கசிந்த மெகா "சீக்ரெட்".. 20+20+21.. உருவானது மூவர் குழு.. எடப்பாடியை "ஆட்டிப்படைக்க" போகும் பிளான்!
சென்னை: அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்எல்ஏக்களை தட்டி தூக்குவதற்கான பிளான்களை ஓ பன்னீர்செல்வம் தரப்பு செய்து வருகிறது. இதற்காக
ஜூலை 11ம் தேதி நடந்த திமுக பொதுக்குழு செல்லும். இந்த பொதுக்குழு செல்லாது என்று தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்கிறோம் என்று உயர் நீதிமன்ற 2 நீதிபதி அமர்வு தீர்ப்பு வழங்கி உள்ளது. உயர் நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் வழக்கில் காலை இந்த தீர்ப்பை வழங்கி உள்ளனர்
இந்த தீர்ப்பு ஓ பன்னீர்செல்வத்திற்கு எதிராக திரும்பி உள்ளது. இதற்கு எதிராக மேல்முறையீடு செய்ய ஓ பன்னீர்செல்வம் தரப்பு முடிவு செய்துள்ளது.
நாளை காலை ஓ பன்னீர்செல்வம் தரப்பு இதற்காக உச்ச் நீதிமன்றத்தில் மனு கொடுக்க உள்ளது.

எம்எல்ஏக்கள்
இந்த நிலையில் எடப்பாடி ஆதரவு எம்எல்ஏக்களை தட்டி தூக்குவதற்கான பிளான்களை ஓ பன்னீர்செல்வம் தரப்பு இன்னொரு பக்கம் செய்து வருகிறது. அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 66 பேரில் எடப்பாடிக்கு 62 பேரின் ஆதரவு இருக்கிறது. இந்த பெரும்பான்மை பலம் எடப்பாடிக்கு கூடுதல் வலிமையை கட்சிக்குள் கொடுத்து வருகிறது. இதை முதலில் உடைப்பதற்காகத்தான் சசிகலா, ஓபிஎஸ், தினகரன் தரப்பினர் மறைமுகமாக கைக்கோர்த்தனர். அந்த திட்டத்தின் படி, மூன்று குழு உருவாகியிருக்கிறது.

என்ன பிளான்
அதாவது, 62 எம்.எல்.ஏ.க்களிடம் எந்தெந்த எம்.எல்.ஏ.க்களிடம் யார் யார் பேசுவது என முதலில் வகுத்துக் கொண்டனராம். அதன்படி 62 எம்.எல்.ஏ.க்களில் எடப்பாடியை தவிர்த்து விட்டு 61 எம்.எல்.ஏ.க்களின் லிஸ்ட் எடுக்கப்பட்டு 20+20+21 என 3 ஆக பிரித்துள்ளனர். இதில் 21 எம்.எல்.ஏ.க்களின் பட்டியல் ஓபிஎஸ் வசம் சென்றுள்ளது. அந்த வகையில் சசிகலா, ஓபிஎஸ், தினகரன் மூவர் தரப்பிலும் தலா 1 குழு உருவாக்கப்பட்டு உள்ளது.

20+20+21
அந்த குழு சம்மந்தப்பட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்களிடம் ரகசியமாக பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. பேச்சுவார்த்தையில், எம்.எல்.ஏ.க்கள் சொல்லும் விசயங்களை அந்தந்த குழு, தங்களின் எஜமானர்களிடம் (சசிகலா, ஓபிஎஸ், தினகரன்) உடனுக்குடன் தெரிவித்து வருகிறதாம். பெரும்பாலும் எம்.எல்.ஏ.க்கள் , ''கட்சி ஒன்றாக இருக்க வேண்டும் ; பிரிந்தவர்கள், நீக்கப்பட்டவர்கள் என அனைவரும் மீண்டும் கட்சிக்குள் வர வேண்டும் என்பதுதான் எங்களின் ஆசை.

மூவர் குழு
அதற்காக, எந்த தியாகத்துக்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம். அதேசமயம், இன்றைக்கு கட்சியின் நிலைமையையும் அதிகாரத்தையும், கோர்ட்டு, தேர்தல் ஆணையம்தான் தீர்மானிக்கும்ங்கிற சூழலுக்குப் போயிடுச்சி. அதில் ஒரு தெளிவான முடிவு வரட்டும். எங்களின் முடிவையும் வெளிப்படையாக சொல்கிறோம். இப்போதைக்கு இதைத்தான் சொல்ல முடியும்'' என்று பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள், தங்களை அணுகிய குழுவினரிடம் சொல்லியிருக்கிறார்களாம்.

என்ன பேசுகிறார்கள்
பெரும்பாலான நபர்கள் கோர்டில் வழக்கு நடப்பது பிடிக்கவில்லை. மாறி மாறி தீர்ப்பு வருகிறது. அதனால் சசிகலா, டிடிவி போன்றவர்கள் மீண்டும் உள்ள வந்து கட்சிக்குள் சமநிலையை ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். சமீபத்தில் ஓ பன்னீர்செல்வத்திற்கு எதிராக தீர்ப்பு வந்தது. ஆனாலும் அதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் இழுக்க இந்த குழு முயன்று வருகிறதாம். 3ல் ஒரு பங்கு எம்எல்ஏக்களை இழுத்தாலும் சின்னத்தை முடக்கி விடலாம் என்பதால் இவர்கள் தீவிரமாக பணிகளை செய்து வருகிறார்களாம்.












Click it and Unblock the Notifications