மோடி சொன்ன தீபாவளி பரிசு என்ன? "இந்த" பொருட்களின் ஜிஎஸ்டி தான் குறைக்கப்படுகிறது! வெளியான தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரதமர் மோடி இன்று செங்கோட்டையில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றும்போது பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார். குறிப்பாகப் பொதுமக்களுக்குத் தீபாவளி பரிசை மத்திய அரசு கொடுக்கவுள்ளதாகவும் ஜிஎஸ்டி வரி குறைக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். ஜிஎஸ்டி கட்டமைப்பில் மிக முக்கிய மாற்றம் வரவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அவர் சொன்ன மாற்றங்கள் என்ன.. எந்தப் பொருட்களின் வரி குறைகிறது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

இன்று பிரதமர் மோடி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார். பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில், பொதுமக்களுக்கு மிகப் பெரிய தீபாவளி பரிசு காத்திருப்பதாகத் தெரிவித்தார். ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும் எனச் சொன்ன அவர், ஜி.எஸ்.டி அமைப்பில் பெரிய சீர்திருத்தங்களைச் செய்யத் திட்டமிட்டுள்ளதாகக் கூறியிருந்தார்.

What is Diwali Gift that Modi mentioned in independence day speech GST Council may drop 12 slab

பிரதமர் மோடி தீபாவளி பரிசு

பிரதமர் மோடி மேலும் பேசுகையில், "இந்தத் தீபாவளிக்கு ஒரு பெரிய பரிசை வழங்கப் போகிறோம். ஜிஎஸ்டி முறையைக் கொண்டு வந்து வரிகளை எளிதாக்கினோம். இப்போது, அதை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது. நாங்கள் அதைச் செய்துவிட்டோம், மாநிலங்களுடன் கலந்தாலோசித்தோம், மேலும் 'அடுத்த தலைமுறை ஜி.எஸ்.டி சீர்திருத்தத்தை' அறிமுகப்படுத்தத் தயாராக உள்ளோம்" என்று கூறியிருந்தார்.

பிரதமர் மோடியின் இந்தப் பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. ஜிஎஸ்டி வரியில் மாற்றம் தேவை எனப் பலரும் வலியுறுத்தி வந்த நிலையில், பிரதமர் மோடி இதுபோல பேசியிருக்கிறார். பிரதமர் மோடி சொன்ன அந்தத் தீபாவளி பரிசு என்ன.. ஜிஎஸ்டி வரிமுறையில் வரும் சீர்திருத்தம் என்ன என்பது குறித்தும் சில கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது. அது குறித்து நாம் பார்க்கலாம்.

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்

அதாவது செப்டம்பர் மாதத்தில் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் நடைபெற வாய்ப்புள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கூட்டத்தில், முக்கிய வரி சீர்திருத்தங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளன. குறிப்பாக 12% ஜி.எஸ்.டி வரி நீக்கம், ஹெல்த் இன்சூரன்ஸ் மற்றும் ஆயுள் காப்பீட்டுக்கான வரி விகிதங்களை ஒழுங்குபடுத்துதல், அத்தியாவசியப் பொருட்களின் மீதான வரி விகிதங்களில் மாற்றம் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்போது நமது நாட்டில் 5 வரி விகிதங்கள் அமலில் உள்ளது. ஜீரோ சதவிகித வரி, 5%, 12%, 18% மற்றும் 28% என ஐந்து முக்கிய அடுக்குகளாக வரிகள் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் 12% மற்றும் 18% வரிகளில் தான் பல்வேறு பொருட்கள் இடம்பெற்றுள்ளன. சுமார் 21% பொருட்கள் 5 சதவீத வரிப் பிரிவிலும், 19% பொருட்கள் 12 சதவீத பிரிவிலும், 44% பொருட்கள் 18 சதவீத வரிப் பிரிவிலும் வருகின்றன. இந்த வரி அடுக்குகளில் தான் மேஜர் மாற்றம் வர போகிறது.

எந்த பொருட்களுக்கு வரி குறைகிறது!

அதாவது 12% வரி அடுக்கை நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாம். 12% வரியில் உள்ள பொருட்களை 5% மற்றும் 18% பிரிவுகளுக்கு மாற்றவும் ஆலோசித்து வருகிறதாம்.. 12% வரம்பில் இருக்கும் பொருட்கள் பெரும்பாலும் 5% வரம்பிற்கே மாற்ற்பபடும் என தெரிகிறது. இருப்பினும், இதில் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என்றும் தொடர்ந்து ஆலோசனைகள் நடந்து வருவதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன..

அதேபோல இப்போது ஹெல்த் இன்சூரன்ஸ் மற்றும் ஆயுள் காப்பீடுகளுக்கு 18% வரி விதிக்கப்படுகிறது. இருப்பினும், அவை அத்தியாவசியமான இன்சூரன்ஸ் என்பதால் இதற்கான வரிகள் குறைக்கப்பட வேண்டும் எனப் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். அதை ஏற்று இன்சூரன்ஸ் மீதான வரிகளும் குறைக்கப்படும் என தெரிகிறது. இதுபோக அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தப்படும் பொருட்களின் வரிகளைக் குறைக்க அரசு திட்டமிட்டு வருகிறது.

வரிகள் குறையும்

பிரதமர் மோடி மேலும், "இது தீபாவளி பரிசாக அமையும்.. தனிநபர்களுக்கான அத்தியாவசியச் சேவைகளின் வரி கணிசமாகக் குறைக்கப்படும். சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களும் பயனடையும், அன்றாடத் தேவைகளுக்கான பொருட்கள் விலை குறையும், மேலும் இது பொருளாதாரத்திற்கும் ஊக்கமளிக்கும்" என்று பிரதமர் மோடி கூறியிருந்தார்..

ஜி.எஸ்.டி கட்டமைப்பை எளிதாக்குமாறும், வரிச் சுமையைக் குறைக்குமாறும் தொழில் அமைப்புகள் மற்றும் மாநில அரசுகளின் நீண்டகாலமாகக் கோரிக்கை விடுத்து வந்தன. அந்தக் கோரிக்கையை ஏற்றே மத்திய அரசு இப்போது இதைப் பரிசீலனை செய்து வருகிறது. இறுதி முடிவுகள் செப்டம்பர் கூட்டத்தில் எடுக்கப்படும் என்றும், சீர்திருத்தங்கள் தீபாவளிக்கு முன்பாக நடைமுறைப்படுத்தப்பட வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+