மழை வெள்ளத்தை வைத்து அரசியல்… உண்மை நிலை என்ன?
சென்னை: இந்த முறையும் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு, சென்னை மக்களை மழை வெள்ளத்திலிருந்து மீட்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு உத்தரவு போடுவதோடு அவர் நின்றுவிடவில்லை. களத்தில் அவரே இறங்கி வேலைகளை வேகப்படுத்தி வருகிறார். இன்று காலை கட்டுப்பாட்டு அறைவரை வந்து நிலைமைகள் குறித்து முழுமையாகக் கள ஆய்வு செய்தார் முதலமைச்சர்.

சொல்லப் போனால் 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளத்திற்குப் பிறகு 19 செ.மீ மழை நேற்று இரவு பதிவாகியுள்ளது. இதை மழை என்று சொல்வதை விட மாமழை என்றுதான் சொல்ல வேண்டும்.
15 மாவட்டங்களின் மழை இன்றும் தொடரும் என்று அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இன்று முதல் டிசம்பர் 4ஆம் தேதி வரை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் ஆகிய 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

"தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரவு முழுக்க தூங்கவில்லை. களத்திலிருந்த எங்களைத் தொடர்புகொண்டு மக்களிடம் இருந்து வரும் புகார்களைக் கேட்டு உடனுக்குடன் தீர்வுகாண அறிவுறுத்திக் கொண்டே இருந்தார்!" என்று அமைச்சர் சேகர்பாபு பேட்டியளித்துள்ளார்.

இவரைத் தொடர்ந்து "சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்த போதிலும், பெரிய அளவில் மழைநீர் தேங்கவில்லை. ஒரு சில இடங்களில் தேங்கிய மழை நீரும் உடனுக்குடன் அகற்றப்பட்டது. இதற்கெல்லாம் காரணம் திமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைதான்" என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.

மாற்று அரசியல் நிலைப்பாட்டில் இருக்கும் நடிகர் எஸ்.வி.சேகர், "எவ்வளவு மழை பெய்தாலும் ஒரு மணி நேரத்துக்குள் வடிந்து செல்லக்கூடிய வழியில் இரவு பகலாக பணியாற்றும் சென்னை கார்பரேஷன் களப் பணியாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் என் நன்றியும் வாழ்த்துக்களும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில், "அன்பார்ந்த சென்னைவாசிகளே.. ரங்கராஜபுரம் இரண்டு சக்கர வாகனங்கள் செல்லும் சுரங்கப்பாதையைத் தவிர, மற்ற அனைத்து சுரங்கப்பாதைகளிலும் இப்போது போக்குவரத்துக்குத் தெளிவாக உள்ளன. மழைநீர் தேங்குவதைத் தடுக்க நேற்றிரவு அயராது உழைத்த அர்ப்பணிப்புடன் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு நன்றி" என்று கூறப்பட்டுள்ளது.

கூடவே கணேசபுரம் சப்வே மழைநீர் தேங்காமல் இருக்கும் காட்சியும் பார்வைக்கு வைத்துள்ளது மாநகராட்சி.
மழையின் தீவிரம் சார்ந்த பட்டியல் கூட மக்களின் பார்வைக்கு வெளியிடப்பட்டுள்ளது. அதில் அதில் அதிகபட்சமாகக் கொளத்தூரில் 62.4 மி.மீட்டரும் அடுத்ததாக அம்பத்தூரில் 54.3 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

டாக்டர் நாயர் சாலையில் உள்ள சப்வேயில் அதிகாலை மழைநீர் அகற்றும் பணியில் மேயர் பிரியா ஈடுபட்ட காட்சிகளைச் செய்தி நிறுவனங்களே படம்பிடித்து காட்டுள்ளன. நேற்று இரவு முழுவதும் அமைச்சர் சேகர்பாபு கொட்டும் மழையில் களத்தில் நின்று மழைநீரை அகற்றியபடி தொலைக்காட்சி அழைப்புகளை ஏற்று தொலைபேசியில் பதிலளித்துக் கொண்டிருந்தார்.
பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அட்டவணையில் ஏறக்குறையை 20 சுரங்கப்பாதைகள் பட்டியலிடப்பட்டுச் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

அதில் கிண்டி சப்வே பெரம்பூர் ஹைரோடு சப்வே என்று இருசக்கர வாகனங்கள் செல்லக் கூடிய ரங்கராஜபுரம் சப்வே மட்டுமே வெள்ளத்திற்காக அடைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. மற்ற வழிகள் எல்லாம் பெரிய நெருக்கடிகள் இல்லாமல் வாகனங்கள் செல்லக் கூடிய அளவே மழை நீர் நின்றுள்ளது.
மாநகராட்சி சொல்வதைப் போல் மழைக்காலங்களில் வழக்கமாக அதிக வெள்ளம் சூழ்ந்து நிற்கும் லயோலா கல்லூரி உள்ள நுங்கம்பாக்கம் சுரங்கப்பாதையில் ஒரு துளி நீர் தேங்கவில்லை.

வழக்கமாக இங்கே மழை நீர் தேங்கினால் அதை அகற்ற 2 நாட்கள் வரை சாதாரணமாக ஆகும். ஆனால், அப்படி இந்த முறை நிற்கவில்லை. அதை நாம் சொல்லவில்லை.
டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகையைச் சேர்ந்த ஊடகவியலாளர் இரவு 12:30க்கு படம் எடுத்து அவரது 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டுள்ளார். 'மாநகராட்சி பணியாளர்களின் மிகச்சிறப்பான வேலை' என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் கொஞ்சம்கூட மழைநீர் தேங்கவில்லை என்பதை சமூக வலைத்தளத்தில் சூரியா என்பவர் புகைப்படங்களுடன் எடுத்துக் காட்டி விளக்கி இருக்கிறார்.
கோட்டூர் நம்மாழ்வார் தெருவில் உள்ள வடிகால் முன்னதாக எப்படி ஆகாயத்தாமரைகளால் சூந்திருந்தது என்றும், அவை இப்போது முழுக்க அகற்றப்பட்டு மழைநீர் தங்குத் தடையில்லாமல் செல்லும் புகைப்படத்தை மாநகராட்சி வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளது. அந்தக் காட்சியை எதிர்க்கட்சிகள் பார்த்தால்கூட மனம் மாறிவிடுவார்கள். அந்தளவு சிறப்பான மாற்றத்தை அடைந்துள்ளது.

இதற்கு இணையாக டிடிபி காலனியில் பகுதி 7இல் இதற்கு முன்னால் மழைநீர் வடிகால் பாதையில் மண்டிக் கிடந்த செடிகளை அகற்றிய புகைப்படமும் அதனால் ஏற்பட்டுள்ள மாற்றமும் வெளிச்சம்போட்டு மக்களுக்கு விளக்கப்பட்டுள்ளது.

இசை என்பவர் அண்ணாநகரில் ஒரு சொட்டு நீர் சாலைகளில் தேங்கவில்லை என்பதை பளீச் என்று காணொளி எடுத்து மக்கள் பார்வைக்கு எடுத்துக் காட்டி இருக்கிறார்.
"கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக நேற்று புறநகர் ரயில் சேவையில் சிறு தடங்கல் ஏற்பட்டது. இன்று காலை முதல் அனைத்து புறநகர் பிரிவுகளிலும் சேவைகள் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளன. சுமுகமான நிலைக்கு நாங்கள் திரும்பியுள்ளோம்" என்று சென்னை தெற்கு ரயில்வே அதிகாரப்பூர்வமாகப் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழைநீரால் பாதிக்கப்பட்ட சாலைகளைச் சரிசெய்யும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் மட்டும் ஈடுபடவில்லை. சென்னை போக்குவரத்து காவல்துறையும் ஈடுபட்டு வருகிறது. அவர்களின் சமூகவலைத்தள பக்கத்தில், "அடிக்கடி வாகனங்கள் செல்வதால் சேதமடைந்த சாலைகளைச் சீரமைக்கும் பணியில் போக்குவரத்து காவல்துறை ஈடுபட்டுள்ளனர். தடையற்ற போக்குவரத்திற்காகப் பல இடங்களில் உள்ள சிக்கல்களைக் கண்டறிந்து சரிசெய்துள்ளோம்" என்று கூறியுள்ளனர்.

நேற்று அதிகமாக மழை கொளத்தூரில் தான் பதிவாகி இருக்கிறது. 62.4 மி.மீட்டர். ஆகவே அங்கே அதிக வெள்ளநீர் ஏற்பட்டது. அதை வைத்து முதல்வர் தொகுதியிலேயே மழைநீர் வடிகால் வசதிகள் இல்லை என எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு பொய்யான பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
ஆனால், இன்று பிரபல தொலைக்காட்சியான புதியதலைமுறை நிருபர் கொளத்தூர் தொகுதியில் நேற்று நின்ற வெள்ள நீரைக் காணவில்லை. முழுமையாக வடிந்துவிட்டது என்பதைக் காட்சியாகப் படம்பிடித்துக் காட்டி இருக்கிறார்.
மழை வெள்ளத்தால் மக்களுக்கு வரும் தொலையைவிட எதிர்க்கட்சிகள் மழையை வைத்துச் செய்யும் அரசியல்தான் மிகவும் எரிச்சல் தருவதாக இருக்கிறது.
-
கடைசிக் காலத்தில் கலைஞர் சிறைப்படுத்தப்பட்டிருந்தாரா? உண்மைக்கு மாறானது.. வைரமுத்து -
மத்திய அரசின் முடிவு.. கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது.. தமிழச்சி தங்கப்பாண்டியன் பதிவு -
“தனது பெயர்ப் பலகையை காப்பாற்றிக் கொள்ள டெல்லிக்கு ‘காவடி’ தூக்குகிறார் எடப்பாடி” - ஸ்டாலின் தாக்கு! -
6ஆம் வகுப்பு முதல் மும்மொழி கொள்கை! இந்தி திணிப்பை கண்டித்து சிபிஎஸ்இக்கு ஸ்டாலின் கண்டனம் -
புதுவையில் ஏப்.6-ல் ராகுல் பிரச்சாரம்! ஸ்டாலினும் மாலையில் பரப்புரை! -
கருணாநிதியை வீட்டுச் சிறையில் வைத்திருந்தேனா? நாக்கில் நரம்பிருக்கா பழனிசாமி? ஸ்டாலின் ஆவேசம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications