"தோனிய பார்க்கணுமா!" பவுன்சர்களை போட்டு தாக்கிய ஆனந்த் சீனிவாசன்! கடைசியில சொன்ன பதில் இருக்கே! அடடே
சென்னை: இப்போது எங்குப் பார்த்தாலும் ஐபிஎல் குறித்தே பேச்சாக உள்ளது. இதனிடையே பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன், ஐபிஎல் டிக்கெட்கள் குறித்துப் பல விளக்கங்களைக் கொடுத்துள்ளார்.
மிடில் கிளாஸ் மக்களுக்குத் தேவையான பொருளாதார அட்வைஸ்களை வழங்கி வருபவர் ஆனந்த் சீனிவாசன். கடன் வாங்கக் கூடாது, ஆடம்பர செலவு கூடாது என்பதே இவரது அடிப்படை அட்வைஸாக இருந்து வருகிறது.
இப்போது ஐபிஎல் போட்டிகள் தொடங்கும் நிலையில், பலரும் போட்டிப் போட்டுக் கொண்டு டிக்கெட்களை வாங்கி வருகிறார்கள். இப்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் அது குறித்துத் தான் விளக்கமாகப் பேசியுள்ளார்.

முதல் பாலே க்ளீன் போல்ட்
முதலில் நெறியாளர் ஒடிடியில் காசு கொடுத்து எல்லாம் மேட்ச் பார்க்கலாமா என்பது போல கேட்கிறார். அப்போது உள்ளே புகுந்த ஆனந்த் சீனிவாசன், "இந்தாண்டு ஐபிஎல் போட்டிகள் அனைத்துமே ஜியோவில் இலவசமாக ஒளிபரப்புகிறார்கள்.. யார் கிட்ட காது குத்த பார்க்கிறாய்.. அது முழுக்க முழுக்க இலவசம்" என்று கூறி முதல் பாலிலே க்ளீன் போல்ட் ஆக்கிவிட்டார். இந்த நேர்காணலில் நெறியாளர் கூடவே மற்றொருவரை அழைத்து வந்திருந்தார். அந்த நபர் பல வாரங்கள் காசு சேர்த்து வைத்து சிஎஸ்கே போட்டிக்கு 1500 டிக்கெட்டை 4000 ரூபாய் கொடுத்து வாங்கியதாக நைசாக கோர்த்துவிட்டார்.

0.5 கிராம் தங்கம்
இதைக் கேட்டதுமே ஆனந்த் சீனிவாசனுக்கு அதிர்ச்சி.. அவரது முதல் பதிலே, "யாராவது 4000 கொடுத்து கிரிக்கெட் மேட்ச் பார்க்க போவாங்களா" என்பது தான். தொடர்ந்து பேசிய அவர், "ஐபிஎல் ஆரம்பித்து 15 ஆண்டுகள் ஆகிவிட்டது. நான் ஒரு முறை கூட நேரில் பார்த்தே இல்லை. நானே ஒரு கிரிக்கெட் பைத்தியம் தான். ஆனால், யாராவது இந்தளவுக்குச் செலவழித்துச் செல்வார்களா.. 4000 ரூபாய்க்கு 0.5 கிராம் தங்கம் வாங்கியிருக்கலாம்.

ஹோட்டல் வெளியே போய் பாரு
பயிற்சி போட்டியை இலவசமாகவே பார்த்திருக்கலாம். மஞ்சள் ஜெர்சியில் தோனியை பார்க்க வேண்டும் என்றால் ஸ்டேடியத்திற்கு வெளியே பஸ்ஸிலேயே பார்க்கலாமே" என்று அடுத்தடுத்து யார்கர்களை வீசினார். அங்கெல்லாம் ரொம்ப கூட்டமாக இருக்கும் என்று அவர் சொல்ல, அடுத்த நொடியே வந்தது கொடூர பவுன்சர். "ஏம்ப ஸ்டேடியத்தில் மட்டும் நீ என்ன தனியாவ பார்க்க போற.. சம்பளத்தின் ஒரு பகுதியை இப்படிச் செலவழித்தால் என்ன செய்ய முடியும். தோனியா உனக்குக் காசை கொடுப்பார்.

இரண்டு மாடி
அதுவும் 4000 கொடுத்து இரண்டு மாடி உயரத்தில் இருக்கும் ஸ்டாண்டிற்கு டிக்கெட் வாங்கியுள்ளாய். அங்கே இருந்தே மேட்சே பார்க்க முடியாது. தோனியை எப்படிப் பார்க்கப் போகிறாய். அங்கே போயும் அங்குள்ள திரையில் தான் பார்த்துக் கொண்டிருப்பாய். அதற்கு வீட்டிலேயே பார்க்கலாமே.. ஜியோ சினிமாவில் ப்ரீயாக போடறாங்களே.. தோனி மீது ஈர்ப்பு இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியுமா. எனக்கும் தான் தோனியை பிடிக்கும். ஆனால், இப்படியெல்லாம் செய்ய மாட்டேன்.

எப்படி வாங்கலாம்
உங்களுக்குக் காசின் மதிப்பே தெரிவதில்லை. அரை கிராம் தங்கம் வாங்கியிருக்கலாம். அப்படியே உனக்கு தோனியை பார்க்க வேண்டும் என்றால் இந்தாண்டு 7 போட்டிகள் இங்கு நடக்கும். அதில் எதாவது ஒரு போட்டிக்குக் கூட்டம் குறைவாக இருக்கலாம். அதற்குச் சென்று வாங்கி இருக்கலாமே. 4000 ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்குவது ரொம்ப ஓவர். சினிமா மற்றும் படங்களுக்கு இவ்வளவு செலவழிக்கக் கூடாது. அப்படியே தோனியை பார்க்க வேண்டும் என்றால் ஹோட்டல் முன்னாடி போய் நின்னு பார்க்கலாமே.

தங்கம்
சினாமாவில் முதல் நாள் ஷோவுக்கு 2000 கொடுத்து வாங்குவது, 4000 ரூபாய் கொடுத்து கிரிக்கெட் எல்லாம் எதற்கு... இத்துடன் ஒரு 1500 ரூபாய் போட்டால், ஒரு கிராம் தங்கம் வாங்கியிருக்கலாம். சில ஆண்டுகளில் அதன் மதிப்பு அதிகரிக்கும். உங்களுக்கு இது புரிவதே இல்லை. எனக்கு 5 வயது இருக்கும் போது தங்கத்தை 27 ரூபாய்க்கு எனது வீட்டில் வாங்கியுள்ளனர். இப்போ என்ன ரேட்டில் இருக்கிறது. அப்படி என்ன பைத்திகாரதனம். தயவு செய்து நீங்கள் இப்படி எல்லாம் செய்யாதீர்கள்" என்று பொரிந்து தள்ளிவிட்டார்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications