இனி எங்கு பார்த்தாலும் 9 கேரட் தங்கம் தான்.. மத்திய அரசின் புதிய ஆர்டர்! ஏன் முக்கியம்?
சென்னை: தங்கம் விலை தாறுமாறாக அதிகரித்து வரும் நிலையில், இப்போது புதிதாக 9 கேரட் தங்கத்திற்கு மத்திய அரசு சில முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்திருக்கிறது. அதாவது 9 கேரட் தங்கத்திற்கு ஹால்மார்க்கிங் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ள நிலையில், வரும் காலத்தில் நாடு முழுக்க இதன் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தாண்டு தொடக்கம் முதலே தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. இம்மாதத் தொடக்கத்தில் தான் அது புதிய உச்சத்தை எட்டியது. இப்போது தங்கம் விலை சற்று குறைந்திருந்தாலும் கூட இப்போதும் அதிகமாகவே இருக்கிறது. அமெரிக்கா தங்கக் கட்டிகள் மீது வரி விதிக்கலாம் என டிரம்ப் முதலில் சொன்னதே தங்கம் விலை உச்சம் தொடக் காரணமாகும்.

தாறுமாறாக உயரும் தங்கம்
இப்படித் தங்கம் விலை தாறுமாறாக உயர்வதால் மக்கள் அதிகப் பணம் செலவிட வேண்டியுள்ளது. உலகின் மிகப் பெரிய தங்கம் வாங்கும் நாடாக இந்தியா கருதப்படுகிறது. ஆனாலும் கூட கடந்த ஜூன் மாதத்தில் தங்கம் விற்பனை 60 சதவீதம் சரிந்திருப்பது, தங்க விலை ஏற்றதால் மக்கள் வாங்க முடியாமல் சிரமப்படுவதையே காட்டுகிறது.
இந்தச் சூழலில் தான், மத்திய அரசு இப்போது முக்கிய நடவடிக்கை ஒன்றை எடுக்கிறது. அதாவது 9 கேரட் (9K) தங்கத்திற்கான ஹால்மார்க்கிங் தரநிலைகளைக் கடந்த மாதம் மத்திய அரசு அங்கீகரித்தது. இதன் மூலம் 9 கேரட் தங்கம் இந்தியத் தர நிர்ணயப் பணியகத்தின் ஹால்மார்க்கிங் அமைப்பில் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டுள்ளது.
ஹால்மார்க் கட்டாயம்
இது குறித்து கவுன்சில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "9 கேரட் தங்கம் (375 ppt) BIS திருத்தம் எண் 2இன் படி கட்டாய ஹால்மார்க்கிங் கீழ் வந்துள்ளது. இதனால் அனைத்து நகைக்கடைகளும் ஹால்மார்க்கிங் மையங்களும் இதைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும்" என்று தெரிவித்துள்ளது. முன்பு 14K, 18K, 20K, 22K, 23K மற்றும் 24K ஆகியவற்றுக்கு ஹால்மார்க் கட்டாயமாக இருந்தது. இப்போது அந்த லிஸ்ட்டில் 9 கேரட் தங்கமும் சேர்க்கப்பட்டுள்ளது.
என்ன அர்த்தம்
பொதுவாக நாம் 24 கேரட் தங்கம், 22 கேரட், 18 கேரட் என நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், இது எப்படிக் கணக்கிடப்படுகிறது என்பது பலருக்கும் தெரியாது. அது குறித்து இப்போது நாம் விரிவாகப் பார்க்கலாம். இதில் 24 கேரட் தங்கம் என்பது 99.9 சதவீதம் தூய தங்கம். அதாவது அதில் வேறு உலோகங்கள் எதுவும் கலக்கப்படுவதில்லை. அதேநேரம் 22 கேரட் தங்கம் என்பதில் 22 பங்கு தங்கமும் 2 பங்கு இதர உலோகமும் இருக்கும். இது பொதுவாக 91.6% தங்கம் இருக்கும்.
மறுபுறம் 9 கேரட் தங்கம் என்பது 37.5 சதவீதம் தங்கமாகும். இதில் 24 பங்குகளில் 9 பங்கு மட்டுமே தங்கம் இருக்கும். இதர 15 பங்குகள் வேறு உலோகங்கள் இருக்கும். அதாவது மீதமுள்ள 62.5 சதவீதம் தாமிரம், வெள்ளி அல்லது ஜின்க் போன்ற கலப்பு உலோகங்கள் இருக்கும்.
எங்கு பார்த்தாலும்
தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில் பலரும் குறைந்த விலையில் வேறு ஆப்ஷன்களை பார்க்கிறார்கள். அவர்களுக்கு இந்த 9 கேரட் தங்கம் ஏற்றதாக இருக்கிறது. அதாவது குறைந்த பட்ஜெட் கொண்டவர்களுக்கு இது ஒரு சிறந்த ஆப்ஷனாக இருக்கிறது. இந்தச் சூழலில் ஹால்மார்க்கிங் திட்டத்தில் 9 கேரட் தங்கம் சேர்க்கப்பட்டதால், அதன் நம்பகத்தன்மை மேலும் அதிகரித்துள்ளது. நாடு முழுக்க 9 கேரட் தங்கத்தின் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விலை மலிவு
இதனால் நகைக் கடைக்காரர்களும் 9 கேரட் தங்கத்தை அதிகம் விற்பார்கள். மேலும், 22 கேரட் அல்லது 18 கேரட் தங்கத்தை விட நீடித்து உழைக்கும் என்பதால், அன்றாடம் யூஸ் செய்யும் மோதிரங்கள் மற்றும் நகைகளுக்கு ஏற்றதாக அமைகிறது. 9 கேரட் தங்கம் விலை மலிவு என்பதால், திருட்டு போகும் ஆபத்துகளும் குறைவு.
24 கேரட் தங்கம் இப்போது ஒரு கிராம் ரூ.10,000ஐ தாண்டிவிட்டது. இருப்பினும், 9 கேரட் தங்கம் கிராமுக்கு சுமார் ₹3,700க்கே விற்கப்படுகிறது. அடுத்து பண்டிகை சீசன் நெருங்கி வருவதால், 9 கேரட் தங்கத்திற்கு ஹால்மார்க்கிங் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது, விற்பனையை மேலும் ஊக்குவிக்கவே செய்யும்.
-
இந்தியாவில் தங்கம் வாங்க ஆள் இல்லை! 70% சரிந்த வியாபாரம்.. பின்னணியில் அதிர வைக்கும் காரணம்? -
ஆப்பு வச்சுட்டாரே மோடி.. ஒரே ஆர்டரில் ஒட்டுமொத்தமாக சரிந்த தங்க கோட்டை! அலர்ட்டான ரிசர்வ் வங்கி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications