க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக நடிகர் வடிவேலுவுடன் சேர்ந்து நடித்த அவரது காட்சிகள் அனைவரையும் கவர்ந்தது.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications