டெய்லி 6 ரூபாய் போட்டால் போதும்.. ஒரு லட்சம் வரை கவரேஜ்! குழந்தைகளுக்கான நல்ல காப்பீடு திட்டம்
சென்னை: இந்தியாவில் இப்போது பலருக்கும் காப்பீடு குறித்த புரிதல் இல்லாமலேயே இருக்கிறது. எதிர்பாராத நேரங்களில் இவை தான் நமக்கு பெரியளவில் உதவும். அதுபோன்ற ஒரு காப்பீடு திட்டம் குறித்து நாம் பார்க்கலாம்.
நமது நாட்டில் இன்சூரன்ஸ் எனப்படும் காப்பீடு திட்டத்தை எடுக்கும் பழக்கம் மிக மிகக் குறைவாகவே இருக்கிறது. எதிர்பாராத நிகழ்வுகள் எதாவது நடக்கும் போது இதுபோன்ற காப்பீட்டுத் திட்டங்கள் தான் நமக்கு கை கொடுக்கும்.
இதனிடையே இந்திய தபால் துறை வழங்கும் ஒரு காப்பீடு திட்டம் குறித்து நாம் பார்க்கலாம். இத்திட்டத்தின் கீழ் தினசரி வெறும் 6 ரூபாய் செலுத்தி ரூபாய் ஒரு லட்சம் வரையிலான காப்பீட்டை நம்மால் பெற முடியும்.

காப்பீடு திட்டம்: பால் ஜீவன் பீமா யோஜனா என்பது இந்தியத் தபால் அலுவலகத்தால் வழங்கப்படும் குழந்தைகளுக்கான ஆயுள் காப்பீட்டுத் திட்டமாகும். இந்தத் திட்டத்தின் கீழ், பெற்றோர்கள் தபால் அலுவலகக் கணக்கில் ஒரு நாளைக்கு ரூ. 6 மட்டுமே டெபாசிட் செய்ய வேண்டும். குழந்தை எதிர்பாராதவிதமாக விதமாக அல்லது விபத்தில் உயிரிழந்தால் பெற்றோருக்குக் காப்பீட்டுத் தொகையாக ரூ.1 லட்சம் கிடைக்கும்.
எதிர்பாராதவிதமாகக் குழந்தையை உயிரிழந்தால் ஏழைக் குடும்பங்களுக்கு இது குறைந்தபட்ச நிதிப் பாதுகாப்பை வழங்குகிறது. தினசரி 6 ரூபாய் மட்டுமே டெபாசிட் செய்தால் போதும் என்பதால், காப்பீடு போடுவோரின் குடும்பத்தின் மீது நிதிச்சுமையும் ஏற்படாது. இதனால் நமக்கு ரூ. 1 லட்சம் வரை காப்பீட்டுத் தொகையைக் கிடைக்கும். ஒரு லட்ச ரூபாய் என்பது ஏழ்மை நிலையில் இருப்போருக்கு நிச்சயம் பெரியளவில் உதவவே செய்யும்.
ஊக்குவிக்கும்: இதேபோல இந்த பால் ஜீவன் பீமா யோஜனாவின் குழந்தைகளிடையே சேமிப்பு பழக்கம் மற்றும் நிதி ஒழுக்கத்தை ஊக்குவிக்கிறது. குழந்தைகளையே நேரடியாகத் தபால் நிலையத்திற்குச் சென்று தொகையைச் செலுத்த வைப்பதன் மூலம் அவர்களுக்குச் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கலாம்.

பால் ஜீவன் பீமா யோஜனாவிற்கு விண்ணப்பிக்க, பெற்றோர் அல்லது பாதுகாவலர் தங்களுக்கு அருகிலுள்ள தபால் நிலையத்திற்கு நேரில் செல்ல வேண்டும். அங்கே பால் ஜீவன் பீமீ யோஜனாவுக்கு என இருக்கும் படிவத்தைப் பெற்று பூர்த்தி செய்து அளிக்க வேண்டும். அதில் பெயர், வயது மற்றும் முகவரி எனக் குழந்தை பற்றிய விவரங்களும், நாமினி பற்றிய விவரங்களையும் நிரப்பித் தர வேண்டும். மேலும், குழந்தையின் அடையாளம் அட்டை ஒன்றும் முகவரிக்கான அடையாள அட்டையையும் வழங்க வேண்டும்.
யார் விண்ணப்பிக்கலாம்: பால் ஜீவன் பீமா யோஜனா திட்டத்தில் 8 முதல் 12 வயது வரையிலான குழந்தைகள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் போது குழந்தைக்கு என்ன வயது இருக்கிறதோ அதுவே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். மேலும் குழந்தைக்கு 18 வயது ஆகும் வரை இந்த காப்பீடு செல்லுபடியாகும்.
அதாவது, பெற்றோர் தங்கள் 10 வயதுக் குழந்தையைப் பால் ஜீவன் பீமா யோஜனாவில் சேர்க்க விரும்புகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்போது பெற்றோர் தங்களுக்கு அருகில் உள்ள தபால் நிலையத்திற்குச் சென்று விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து தினசரி ரூ.6 டெபாசிட் செய்யத் தொடங்கலாம். குழந்தை 18 வயதை அடையும் முன் எதிர்பாராத விதமாக குழந்தை இறந்துவிட்டால், காப்பீட்டுத் தொகையான ரூ.1 லட்சம் வழங்கப்படும்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications