360 டிகிரி எதிரியா? எப்படி மேன்? அண்ணாமலைக்கு பளீர் பதிலடி.. டிஆர்பி ராஜாவின் "கோமியம் கேங்" அட்டாக்
சென்னை: திமுகவும் நாங்களும் 360 டிகிரி என்று அண்ணாமலை கூறியதற்கு எம்எல்ஏ டிஆர்பி ராஜா விமர்சனம் வைத்துள்ளார்.
நேற்று ரூ31,400 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்வில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி சென்னை வருகை புரிந்தார். இந்த பயணத்தில் பல்வேறு சுவாரசியமான நிகழ்வுகள் நடைபெற்றன.
முக்கியமாக முதல்வர் ஸ்டாலினின் பேச்சு தேசிய அளவில் கவனம் பெற்றது. நீட், தமிழை ஆட்சி மொழியாக்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பிரதமர் மோடி முன் முதல்வர் ஸ்டாலின் மேடையில் எடுத்து வைத்தார்.

ஸ்டாலின் பேச்சு
இந்த நிலையில் நேற்று ஸ்டாலினின் பேச்சை அண்ணாமலை கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார். அண்ணாமலை தனது விமர்சனத்தில் முதல்வர் இப்படி நடந்து கொள்வார் என்று எதிர்பார்க்கவில்லை. பிரதமரை மேடையில் அமரவைத்து, தமிழ்நாடு முதல்வர் அரசியல் செய்துள்ளார். இது நாகரீகம் அற்ற செயல். எங்கள் முதல்வர் கருணை காட்டுவார் என்று எதிர்பார்த்தோம். முதல்வரின் நடத்தையால் வெட்கப்படுகிறோம்.

குடிமகன்
இந்தியாவின் ஒரு சாதாரண குடிமகனாகவும், பெருமை வாய்ந்த தமிழனாக முதல்வரின் பேச்சு என்னை வெட்கம் அடைய வைக்கிறது. எங்கள் முதல்வர் கருணை காட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது, தமிழக முதலமைச்சரின் மோசமான நடத்தையால் நான் வெட்கப்படுகிறேன். முதல்வரும் நானும் கொள்கையில் 360 டிகிரி மாறுபட்டவர்கள் . 360 டிகிரி நாங்கள் திமுக எதிரிதான். ஆனால் அதற்காக முதல்வருக்கு உண்டான மரியாதையை கொடுக்காமல் இருக்க மாட்டோம்.

அண்ணாமலை ஸ்டாலின்
அவரை நாங்கள் மதிப்போம். விட்டுக்கொடுக்க மாட்டோம். ஆனால் முதல்வர் தமிழ்நாடு சரித்திரத்தில் கரும்புள்ளி ஏற்படும் வகையில் முதல்வர் ஸ்டாலின் பேசி இருக்கிறார் என்று அண்ணாமலை குறிப்பிட்டார். அண்ணாமலை இப்படி குறிப்பிட்டது பற்றி சமூக வலைத்தளங்களில் கடும் விவாதங்கள் எழுந்துள்ளன . அவர் 360 டிகிரி எதிரி என்று குறிப்பிட்டுள்ளார்.

அண்ணாமலை 360 டிகிரி
பொதுவாக 180 டிகிரி என்பதுதான் எதிர் துருவம் ஆகும். 360 டிகிரி என்றால் ஒரே இடம். திமுகவிற்கு 360 டிகிரியில் நாங்கள் இருக்கிறோம் என்றால்.. திமுகவோடு ஒரே இடத்தில் இருக்கிறோம் என்று அர்த்தமாகிவிடும் என்று நெட்டிசன்கள் பலர் விமர்சனங்களை வைத்து வருகிறார்கள். இந்த நிலையில்தான் திமுக எம்எல்ஏ டிஆர்பி ராஜா அண்ணாமலையின் இந்த கருத்தை கேள்வி எழுப்பி உள்ளார்.

எப்படி மேன்?
அது எப்படி மேன் 360 டிகிரி ஆகும் என்று டிஆர்பி ராஜா கேள்வி எழுப்பி உள்ளார். இந்த ஜியோமெட்ரி தெரியாமல் ஐபிஎஸ் ஆனது எப்படி என்றும் கேள்வி எழுப்பி மீம் போட்டுள்ளார். அதோடு டிஆர்பி ராஜா தொடங்கி கோமியம் கேங் என்ற #GomiyumGang டேக்கை பயன்படுத்தி வருகிறார். அதே டேக்கில் அண்ணாமலைக்கும், பாஜகவிற்கும் எதிராக கடுமையான விமர்சனங்களை வைத்து வருகிறது. .












Click it and Unblock the Notifications